சிந்தி மக்கள்

From Wikipedia, the free encyclopedia

சிந்தி மக்கள்
Remove ads

சிந்தி மக்கள் (Sindhis) सिन्धी (தேவநாகரி)[17]இந்தோ-ஆரிய மக்களான இவர்களின் தாயகம் தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் ஆகும். இவர்களின் தாய்மொழி சிந்தி மொழி. சிந்தி மக்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியுடன் மிக நெருங்கியத் தொடர்புடையவர்கள்.[18][19]

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்து சமயத்தைப் பின்பற்றும் பெரும்பாலான சிந்தி மக்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்தனர்[20] இசுலாம் பின்பற்றும் சிந்தி மக்கள் பாகிஸ்தானிலேயே தங்கி விட்டனர்.[21][22]

Thumb
1980ல் பாகிஸ்தான் நாட்டின் சிந்தி மக்கள் வாழும் பகுதிகள் (மஞ்சள்நிறத்தில்)
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

சிந்தி மொழி பேசும் சிந்தி மக்கள் கீழ் கண்ட நாடுகளில் வாழ்கின்றனர்.

  1. பாகிஸ்தான் = 3,92, 52,262
  2. இந்தியா = 30,00,000
  3. சவூதி அரேபியா =1,80,980
  4. ஐக்கிய அரபு அமீரகம் = 94,620
  5. அமெரிக்க ஐக்கிய நாடுகள் = 38,760
  6. ஐக்கிய இராச்சியம் = 25,000
  7. மலேசியா = 30,00
  8. பிலிப்பீன்சு = 20,000
  9. ஆங்காங் = 20,000
  10. ஆப்கானித்தான் = 21,000
  11. ஓமன் = 14,700
  12. கனடா = 12,065
  13. சிங்கப்பூர் = 11,860
  14. இந்தோனேசியா = ~10,000
  15. கென்யா = 3,300
  16. ஆஸ்திரேலியா = 2,640
  17. பெலீசு = 1,200 (2011)[12]
  18. செயிண்ட் மார்ட்டின் = 1,000
  19. ஜிப்ரால்ட்டர் = 500

மொழிகள்

பெரும்பான்மையான சிந்தி மக்கள் சிந்தி மொழி மற்றும் இந்தி மொழியையும் மற்றும் ஆங்கிலம் & அரபு மொழிகளைப் பேசுகின்றனர்.

சமயங்கள்

பெரும்பான்மையான சிந்தி மக்கள் இசுலாம், இந்து சமயங்களைப் பின்பற்றுகின்றனர்.

Remove ads

குறிப்பிடத்தக்கவர்கள்

  1. முகம்மது அலி ஜின்னா - பாகிஸ்தான் தலைமை ஆளுநர்
  2. லால் கிருஷ்ண அத்வானி - இந்தியத் துணை பிரதமர் & உள்துறை அமைச்சர்
  3. சுல்பிக்கார் அலி பூட்டோ - பாகிஸ்தான் அதிபர்
  4. ஆசிஃப் அலி சர்தாரி - பாகிஸ்தான் அதிபர்
  5. சுனில் வாஸ்வானி - தொழிலதிபர்
  6. தருண் தஹிலியானி - மகளிர் ஆட்சி வடிவமைப்பாளர்
  7. ஹன்சிகா மோட்வானி - திரைப்பட நடிகை
  8. ரன்வீர் சிங் - திரைப்பட நடிகர்
  9. கியாரா அத்வானி - திரைப்பட நடிகை

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads