பஞ்சாபி முசுலிம்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பஞ்சாபி முசுலிம்கள் (Punjabi Muslims, Punjabi: پنجابی مسلمان (சாமுகி)) கிழக்கு பாக்கித்தானுக்கும் வடக்கு இந்தியாவிற்கும் இடைப்பட்ட பஞ்சாப் பகுதியில் வாழும் மொழி, புவியியல்,சமய வாரியான இனக்குழுவாகும். பஞ்சாபி இனக்குழுவினரில் பெரும்பான்மையாக விளங்கும்,[10] இவர்கள் இசுலாம் சமயத்தைத் தழுவிய பஞ்சாபி மொழி பேசுவோர் ஆவர். 90 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள்தொகை உடைய,[11] பஞ்சாபி முசுலிம்கள் பாக்கித்தானில் உள்ள மிகப் பெரும் இனக்குழுவாகும்; உலகளவில் மூன்றாவது மிகப் பெரிய முசுலிம் இனக்குழு ஆகும்.[12] பஞ்சாபி முசுலிம்களில் பெரும்பான்மையோர் இசுலாமின் சுன்னி இசுலாம் உட்பிரிவைச் சேர்ந்தவர்கள். சிறுபான்மையினர் சியா இசுலாம் உட்பிரிவையும் அகமதியா போன்ற பிற பிரிவுகளையும் தழுவியுள்ளவர்களாவர்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

பஞ்சாபி முசுலிம்களின் தாயகம் பாக்கித்தானிய பஞ்சாப் மாகாணத்தை குவியப்படுத்தியுள்ளது. உலகளவில் அலைந்துசுழன்று குறிப்பிடத்தக்க அளவில் வட அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்கின்றனர்.

Remove ads

குறிப்புகள்

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads