சித்ரால்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சித்ரால் (Chitral) பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்த சித்ரால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1494 மீட்டர் உயரத்தில், 57 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், இந்து குஷ் மலைத்தொடரில், சித்ரால் ஆற்றின் கரையில் அமைந்த பண்டைய நகரம் ஆகும்.
Remove ads
வரலாறு
சித்ரால் நகரத்தில் கிமு கி மு 1600 முதல் கி மு 500 முடிய காந்தார கல்லறை பண்பாடு நிலவியது. மேலும் சிந்துவெளி நாகரிகம் முதல் பாரசீக ஆட்சி காலங்களில் சித்ரால் நகரம் முக்கிய இடம் வகித்தது.[4][5]
மகாபாரதம் இதிகாசத்தில் கூறப்படும் தராதரர்கள் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆவார்.[6] சித்ரால் நகரம் காம்போஜ நாட்டின் முக்கியப் பகுதியாக இருந்தது என இந்துப் புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது.[7]
கிமு 550 முதல் கிமு 330 முடிய சித்ரால் பகுதி, பாரசீக அகாமனிசியப் பேரரசின் தூர-கிழக்குப் பகுதியாக இருந்தது. சித்ராலி மொழி மற்றும் பண்பாடு பாரசீக அவெஸ்தான் மொழி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் அதிக தாக்கம் கொண்டிருந்தது.[8] கிபி 3ஆம் நூற்றாண்டில் கனிஷ்கர் சித்ரால் பகுதியை குசானப் பேரரசில் இணைத்தார். கனிஷ்கரின் ஆட்சியில் சித்ரால் பகுதியில் பல பௌத்த விகாரைகள், தூபிகள் நிறுவப்பட்டது.[9]
இப்பகுதியில் உள்ள பாறைக் கல்வெட்டுக் குறிப்புகளின் படி, சித்ரால் பகுதியானது கிபி 850 முதல் கிபி 1026 முடிய இந்து ஷாகி வம்சத்தின் 4வது மன்னர் ஆட்சியில் இருந்துள்ளது.[10]
கிபி 1571 முதல் 1947 முடிய சித்ரால் கட்டூர் வம்சத்தின் மன்னராட்சியில் இருந்தது.[11] 1947-முதல் சித்ரால் நகரம், பாகிஸ்தான் நாட்டின் சித்ரால் மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது.[12]
Remove ads
தட்ப வெப்பம்
Remove ads
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads