தேசிய நெடுஞ்சாலை 183 (இந்தியா)
தென்னிந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 183 (National Highway 183 (India)) இந்தியாவில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவில் கேரளத்தின் உள்ள கொல்லத்தினை தமிழ்நாட்டின் தேனியையுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[2] கொல்லத்திலிருந்து தொடங்கி வடக்கு நோக்கிச் சென்று கோட்டயத்தில் கிழக்கே திரும்பி பெரியார் வனவிலங்கு சரணாலயத்தின் வடக்கு எல்லை வழியாகத் தமிழக எல்லையைக் கடந்து திண்டுக்கல் அருகே முடிவடைகிறது. இது தே. நெ. 83 (கோவை - நாகப்பட்டினம்) உடன் இணைகிறது.
Remove ads
காலக்கோடு
இந்த நெடுஞ்சாலை முன்பு தே. நெ. 220 என்று அழைக்கப்பட்டது.[3][4]
வழித்தடம்
கேரளம்
கொல்லம் → அஞ்சலுமூடு → அடூர் → செங்கனூர் → திருவல்லா → சங்கனாசேரி → கோட்டயம் → பாம்பாடி → கொடுங்கூர் → பொன்குன்னம் → கஞ்சிரப்பள்ளி → பொடிமட்டம் குன்றம் → முண்டகயூர் பெர்க்கமாவண்டி →

தமிழ்நாடு
கூடலூர் → கம்பம் → உத்தமபாளையம், சின்னமனூர் → வீரபாண்டி → தேனி, பெரியகுளம் → தேவதானப்பட்டி → பட்லகுண்டு → திண்டுக்கல்[5]
தேசிய நெடுஞ்சாலை 183A
புதிய நெடுஞ்சாலை 183A (இந்தியா) மார்ச் 2014-ல் அறிவிக்கப்பட்டது. இது பன்மனா டைட்டானியம் சந்திப்பிலிருந்து (கொல்லம் அருகே) தேவலக்கரை - கோவூர் - சாஸ்தாங்கோட்டை - பரணிகாவு - கடம்பநாடு - மணக்காலா - அடூர் - ஆனந்தப்பள்ளி - தட்டையில் - காய்பட்டூர் - ஓமாலூர் - பத்தனம்திட்டா – மயிலாப்ரா – கும்பலாம்பொய்கா – வடசேரிகரை – பெருநாடு – லஹை – பிளாப்பள்ளி – கானமலை – முக்கூட்டுதாரா – எருமேலி – முண்டக்காயம் வழியாகச் செல்கின்றது. இந்த நெடுஞ்சாலை, கோட்டயத்திலிருந்து நீண்ட பாதையை விட, அடூரிலிருந்து, கைப்பட்டூர், பத்தனம்திட்டா வழியாக வண்டிப்பெரியாருக்குச் செல்லும் தூரம் குறைவானப் பாதையாகும்.
சான்றுகோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads