சீதா ராமம்
2022இல் வெளியான இந்தியத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீதா ராமம் (Sita Ramam) என்பது 2022 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான வரலாற்றுக் காதல் திரைப்படமாகும். இதை அனு ராகவபுடி என்பவர் எழுதி இயக்கியுள்ளார். வைஜெயந்தி மூவிஸ் மற்றும் சுவப்னா சினிமா தயாரித்துள்ளது. இப்படத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் ( தெலுங்கில் அறிமுகமானவர்), ராஷ்மிகா மந்தண்ணா, சுமந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
Remove ads
கதைச் சுருக்கம்
1964 ஆம் ஆண்டு பின்னணியில், காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் அனாதையான இராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ராம், என்பவர் சீதா மகாலட்சுமி என்பவரிடமிருந்து அநாமதேய காதல் கடிதங்களைப் பெறுகிறார். ராம் சீதாவைக் கண்டுபிடித்து அவனது காதலை முன்வைக்கும் பணியில் ஈடுபடுகிறார்.
தயாரிப்பு
படத்தின் முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி ஏப்ரல் 2021 இல் தொடங்கி ஏப்ரல் 2022 இல் முடிவடைந்தது. ஐதராபாத்து, காஷ்மீர் மற்றும் உருசியாவின் சில பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, பி. எஸ். வினோத் மற்றும் சிரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார். படம் 5 ஆகஸ்ட் 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்தது. திரையங்க வசூலில் ₹78 கோடிக்கு மேல் வசூலித்தது.
Remove ads
நடிகர்கள்
- லெப்டினன்ட் ராமாக துல்கர் சல்மான்
- சீதா மகாலட்சுமியாக மிருணாள் தாக்கூர்
- வகீதாவாக ராஷ்மிகா மந்தண்ணா
- விஷ்ணு சர்மாவாக சுமந்த்
- வெண்ணிலா கிசோர்
- ருக்மணி விஜயகுமார்
- கௌதம் மேனன்
- பிரகாஷ் ராஜ்
- முரளி சர்மா
- ரோகிணி
- சுனில்
- அபிநயா
- பூமிகா சாவ்லா
- ராகுல் ரவீந்திரன்
- அனிஷ் குருவில்லா
- அன்னபூர்ணா
வெளியீடு
இத்திரைப்படம் 5 ஆகஸ்ட் 2022 அன்று தெலுங்கில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[5] படத்தின் இந்திப் பதிப்பு 2 செப்டம்பர் 2022 அன்று வெளியிடப்பட்டது.[6]
படத்தின் எண்ணிம விநியோக உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியது.[7] இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் 9 செப்டம்பர் 2022 முதல் தெலுங்கு மற்றும் தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் பதிப்புகளில் எண்ணிம முறையில் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.[8]
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads