தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செராஸ், தாமான் சன்தெக் பகுதியில் ஒரு நிலத்தடி நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Taman Suntex MRT Station; மலாய்: Stesen MRT Taman Suntex) என்பது மலேசியா, கோலாலம்பூர், செராஸ், தாமான் சன்தெக் (Taman Suntex) பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையம் தற்போது மலேசிய கூட்டரசு சாலை 1 - செராஸ் சாலையின் செராஸ் சென்ட்ரல் பேரங்காடிக்கு (Cheras Sentral Shopping Mall) அருகில் உள்ளது. அத்துடன்
செராஸ்–காஜாங் விரைவுச்சாலை வடக்கு முனையின் கோலாலம்பூர்-சிலாங்கூர் எல்லைக்கு அருகிலும் உள்ளது.
தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம்; செராஸ்–காஜாங் விரைவுச்சாலையில்
(Cheras–Kajang Expressway) உலு லங்காட் பரிமாற்றச் சாலை; காஜாங் பத்து 9 சுங்கச்சாவடி; மற்றும் தாமான் சன்தெக் பகுதிகளில் அமைந்துள்ளது. தாமான் சன்தெக் (Taman Suntex) என்பதில் தாமான் என்பது ஒரு குடியிருப்பு பகுதியைக் குறிப்பதாகும்; மலாய் மொழியில் பூங்கா என பொருள்படும். மலேசியாவில் புறநகர்க் குடியிருப்புப் பகுதிகளை 'தாமான்' என குறிப்பிடுகிறார்கள்.
Remove ads
காஜாங் வழித்தடம்
9 காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.
5 கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[1]
Remove ads
பொது
9 சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் - காஜாங் தொடருந்து நிலையம் வரையில் கட்டப்பட்ட 19 நிலையங்களில் தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையமும் ஒன்றாகும்; 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.[2]
தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். இந்த நிலையம் பெரும்பாலான செராஸ் புறநகர்ப் பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.[3] கட்டுமானத்தின் போது இந்த நிலையம் தற்காலிகமாக பீனிக்ஸ் பிளாசா நிலையம் (Phoenix Plaza Station) என்று பெயரிடப்பட்டது.
Remove ads
நிலைய அமைப்பு
இந்த நிலையம், காஜாங் வழிதடத்தில் உள்ள பெரும்பாலான உயர்மட்ட நிலையங்களைப் போலவே
இந்த நிலையம் இரண்டு நிலைகளைக் கொண்ட காஜாங் எம்ஆர்டி வழிதடத்தின் நிலையான உயர்த்தப்பட்ட நிலைய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், பெரும்பாலான உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போலல்லாமல், இந்த நிலையம் இணைப்புவழி மட்டத்திற்கு மேலே பாதுகாப்பான பக்க நடைமேடைகளைக் கொண்ட ஒரு தீவு மேடையைக் கொண்டுள்ளது. இதேபோன்ற அமைப்பைக் கொண்ட பிற எம்ஆர்டி நிலையங்கள்:
- KA08 சுங்கை பூலோ தொடருந்து நிலையம்
- KG12 பிலியோ டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
- KG35 காஜாங் தொடருந்து நிலையம்
இந்த நிலையத்தில் இரட்டை வழிதடத்துடன் இரண்டு பாதுகாப்பான பக்க நடைமேடைகள்; மற்றும் தரை மட்டத்திற்கும் நடைமேடை மட்டத்திற்கும் இடையில் பயணச்சீட்டு வழங்கும் வசதியுடன் கூடிய ஒற்றை இணைப்புவழி வசதிகள் உள்ளன. நிலையத்தின் அனைத்து தளநிலைகளும் மின்தூக்கிகள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
L2 | நடைமேடை | பக்க நடைமேடை |
நடைமேடை 1 9 காஜாங் (→) காஜாங் தொடருந்து KG35 (→) | ||
நடைமேடை 2 9 காஜாங் (→) குவாசா டாமன்சாரா KG04 (←) | ||
பக்க நடைமேடை | ||
L1 | இணைப்புவழி | கட்டண வாயில்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள், பாதசாரி மேம்பாலம் (→) நுழைவாயில் C வழியாக லெய்சர் மால் மற்றும் எக்கோ செராஸ் மால் |
G | தரை மட்டம் | நுழைவாயில் A (→) நுழைவாயில் B (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) செராஸ் சாலை |
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
இந்த நிலையத்தில் ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. நிலையத்தின் ஊட்டி பேருந்து (Feeder Bus) மையத்திலிருந்து நிலையப் பகுதிக்குள் உள்ள நுழைவாயில் A வழியாக ஊட்டி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Remove ads
பேருந்து சேவைகள்
பிற பேருந்து சேவைகள்
தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம் வேறு சில பேருந்து சேவைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.
இந்த பேருந்து நிறுத்தம் ஜாலான் தாமான் சன்தெக் - ஜாலான் கிஜாங் போக்குவரத்து விளக்கு சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது; நிலையத்தை அடைய சுமார் 500 மீட்டர் நடந்து செல்ல வேண்டும்.
Remove ads
காட்சியகம்
தாமான் சன்தெக் எம்ஆர்டி நிலையம் (2023)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads