நாகரா கோயில் கட்டிடக்கலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகரா கோயில் கட்டிடக்கலை என்பது இந்துக் கோயில் கட்டிடக்கலைகளில் ஒன்றாகும். இக்கட்டிடக்கலை வட இந்தியா, மேற்கு இந்தியா, மத்திய இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவில் (வங்காளப் பகுதியைத் தவிர [1], குறிப்பாக மால்வா, இராஜபுதனம் மற்றும் கலிங்கத்தைச்[2]சுற்றியுள்ள பகுதிகளில் பிரபலமாக உள்ளது. நாகரா பாணி என வகைப்படுத்தப்பட்ட கோயில்கள் இராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தராகண்டம் பீகார், மகாராட்டிரம், ஆந்திரப் பிரதேசம் (ஒடிசாவின் எல்லைப் பகுதிகள்) மற்றும் மேற்கு வங்காளம் (தென்மேற்கு மற்றும் சுந்தரவனப் பகுதிகள்) ஆகிய இடங்களில் காணப்படுகிறது..

ஐந்தாம் நூற்றாண்டில், எளிய வளைந்த கோயில் சிகரங்களின் (கோபுரங்கள்) பயன்பாடு கோயில்களில் தொடங்குகிறது. துவக்கத்தில் அத்தகைய கோயில்கள் ஆரம்பகால நாகரா கட்டிடக் கலைப் பாணியாக வகைப்படுத்தப்படுகின்றன. ஆரம்பகால நாகரா பாணி ஏழாம் நூற்றாண்டில் முதன்மை நாகரா பாணியாக மாற்றப்பட்டது.[3]
நாகாராக் கட்டிடக்கலை பாணி இந்து கோயில் கட்டிடக்கலையின் இரண்டு முக்கிய பாணிகளில் ஒன்றாகும், மற்றொன்று திராவிடக் கட்டடக்கலைப் பாணி ஆகும். நாகரா பாணி மூன்று துணை பாணிகளை கொண்டுள்ளது, அவை ஒன்றுக்கொன்று சற்று வேறுபடுகிறது. இத்துணை பாணிகள் அல்லது பள்ளிகளை கலிங்கப் பள்ளி, சோலங்கிப் பள்ளி மற்றும் இராஜபுதனம் பள்ளிகள் என வகைப்படுத்தலாம்.
வட இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த பாணி கோயில் ஒரு எளிய கல் மேடையில் கட்டப்பட்டுள்ளது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிகாரங்கள் கோயில்களில் காணப்படுகின்றன. ஆனால் ஆரம்பகால கோயில்கள் ஒரே ஒரு சிகாரத்தை மட்டுமே கொண்டுள்ளன. கோயில் கருவறை எப்போதும் மிக உயர்ந்த சிகாரத்திற்கு நேர் கீழே அமைந்துள்ளது. நாகரா கடடிடக்கலையில் இந்து கோவில் கட்டிடக்கலையின் திராவிடக் கட்டடக்கலைப் பாணி பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. நாகரா பாணியில் சில கோயில் வளாகங்கள் மற்றும் தனிப்பட்ட கட்டமைப்புகள் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களாக பட்டியலிடப்பட்டுள்ளது.
Remove ads
தோற்றம் மற்றும் உருவாக்க நிலை
நாகரா கோயில் கட்டிடக்கலைப் பாணியானது, குப்தப் பேரரசின் கட்டமைப்பு கோயில்களிலிருந்து உருவானது. சுமார் 5 ஆம் நூற்றாண்டிலிருந்து, நாகரா கோயில் பாணியின் வளர்ச்சி தொடங்கியது. இது மூன்று வகை உருவாக்க நிலைகளைக் கடந்து அதன் தற்போதைய வடிவத்தைப் பெற்றது.[4]
நாகரா பாணி பள்ளிகள்
நாகரா கட்டிடக்கலை பாணி இந்தியாவின் வடக்கு, மேற்கு, நடு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படுகிறது. இந்தப் பாணியில் உள்ள வேறுபாடுகள் காலப்போக்கில் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் சில மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. அவை நாகரா கோயில் கட்டிடக்கலையின் துணை பாணிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாகரா கட்டிடக்கலை பாணியில் சோலங்கிப் பள்ளி, கலிங்கப் பாணி மற்றும் இராஜபுதனப் பள்ளி என மூன்று துணை பாணிகள் உள்ளன.
சந்தேலப் பள்ளி
நாகரா கோயில் கட்டிடக்கலையின்புந்தேல்கண்ட் அல்லது சந்தேலப் பாணி கோயில் கட்டிடக்கலையை புந்தேல்கண்ட் பகுதியை ஆண்ட சந்தேல மன்னர்கள் (10-13ஆம் நூற்றாண்டு) கஜுராஹோவில் நிறுவிய கோயில்கள் மூலம் அறியப்படுகிறது. இந்தப் பாணியில் கட்டப்பட்ட கோயில்கள் சிக்கலான செதுக்கல்களைக் கொண்டுள்ளது. மேலும் அவை உள் மற்றும் வெளிப்புற சுவர்களை அலங்கரிக்கிறது. கோயிலில் உள்ள சிற்பங்கள் வாத்சாயனரின் காம சூத்திரத்தால் ஈர்க்கப்பட்ட காமப்கருப்பொருள்களுக்கு பெயர் பெற்றவை. கோயில்களின் கட்டுமானத்தில் மணற்கற்கள் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[10] சந்தேலப் பள்ளி கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டுகள்:
- இலக்குமணன் கோயில்
- கந்தாரிய மகாதேவர் கோயில்
- கஜூரஹோ சித்திரகுப்தர் கோயில்
- நந்திக் கோயில், கஜுராஹோ
- பந்த் தேவா கோயில்
- விசுவநாதர் கோயில், கஜுராஹோ
- சமணக் கோயில்கள், கஜுராஹோ
- வாமனர் கோயில், கஜுராஹோ
சோலங்கி பள்ளி
சோலங்கிப் பள்ளியானது மேற்கு இந்தியாவில், குறிப்பாக குஜராத் மற்றும் இராஜஸ்தானில் தோன்றியது. இந்த துணை பாணி விரிவடைந்து வளர்ந்தது. இக்கட்டிடக் கலைக்கு சோலங்கி மன்னர்கள் ( 960–1243) ஆதரவையும், ஊக்கத்தையும் வழங்கினர். சோலங்கி துணை-பாணியில் கட்டப்பட்ட கோயிலின் சுவர்களில் சிற்பங்கள் இல்லாமல் இருந்தன. உள்ளேயும் வெளியேயும் கருவறையும், மண்டபமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த உப-பாணியின் கோயில்களுக்கு அடுத்ததாக சூரிய குண்டம் என்று குளம் அமைக்கப்பட்டுள்ளது.
Remove ads
கலிங்கப் பள்ளி
ஒடிசா பள்ளி அல்லது கலிங்க நாகரா கட்டிடக்கலையின் துணை-பாணி கிழக்கு இந்தியாவின் கடலோரப் பகுதிகளில், குறிப்பாக தற்போதைய இந்திய மாநிலமான ஒடிசா மற்றும் ஒடிசாவின் எல்லையில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தில் தோன்றியது. கோயில் கட்டுமானத்தின் இந்தப் பள்ளி அல்லது துணை-பாணி கலிங்கப் பள்ளி அல்லது துணை-பாணி என்றும் அழைக்கப்படுகிறது.[5][6]
- புவனேஸ்வர் லிங்கராஜ் கோயில் வளாகம்
Remove ads
இதனையும் காணக
மேற்கோள்கள்
ஆதார நூல் பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
