நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு பாஜக தலைவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran, பிறப்பு: 16 அக்டோபர் 1968) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவரும் ஆவார்.
இவர் 1960 அக்டோபர் 16 இல் திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் பிறந்தார்.[1] தற்போது பாரதிய ஜனதா கட்சியிலும், இதற்கு முன்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இருந்தார். இவர் 2025, ஏப்ரல் 12 அன்று பாஜக மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்படி 2025, ஏப்ரல் 13 அன்று பதவியேற்றார்.[2]
Remove ads
அரசியல் வாழ்க்கை
நயினார் நாகேந்திரன், 2001 சட்டமன்றத் தேர்தலில், திருநெல்வேலி தொகுதியிலிருந்து, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] மேலும் 2011 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-2006 வரை நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
நயினார் நாகேந்திரன், 2016 சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் அ. இல சு. இலட்சுமணன் என்பவரிடம் 601 வாக்குகள் பின்தங்கித் தோல்வியடைந்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன், இதே தொகுதியில் இலட்சுமணனை 3800 வாக்குகள் முன்னணியில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.[4] இந்தத் தேர்தல்களில் இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டார்.
நயினார் நாகேந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பினை இழந்தார்.[5][6] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், திருநெல்வேலி தொகுதியிலிருந்து, பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[7]
Remove ads
வருமானத்துக்கு மிஞ்சிய சொத்துக்குவிப்பு வழக்கு
தமிழ்நாட்டின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், சென்னை, கொச்சி, தென் திருநெல்வேலி மாவட்டம் உட்பட, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான 12 இடங்களில் சோதனைகளை நடத்தியது.[8] 2006 ஆம் ஆண்டில், இவர் தமிழ்நாட்டின் அமைச்சராக இருந்தபோது, தனது வருமானத்திற்கு அதிகமாக, தங்க நகைகள், நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கிக் குவித்ததை ஒரு விசாரணை வெளிப்படுத்தியது.[9] திசம்பர் 2010இல், நாகேந்திரன், அவரது மனைவி, நான்கு உறவினர்கள் ஆகியோர் ரூ. 3.9 கோடி மதிப்பிலான வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை குவித்ததாக, ஊழல் தடுப்பு இயக்குநரகம் குற்றப்பத்திரிகைப் பதிந்தது.[9]
Remove ads
போட்டியிட்ட தேர்தல்களும் வகித்த பதவிகளும்
மக்களவைத் தேர்தல்கள்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்
வகித்த பதவிகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads