சந்திரசேகர கம்பரா

kamber From Wikipedia, the free encyclopedia

சந்திரசேகர கம்பரா
Remove ads

சந்திரசேகர கம்பரா (பிறப்பு: ஜனவரி 2, 1937) ஒரு பிரபல இந்திய கவிஞர், நாடக ஆசிரியர், நாட்டுப்புறவியலாளர், கன்னட மொழியில் திரைப்பட இயக்குநர் ஆவார். மேலும் அம்பியில் (கர்நாடகம்) உள்ள கன்னட பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-துணைவேந்தரும் ஆவார். வினயக் கிருஷ்ணா கோகக் (1983) மற்றும் யு.ஆர்.அனந்தமூர்த்தி (1993) [2] ஆகியோருக்கு பிறகு நாட்டின் முதன்மை இலக்கிய நிறுவனமான சாகித்ய அகாதமியின் தலைவரும் ஆவார். த. ரா. பேந்திரேவின் படைப்புகளைப் போலவே கன்னட மொழியில் தனது நாடகங்களிலும், கவிதைகளிலும் வடக்கு கர்நாடக பேச்சுவழக்கு திறம்பட தழுவியதற்காக அவர் அறியப்படுகிறார்.

விரைவான உண்மைகள் Chandrashekhara Kambara, தொழில் ...

கம்பாராவின் நாடகங்கள் முக்கியமாக நாட்டுப்புற அல்லது புராணங்களைச் சுற்றி தற்காலப் பிரச்சினைகளுடன் ஒன்றிணைந்து,[3] நவீன வாழ்க்கை முறையை அவரது கடினமான கவிதைகளால் ஊக்குவிக்கின்றன. அவர் அத்தகைய இலக்கியத்தின் முன்னோடியாக மாறிவிட்டார்.[4] ஒரு நாடக ஆசிரியராக அவரது பங்களிப்பு கன்னட நாடகத்திற்கு மட்டுமல்ல, பொதுவாக இந்திய நாடகத்துக்கும் குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் அவர் நாட்டுப்புற மற்றும் நவீன நாடக வடிவங்களின் கலவையை அறிந்தார்.[5]

2010 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருது, 2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மேலும், சாகித்திய அகாதமி விருது, இந்திய அரசின் பத்மஸ்ரீ,[6] கபீர் சம்மன், காளிதாஸ் சம்மன் மற்றும் பம்பா விருது உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற பின்னர், கம்பாரா மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா) உறுப்பினராக நியமிக்கப்பட்டார், அதில் அவர் தலையீடுகள் மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார்.[7]

Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

மும்பை மாகாணத்தின் பெல்காம் மாவட்டத்தில் (இன்று கருநாடகாவில் ) கோடகேரி என்ற கிராமத்தில் சந்திரசேகர கம்பரா பிறந்தார். அவர் குடும்பத்தில் மூன்றாவது மகனாக இருந்தார், சகோதரர்கள் பராசப்பா மற்றும் யல்லப்பா ஆகியோர் கிராமத்தில் உள்ள கம்பாரா குடும்பத்தைச் சேர்ந்த சிறிய வீட்டில் இன்னும் வசித்து வருகின்றனர்.[4] சிறுவயதிலிருந்தே கம்பாரா நாட்டுப்புற கலைகள், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் சடங்கு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார்.[1] கன்னட எழுத்தாளர்களில் குமார வியாசர், பசவர், குவெம்பு மற்றும் கோபாலகிருஷ்ண அடிகா ஆங்கில எழுத்தாளர்களில் டபிள்யூ. பி. யீட்சு, வில்லியம் சேக்சுபியர் மற்றும் பெடரிக்கோ கார்சியா லோர்க்கா [8] ஆகியோர் அவருக்கு பிடித்தமானவர்கள்.

தனது சொந்த மாவட்டத்தில் சிவாபூர் கம்பர் மாஸ்டர் என்று பிரபலமாக அறியப்பட்ட கம்பாரா, கோகக்கில் பள்ளிப்படிப்பை முடித்து, லிங்கராஜ் கல்லூரியில் உயர் கல்விக்காக பெலகாவிக்கு திரும்பினார். வறுமை காரணமாக, அவர் பள்ளியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது [8] ஆனால் சவலகி மடத்தில் (தங்குமிடம்) ஜகத்குரு சித்தாரம் சுவாமிஜி கம்பராவை ஆசீர்வதித்தார் மற்றும் அவரது ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளி கல்விச் செலவுகள் அனைத்தையும் கவனித்துக்கொண்டார். அதனால்தான் கம்பாரா தனது பல எழுத்துகளில் அவரை தீர்க்கதரிசியாக மதிக்கிறார்.[4] முதுகலைப் பட்டப்படிப்புக்குப் பிறகு, தார்வாட்டின் கர்நாடக பல்கலைக்கழகத்தில் உத்தர கர்நாடகடா ஜனபாத் ரங்பூமி ("வடக்கு கர்நாடகாவின் நாட்டுப்புற அரங்கம்") பற்றிய ஆய்வறிக்கை செய்தார்.[9]

Remove ads

தொழில்

சிக்காகோ பல்கலைக்கழகத்தில் கற்பிப்பதில் சிறிது காலம் கழித்து, பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்தார் மற்றும் ஃபுல்பிரைட் அறிஞராக இருந்தார் .[1]

12 பிப்ரவரி 2018 அன்று சாகித்திய அகாதமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996 முதல் 2000 வரை புதுடெல்லியின் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா நிறுவனத்தின் தலைவராகவும், 1980 முதல் 1983 வரை கர்நாடக நடகா அகாதமியின் தலைவராகவும் பணியாற்றினார். கன்னட இலக்கியங்களில், அவரது கவிதைகள் மற்றும் நாடகங்களில் கன்னடத்தின் வடக்கு கருநாடக வட்டாரமொழி வழக்கைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

அம்பியில் உள்ள கன்னட பல்கலைக்கழகத்தின் நிறுவனர் துணைவேந்தராக கம்பாரா இருந்தார். கன்னட இலக்கியம் மற்றும் கருநாடக கலாச்சாரம் குறித்த அவரது மகத்தான பார்வை, அதைக் கட்டியெழுப்ப அவர் அர்ப்பணிப்பைக் காட்டிய விதத்தில் பிரதிபலிக்கிறது. கட்டிடக்கலை, கருநாடகாவின் பல்வேறு வகையான கலாச்சாரம் மற்றும் சமுதாயத்தை உள்ளடக்கிய பாடங்களின் தேர்வு, இடத்தின் தேர்வு, ஆசிரிய அல்லது கல்வி நடவடிக்கைகள், அவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரைவு செய்த அறிஞர்கள் மற்றும் அவர் அறிமுகப்படுத்திய கவுரவ டாக்டர் பட்டத்திற்கு பதிலாக நாடோஜா கவுரவ விருது போன்றவை பல ஆண்டுகளாக அவரது இலக்கியப் படைப்புகளினால் உருவானது என்பதைக் காட்டுங்கிறது.[5]

பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக, கம்பாரா தலா மூன்று ஆண்டுகள் இரண்டு முறை பணியாற்றினார். அப்போது மற்ற பாரம்பரிய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது அவர் அதனை ஒரு தனித்துவமான முறையில் வடிவமைக்க முடிந்தது. அவர் துணைவேந்தராக இருந்த காலத்தில் அனைத்து கட்டுமானங்களும் விஜயநகரக் கட்டிடக்கலைக்கு ஒத்த பெரிய கல் கட்டமைப்புகளுடன் மலையடிவாரத்தில் இருந்தன. கன்னட பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஆராய்ச்சி மற்றும் திட்டப்பணிகளின் முடிவுகளை வெளியிடுவதற்காக ஒரு தனி வெளியீட்டு அலகு ஒன்றை உருவாக்கினார்.[10]

கன்னட மொழியுடன் பாடசாலைக் கல்வியை கற்பிக்கும் ஊடகமாக வழங்குவதில் அவர் வலுவான ஆதரவாளர்.[11] இந்த நிலைப்பாட்டிற்கான அவரது நியாயம் என்னவென்றால், தாய்மொழி மட்டுமே ஒரு " அனுபவத்தை " வழங்க முடியும், இது வேறு எந்த மொழியும் கற்றல் மற்றும் கற்றலின் ஒருங்கிணைந்த பகுதியாக மக்களுக்கு "தகவல்களை" மட்டுமே தருகிறது, இது அவர்களுக்கு குறைந்த திறனைக் கொடுக்கிறது.[12] "குழந்தையின் தாய்மொழியில் கல்வியை வழங்குவது ஒரு முக்கியமான பிரச்சினை" என்ற ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் பரிந்துரையுடன் இது ஒத்துப்போகிறது.[13]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads