தட்சசீலம் (நகரம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தட்சசீலம் (Taxila) (Urdu: ٹيکسلا), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ளது. பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் நகரத்திலிருந்து வடமேற்கே 32 கி.மீ. தொலைவில் தட்சசீலம் நகரம் உள்ளது.
சமசுகிருத மொழியில், பண்டைய தட்சசீலம் நகரத்தை தக்சசீலா என்றும் பாலி மொழியில் தக்கசிலா[2] என்றும் அழைப்பர். பண்டைய தட்சசீலம் நகரத்தில் கிமு 3,360 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதக் குடியிருப்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள், இங்குள்ள ஹத்தியால் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. [3] மகாபாரத இதிகாசத்தை முதன் முதலாக, தட்சசீலம் நகரத்தில் வைத்து வைசம்பாயனர், தன் சீடர்களுக்கு உரைத்ததாக கருதப்படுகிறது. [4][5] பண்டைய உலகப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான தட்சசீல பல்கலைக்கழகம், பண்டைய தட்சசீலம் நகரத்தில் நன்கு செயல்பட்டது.[6][7][8][9][10]
Remove ads
தொல்லியல் களம்
பண்டைய தட்சசீலத்தில் கற்கால குகைகள், தர்மராஜிக தூபி உள்ளிட்ட நான்கு தொல்லியற்களங்களில் பௌத்த விகாரைகள் மற்றும் தூபிகளின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டது.[11] சிதிலமடைந்த பண்டைய தட்சசீல நகரத்தை 1980ல் யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரிய களமாக அறிவித்துள்ளது. [12]
பெயர்க்காரணம்
வெட்டி எடுக்கப்பட்ட கற்களால் இந்நகரம் நிறுவப்பட்டதால், சமசுகிருத மொழியில் தட்சசீலம் எனப்பெயராயிற்று. இராமரின் தம்பி பரதன் தன் மகன் தட்சனின் பெயரால் இந்நகரை நிறுவியதால், சமசுகிருத மொழியில் இந்நகரை தட்சனின் பாறை என்றும் அழைப்பர்.[13]
கிரேக்க புவியியல் அறிஞரான தாலமி வரைந்த உலகப் புவியியல் வரைபடத்தில் தட்சசீலம் நகரத்தை, தக்சீலா எனக் குறித்துள்ளார்.[14]
வரலாறு
துவக்க கால குடியிருப்புகள்
கிமு 3360 முதல் தட்சசீலம் நகரத்தில் மனிதர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்தனர் என்பதை, இந்நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்த தொல்பொருட்கள் மூலம் அறியப்படுகிறது. [15] கிமு 2900 காலத்திய சிந்து வெளி நாகரீகம் மற்றும் ஹரப்பா காலத்திய கட்டுமானங்கள் மற்றும் தொல்பொருட்கள் தட்சசீலம் நகர அகழ்வாய்வின் போது கிடைத்துள்ளது.[15] சிந்து வெளி நாகரீகத்தின் அழிவின் போது, தட்சசீலம் நகரமும் கைவிடப்பட்டுள்ளது.
பின்னர் தட்சசீலம் நகரத்தின் முதல் பெரிய குடியிருப்பு கிமு 1100ல் நிறுவப்பட்டது.[3][16][17][18] கிமு 900ல், தட்சசீலம் காந்தார நாட்டின் தலைநகரான புஷ்கலாவதியுடன் வணிகத் தொடர்புகள் கொண்டிருந்தது என இந்நகரத்தில் கிடைத்த மண்பாண்ட சில்லுகள் மூலம், அறியப்படுகிறது.[19]
மகத நாட்டையும் நடு ஆசியாவையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் பண்டைய நகரங்களான பாடலிபுத்திரம், பெஷாவர், காஷ்மீர், தட்சசீலம், பெஷாவர், காந்தாரத்தின் புஷ்கலாவதி நகரம், கபீசா மற்றும் பாக்திரியா இருந்தது.[20]
பல்வேறு அரச வம்சங்களின் கீழ் தட்சசீலம்
தட்சீல நகரம், பல அரச வம்சங்களின் ஆதிக்கத்தில் இருந்தது.

- அகாமனிசியப் பேரரசு ஆட்சியில் கிமு 516 - கிமு 330
- ஹெலனிய காலம் மற்றும் மௌரியப் பேரரசு [21] ஆட்சியில் - கிமு 323 - கிமு 180
- இந்தோ கிரேக்க நாட்டின் ஆட்சியில் - கிமு 180 - கிபி 10
- குசான் பேரரசு ஆட்சியில் - கிபி 30 - 375
- சாசானியப் பேரரசு ஆட்சியில் - கிபி 224 – 470
வீழ்ச்சி
சீன பௌத்த பிக்குவான யுவான் சுவாங் கிபி 400ல், பண்டைய தட்சசீல நகரத்திற்கு வருகை புரிந்த போது தட்சசீலப் பல்கலைக்கழகம் சிறப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்ததாக தனது பயணக்குறிப்பில் குறித்துள்ளார். [22]
வெள்ளை ஹூணர்களான ஹெப்தலைட்டுகள் ஆட்சியில், கிபி 470ல் காந்தாரம் மற்றும் பஞ்சாப் பகுதிகளை கைப்பற்றும் போது தட்சசீலம் நகரத்தின் பௌத்த விகாரங்கள் மற்றும் தூபிகள் முற்றிலும் அழிக்கப்பட்டது. [23] சீன பௌத்த பிக்குவான யுவான் சுவாங் கிபி 630 மற்றும் 643ல், பண்டைய தட்சசீல நகரத்திற்கு வருகை புரிந்த போது தட்சசீலம் நகரமும், தட்சசீலப் பல்கலைக்கழகமும் சிதிலமடைந்து காணப்பட்டதாக தனது பயணக்குறிப்பில் குறித்துள்ளார்.
அகழாய்வில் பண்டைய தட்சசீல நகரம்
அலெக்சாண்டர் கன்னிங்காம் எனும் பிரித்தானிய தொல்லியல் அறிஞரால், 19ம் நூற்றாண்டின் மத்தியில், சராய் கோலா எனுமிடத்தில், நடத்தப்பட்ட அகழாய்வில், சிதிலமைடந்த பண்டைய தட்சசீல நகரம் கண்டெடுக்கப்பட்டது. தட்சசீலம் அருகே உள்ள தர்மராஜிக தூபியை ஜான் மார்ஷல் எனும் பிரித்தானியர் அகழ்வாய்வு செய்து பல பௌத்த தொல்பொருட்கள் மற்றும் தூபிகள் மற்றும் விகாரைகளை வெளிப்படுத்தினார்.
தட்ப வெப்பம்
Remove ads
பொருளாதாரம்
சுற்றுலாத் துறை

இந்நகரத்தில் தட்சசீல அருங்காட்சியகத்தில் பண்டைய தொல்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்நகரம் பன்னாட்டு பௌத்த யாத்திரைத் தலங்களில் ஒன்றாக உள்ளதால், பன்னாட்டு பௌத்த சமயப் பயணிகளின் வருகையால் சுற்றுலாத் துறை வருவாய் ஈட்டுகிறது.[25] இந்நகரத்தில் தட்சசீல அருங்காட்சியகத்தில் பண்டைய தொல்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.[26]
Remove ads
தட்சசீல நகரத் தொல்பொருட்கள்
- தட்சசீல அகழாய்வில் கிடைத்த கிமு 2ம் நூற்றாண்டின் நாணயம்
- தட்சசீல அகழாய்வில், கிமு 100 காலத்திய இந்தோ கிரேக்க மன்னரின் உருவம் பதித்த நாணயம்
- சௌலியன், உலகப் பாரம்பரியக் களம், தட்சசீலம்
- சௌலியன், பௌத்த நினைவுச் சின்னங்களை வைக்கும் பேழை
- பௌத்த, கிரேக்க மற்றும் இந்துப் பண்பாட்டை விளக்கும் தட்சசீல தூபி
- தட்சசீல தூபியின் அஞ்சல் தலை
- தட்சசீல அகழாய்வில் கிமு 200 - 100 காலத்திய நாணயம், பிரித்தானிய அருங்காட்சியகம்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
