பாக்கித்தான் பொருளாதாரம்

From Wikipedia, the free encyclopedia

பாக்கித்தான் பொருளாதாரம்
Remove ads

பாக்கித்தானின் பொருளாதாரம் (economy of Pakistan) உலகில் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படி 26ஆவது பெரிய பொருளாதாரமாகும்; இது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்திப்படி 38வது பெரிய பொருளாதாரமாகவும் விளங்குகின்றது. 200 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கித்தான் 6வது-பெரிய மக்கள்தொகை உடைய நாடு ஆகும். இதன் ஆள்வீத மொ.தே.உ $4,993 ஆகவுள்ளது; இதனடிப்படையில் உலகில் 133வதாகவும் விளங்குகின்றது. பாக்கித்தானின் முறைசாரா பொருளாதாரம் மொத்தப் பொருளாதாரத்தில் 36%ஆக உருப்பதாக மதிப்பிடப்படுகின்றது;இது ஆள்வீத வருமானத்தில் கண்ணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.[20] வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக பாக்கித்தான் உள்ளது.[21][22][23] 21ஆவது நூற்றாண்டில் உலகின் பெரிய பொருளாதாரங்களாக வளரக்கூடியதாக பிரிக் நாடுகள் உடன் அடையாளப்படுத்தப்படும் அடுத்த பதினொன்று நாடுகளில் ஒன்றாக உள்ளது.[24] இருப்பினும் பல்லாண்டுகளாக போரிலும் சமூக நிலையற்றத்தன்மையாலும் 2013ஆம் ஆண்டு நிலவரப்படி தொடருந்துப் போக்குவரத்து, மின்னனாக்கம் போன்ற அடிப்படைச் சேவைகளில் மிகுந்த குறைபாடுகள் உள்ளன.[25] பகுதியாக தொழில்மயமாக்கப்பட்ட பொருளாதாரம் சிந்து ஆற்றை ஒட்டி வளர்ந்துள்ளது.[26][27][28] முதன்மை ஏற்றுமதிப் பொருட்களாக துணிகள், தோற் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், வேதிப்பொருட்கள் மற்றும் தரைவிரிப்புக்கள்/கம்பளங்கள் உள்ளன.[29]

Thumb
பாக்கித்தானின் தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள் & முக்கியச் சாலைகள்.
விரைவான உண்மைகள் பாக்கித்தான் பொருளாதாரம், நாணயம் ...

பாக்கித்தானின் பொருளியல் வளர்ச்சி சிந்து ஆற்றை ஒட்டியே உள்ளது;[27][30] கராச்சியும் பஞ்சாபின் முக்கிய நகரங்களும் பொருளாதாரத்தின் அச்சுக்களாக உள்ளன. [27] உள்நாட்டு அரசியல் குழப்பங்கள், வளரும் மக்கள்தொகை, நிலையற்ற வெளிநாட்டு மூலதனம் போன்றவற்றால் கடந்த காலங்களில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.[25] வெளிநாடுகளில் வேலை செய்யும் பாக்கித்தானிய பணியாட்கள் அனுப்பும் தொகைகளால் அந்நியச் செலாவணிக் கையிருப்பு நன்றாக இருப்பினும் வளர்ந்துவரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கவலை அளிப்பதாக உள்ளது; இது உடனடியான எதிர்காலத்தில் மொ.தே.உற்பத்தியை பாதிக்கலாம்.[31] பாக்கித்தான் தற்போது பொருளாதார தாராயமயமாக்கலையும் அனைத்து அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கலையும் முன்னெடுத்து வருகின்றது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சமாளிக்க அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும் முயன்று வருகின்றது.[32] 2014இல், அந்நியச் செலாவணி சேமிப்பு $18.4 பில்லியனைக் கடந்தது.[33] இதனால் இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு தொலைநோக்கு மதிப்பீடு நிலையானது என அறிவித்துள்ளது.[34][35]

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads