சந்தியாகோ கலத்ராவா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தியாகோ கலத்ராவா (ஜூலை 28, 1951) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞராவார். இவரது வடிவமைப்புகள் இன்று உலகம் முழுவதிலும் பரவலான பிரபலம் பெற்றுள்ளன.
Remove ads
தோற்றமும் கல்வியும்
கலத்ராவா ஸ்பெயினிலுள்ள வலென்சியா என்னுமிடத்தில் பிறந்தார். அங்கேயுள்ள கலை மற்றும் கைவினைகள் கல்லூரியிலும், கட்டிடக்கலைக் கல்லூரியிலும் பயின்று பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து 1975 ல் சுவிட்சர்லாந்தின், சூரிச் நகரத்திலுள்ள சுவிஸ் பெடரல் பொறியியல் நிறுவனத்தில் சேர்ந்து குடிசார் பொறியியலில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டுக் கட்டிடக்கலைஞரான லெ கொபூசியே என்பவருடைய செல்வாக்கினால் உந்தப்பட்ட கலத்ராவா, கட்டிடக்கலையில் சிக்கலான வடிவங்களைப் புரிந்துகொள்வதும் அவற்றை உருவாக்குவதும் எப்படி என்பது குறித்து ஆராய்ந்தார். 1981 ல், அவரது முனைவர் பட்டத்துக்கான "வெளிச்சட்டகங்களின் மடிக்கப்படக்கூடிய தன்மை" (On the Foldability of Space Frames) பற்றிய ஆராய்ச்சிகளை நிறைவு செய்துகொண்டு, கட்டிடக்கலை மற்றும் குடிசார் பொறியியலில் தனது தொழிலைத் தொடங்கினார்.
Remove ads
கட்டிடக்கலைப் பாணி
தனித்துவமான, படைப்பாற்றல் சார்ந்த, பெரும் செல்வாக்கு மிக்க கலத்ராவாவின் பாணி, வளைந்து கொடாத பொறியியலின் கோட்பாடுகளும், கட்டிடக்கலையின் கவர்ச்சிமிக்க அழகியல் அம்சங்களும் இசைவுடன் இணைந்த ஒன்றாகும். இவருடைய வடிவமைப்புகளுக்கான வடிவங்களுக்கும் அமைப்புகளுக்குமான கருத்துருக்கள் பெரும்பாலும், இயற்கைச் சூழலிலிருந்து பெறப்பட்டனவாகும். பாலங்கள் முதலிய சில குடிசார் பொறியியல் வேலைத் திட்டங்களுக்கான வடிவமைப்புகளை இவரது வேலைகள் புதிய மட்டத்துக்கு எடுத்துச் சென்றன. இவர் பல தொடர்வண்டி நிலையங்களை வடிவமைத்துள்ளார். ஒளி பொருந்தியனவும், திறந்த அமைப்பும், இலகுவாகப் பயணம் செய்யத்தக்கதாகவும் இவ் வடிவமைப்புகள் அமைந்துள்ளன.
பொதுவாக ஒரு கட்டிடக்கலைஞராகவே அறியப்பட்டாலும், கலத்ராவா ஒரு திறமையான சிற்பியும், ஓவியரும் ஆவார். கட்டிடக்கலை என்பது இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்த கலையே என்பது இவரது கருத்து.
Remove ads
குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்கள்
நிறைவு பெற்றவை

- டிரினிட்டி பாலம், இர்வெல் ஆற்றின் மீதான நடைப்பாலம். இங்கிலாந்து, சல்போர்ட்டில் உள்ளது.
- ஒபெபவும்புருக்கே (Oberbaumbrucke), பெர்லின், ஜெர்மனி
- அலமேதா பாலம் மற்றும் மெட்ரோ நிலையம், வலென்சியா, ஸ்பெயின்
- 1983–1984, ஜேகெம் உருக்குக் பண்டகசாலை, முஞ்ச்விலென் (Munchwilen), சுவிட்சர்லாந்து
- 1983–1985, ஏர்ண்ஸ்டிங் பண்டகசாலை, கோயெஸ்பெல்ட் (Coesfeld), ஜெர்மனி
- 1983–1988, வோலென் உயர் நிலைப் பள்ளி, வோலென் (Wohlen), சுவிட்சர்லாந்து
- 1983–1990, இசுட்டாடிலோபன் தொடர்வண்டி நிலையம் (Stadelhofen), சூரிச், சுவிட்சர்லாந்து
- 1983–1989, லுசேர்னே நிலைய மண்டபம், லுசேர்னே (Lucerne), சுவிட்சர்லாந்து
- 1984–1987, பஃ டி ஃகோடா II பாலம் (Bach de Roda Felipe II Bridge), பார்சிலோனா, ஸ்பெயின்
- 1984–1988, பரன்மட் சமுதாய மையம் (Barenmatte Community Center), சுஹ்ர் (Suhr), சுவிட்சர்லாந்து,
- 1986–1987, தபோரெட்லி அரங்கம் (Tabourettli Theater), பேசெல், சுவிட்சர்லாந்து,
- 1987–1992, பி.சி.இ. இடம் (BCE Place), ரொறன்ரோ, கனடா,
- 1989–1994, டி. ஜி. வி. நிலையம் (TGV Station), லியோன், பிரான்ஸ்
- 1992, புவென்ட்டே டெல் அலமீஜோ (Puente del Alamillo), செவீயா, ஸ்பெயின்
- 1992, மொன்ட்சூயிக் தொலைத்தொடர்புக் கோபுரம் (Montjuic Communications Tower) at the மொன்ட்சூயிக் ஒலிம்பிக் பிளாசா, பார்செலோனா, ஸ்பெயின்
- 1992, World's Fair, Kuwaiti Pavilion, Seville, ஸ்பெயின்
- 1994–1997, காம்போ வொலன்ட்டின் நடைப்பாலம் (Campo Volantin Footbridge), பில்பாவோ, ஸ்பெயின்
- 1996, அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம், வாலேன்சியா, ஸ்பெயின்
- 1996, டெனெர்ஃப் சர்வதேச கண்காட்சிகள் மற்றும் காங்கிரஸ் மையம், சான்டா குரூசு தெ டெனிரீஃபே, ஸ்பெயின்
- 1997-2003, டெனெர்ஃப் ஆடிட்டோரியம், சான்டா குரூசு தெ டெனிரீஃபே, ஸ்பெயின்
- 1998, இஸ்தாசோ டூ ஓரியென்ட் பரணிடப்பட்டது 2006-05-23 at the வந்தவழி இயந்திரம் (Estação do Oriente) அல்லது (கார் டூ ஓரியென்ட் (Gare Do Oriente), லிஸ்பன், போர்த்துக்கல்
- 1998, புவென்ட்டே டி லா முஹெர் (Puente de la Mujer), in the புவெர்ட்டோ மதேரோ (Puerto Madero) barrio of புவெனஸ் ஐரிஸ், ஆர்ஜெண்டீனா
- 2001, மில்வாக்கி கலை அருங்காட்சியகம் (Milwaukee Art Museum), மில்வாக்கி, விஸ்கொன்சின், USA
- 2003, ஜேம்ஸ் ஜோய்ஸ் பாலம் (James Joyce Bridge), லிஃப்பே ஆற்றுக்கு மேலுள்ள பாலம், டப்லின், அயர்லாந்து
- 2004, அதென்சு ஒலிம்பிக் விளையாட்டுத் தொகுதியின் மீள் வடிவமைப்பு, ஏதென்ஸ், கிரீஸ்
- 2004, டேர்ட்டில் குடாவில் உள்ள சன்டயல் பாலம் (Sundial Bridge at Turtle Bay), Redding, California, USA
- 2004, மூன்று பாலங்கள் (ஹார்ப், சிட்டேர்ன், லூட் என்பன.) நெதர்லாந்தின்,ஹார்லெமெமியரின் முக்கியமான கால்வாயின் குறுக்கே உள்ளது.
- 2005, டேர்னிங் டோர்சோ (Turning Torso), மால்மோ, சுவீடன்
கட்டப்படும்/கட்டப்படவுள்ள திட்டங்கள்
- உலக வர்த்தக மையப் போக்குவரத்து மையம், நியூ யோர்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
- அட்லான்டா சிம்ஃபனி மையம், அட்லான்டா, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா
- டி.ஜி.வி. தொடர்வண்டி நிலையம், லியேச், பெல்ஜியம்
- பலாசியோ டெ கொன்கிரசொஸ் (Palacio de Congresos) - மாநாட்டு மாளிகை, ஒவியேதோ, ஸ்பெயின்
- போர்தம் கோபுரம் (Fordham Spire), சிகாகோ, ஐக்கிய அமெரிக்கா
- மார்கிரட் ஹன்ட் ஹில் பாலம் (Margaret Hunt Hill bridge), டாலஸ், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா
Remove ads
விருதுகள்
- 2005 ஏ.ஐ.ஏ தங்கப் பதக்கம்.
கண்காட்சிகள்
2006 மார்ச் 5 ஆம் தேதி முதல் மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் சிறப்புக் கண்காட்சி இடம்பெற்றது.
வெளியிணைப்புகள்
Maps:
Profiles:
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads