கே. நட்ராஜ்
இந்திய திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. நட்ராஜ் (K. Natraj) என்பவர் ஒரு இந்திய நடிகரும் இயக்குநரும் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் மொழி திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் பணியாற்றினார். [2] [3]
தனிப்பட்ட வாழ்க்கை
திரைப்படத் துறை வட்டாரத்தில், இவர் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக பிரபலமானவர். இவரது மகள் ரஜினி, நடிகர் விஷ்ணு விஷாலை மணந்தார் (2011 முதல் 2018 வரை திருமண வாழ்வு நீடித்தது). [4]
தொழில்
தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணியும் எழுத்தாளர் தூயவனும் "டச்டு பை லவ்" என்ற படத்தைப் பார்த்தனர். அதில் எல்விஸ் பிரெஸ்லி ஒரு திரைப்பட விழாவில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார். அப்படம் இவர்களை தமிழில் அதே போன்ற ஒரு கதையை படமாக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. தூயவன் ஒரு மாதத்திற்குள் திரைக்கதையை எழுதி முடித்தார். அவர் மறைந்த எம்ஜிஆரை கதாநாயகனாக நடிக்க வைக்க விரும்பினார், ஆனால் அது முடியவில்லை. தேவர் படங்களில் உதவி இயக்குநர்களில் ஒருவராகப் பணிபுரிந்த கே. நட்ராஜிடம் தூயவன் கதையைச் சொன்னார். கே. நட்ராஜ் அந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டார். ரஜினி அந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்திற்கு அன்புள்ள ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டினர். ரஜினி படத்தில் நடிக்க முதலில் ஆறு நாட்கள் ஒதுக்கினார். பின்னர் படம் நன்றாக வர வேண்டும் என்று விரும்பியதால் 10 நாட்களுக்கு நீட்டித்தார். இந்தப் படம் முழுக்க முழுக்க 300 மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளியில் படமாக்கப்பட்டது. நடிகை லதாவின் சகோதரரும் நடிகை ஸ்ரீப்ரியாவின் கணவருமான ராஜ்குமார் சேதுபதி, அம்பிகாவின் கணவராக ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். மீனா முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றில் தோன்றினார்.[5] 1984 ஆகத்து 3 அன்றய தி இந்து, "இயக்குநராக அறிமுகமான நடராஜ், அநாதைப் பிள்ளைகளாக நடித்த ஆறு பிள்ளைகளின் நடிப்பை இதயத்திற்கு நெருக்கமாகக் கையாண்டதற்காக பாராட்டுகளுக்கு தகுதியானவர்" என்று கூறி, "பாபுவின் படப்பிடிப்பு காட்சிகளை அலங்கரிக்கிறது" என்று முடித்தது. [6]
ரஜினிகாந்தின் திரைப்படக் கல்லூரி நண்பரும், அன்புள்ள ரஜினிகாந்தை இயக்கியவருமான கே. நட்ராஜை, அண்ணாமலையில் உதவி இயக்குநராகப் பணிபுரிய ரஜினி அணுகினார், அதற்கு நட்ராஜ் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். [7] பின்னர் ரஜினி தனது நண்பர்களை அணுகி அவர்களுக்காக ஒரு படம் தயாரிக்க விரும்புவதாக அறிவித்தார். "வள்ளி" படத்தின் கதையை ரஜினியே எழுதினார். பிரியராமன் கதாநாயகியாக அறிமுகமானார், இந்தப் படத்தில் ஹரிராஜும், சஞ்சயும் அறிமுகப்படுத்தப்பட்டனர். ரஜினிக்கு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஆர்வம் இல்லை, ஆனால் அவரது நண்பர்களின் வற்புறுத்தலால் அவர் சிறிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஐந்து நாட்களுக்குள் தனது பகுதியை முடித்தார்.
படப்பிடிப்பு 1993 ஏப்ரலில் தொடங்கியது. இது அலெக்ஸ் நடிகராக அறிமுகமான முதல் படமும் கூட. படப்பிடிப்பு சாலக்குடி, பொள்ளாச்சி மற்றும் செங்குன்றம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. சாமி, சிங்கம் படங்களின் இயக்குனர் ஹரி, இந்தப் படத்தில் உதவியாளர்களில் ஒருவராக இருந்தார்.[5]
Remove ads
திரைப்படவியல்
இயக்குநராக
நடிகராக
தொலைக்காட்சி
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads