செஞ்சி நாயக்கர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செஞ்சி நாயக்கர்கள் (Nayaks of Gingee) தமிழ்நாட்டின் செஞ்சி நகரத்தை தலைநகராகக் கொண்டு கி பி 1508 முதல் 1649 முடிய ஆட்சி செய்த தெலுங்கு மரபினர் ஆவர்.[1] முன்னர் விஜய நகரப் பேரரசின் செஞ்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரை போன்ற பகுதிகளின் ஆளுநர்களாக விளங்கினர். துவக்கத்தில் வடக்கே நெல்லூர் முதல் கொள்ளிடம் ஆறுவரையிலான பகுதிகள் செஞ்சி நாயக்கர்களின் ஆட்சியில் இருந்தது.[2] பின்னர் விஜய நகர பேர்ரசின் ஆரவீடு மரபினர் வேலூரை தலைமை இடமாக கொண்டு ஆளத் தொடங்கியதும். செஞ்சி நாயக்கரின் ஆட்சி எல்லையானது வாட்டகே பாலாறு, தெற்கே கொள்ளிடம் ஆறு இவற்றுக்கு இடைபட்ட பகுதியில் சுருங்கியது.[3] விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் மதுரை நாயக்கர்கள் மற்றும் தஞ்சை நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆட்சி புரிந்ததைப் போன்று செஞ்சி நாயக்கர் கிருஷ்ணப்ப நாயக்கர் 1509 முதல் தன்னாட்சியுடன் ஆட்சி செய்து வந்தார்.[4] பின்னர் இவரது வழித்தோன்றல்கள் செஞ்சியை கி பி 1649-இல் செஞ்சியை பிஜப்பூர் சுல்தான் கைப்பற்றும் வரை ஆண்டனர்.[5]
Remove ads
செஞ்சி நாயக்கர் தோற்றம்
செஞ்சி நாயக்க அரசை நிறுவியவர் கிருஷ்ணப்ப நாயக்கர் ஆவார்.[6] இவர் கி.பி 1509 தொடக்கம் 1521 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் படைதளபதியான வையப்ப நாயக்கரின் மகனாவார்.[7]
செஞ்சி ஆட்சி செய்த சூரப்ப நாயக்கரின் சகோதரான கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவர் கருநாடக மாநிலத்தில் பேளூர் நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.[8] இவரின் வம்சாவளிகள் விசயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் பேளூர் நாயக்கர்கள் என்ற பெயரில் தற்கால ஹாசன், குடகு பகுதிகளை சுதந்தரமாக ஆண்டனர்.[9]
Remove ads
செஞ்சி நாயக்கர்களின் மரபு
திருக்கோயிலூர் வீரப்பாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில் கல்வெட்டின் படி (கி.பி. 1568) செஞ்சி நாயக்க வம்சத்தை நிறுவிய கிருஷ்ணப்ப நாயக்கர், கவரை சமூகத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[10] மெக்கன்சி கைபீது ஆவணத்தில் செஞ்சி மன்னரான வெங்கடபதி நாயக்கர், கவரை சமூகத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளது.[11]
செஞ்சி நாயக்கர்களின் பட்டியல்
- கிருஷ்ணப்ப நாயக்கர் (1509–1521)[12]
- சென்னப்ப நாயக்கர்
- கங்கம நாயக்கர்
- வேங்கட கிருஷ்ணப்ப நாயக்கர்
- வேங்கடராமா பூபால நாயக்கர்
- திரியம்பக கிருஷ்ணப்ப நாயக்கர்
- வரதப்ப நாயக்கர்
- இராமலிங்க நாயனி வாரு
- வேங்கட பெருமாள் நாயுடு
- பெரிய ராமபத்திர நாயுடு
- இராமகிருஷ்ணப்ப நாயுடு (- 1649)
வரலாற்றாய்வாளர் சி. எஸ். சீனிவாசாச்சாரி கூற்றுப்படி[13]
- வையப்ப நாயக்கர்
- கிருஷ்ணப்ப நாயக்கர்
- அச்சுத விஜய ராமச்சந்திர நாயக்கர்
- முத்தியாலு நாயக்கர்
- வெங்கடப்ப நாயக்கர்
- வரதப்ப நாயக்கர்
- அப்பா நாயக்கர்
ஆட்சிப் பகுதிகள்
வட தமிழ்நாட்டின் தற்போதைய செஞ்சி வேலூர், சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி, நெல்லூர், சித்தூர், சந்திரகிரி ஆகிய பகுதிகள் செஞ்சி நாயங்காரக்களின் ஆளுகையில் இருந்தது.[14] 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேலூர்க் கோட்டையை இழந்தனர்.
வழித்தோன்றல்
செஞ்சியை ஆண்ட நாயக்க மன்னரான துபாகி கிருஷ்ணப்ப நாயக்கரின் வழித்தோன்றலான சங்கரைய நாயுடு, சென்னப்ப நாயக்கன் பாளையத்தின் ஜமீன்தாராகவும், சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[15]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads