பீட்டர் ஓ டூல்

பிரித்தானிய நடிகர் From Wikipedia, the free encyclopedia

பீட்டர் ஓ டூல்
Remove ads

பீட்டர் ஜேம்சு ஓ'டூல் (Peter James O'Toole) [2] (2 ஆகத்து 1932 – 14 திசம்பர் 2013) அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல நடிகர்.[3] நாடகக் கலைக்கான ராயல்அகாதமியில் பயின்ற இவர் நாடகங்களில் நடிக்கத் துவங்கி சிறந்த சேக்சுபீரிய நடிகராக புகழ் பெற்றார். தமது முதல் திரைப்படத்தில் 1959ம் இல் நடித்தார். தொடக்க காலத்தில் செய்தியாளராகப் பணியாற்றிய டூல், பின்னர் இங்கிலாந்து கடற்படையில் வானொலி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.[4]

விரைவான உண்மைகள் பீட்டர் ஓ'டூல், பிறப்பு ...

1962 ஆம் ஆண்டு வெளியான லாரன்சு ஆஃப் அரேபியா திரைப்படத்தில் டி.ஈ.லாரன்சாக நடித்து உலகெங்கும் பரவலாக அறியப்பட்டார். இதற்காக அகாதமி விருது பரிந்துரைகளில் முதன்முதலாக இடம் பெற்றார். இவருக்கு மேலும் ஏழு அகாதமி விருது பரிந்துரைகள் கிடைத்தன – பெக்கட் (1964), த லயன் இன் வின்டர் (1968), குட்பை, மிஸ்டர். சிப்சு (1969), த ரூலிங் கிளாஸ் (1972), த ஸ்டன்ட் மேன் (1980), மை பேவரைட் இயர் (1982) மற்றும் வீனசு (2006) – ஆகிய திரைப்படங்களுக்காகவும் இவர் பரிந்துரை செய்யப்பட்டார். அதிகமுறை விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு விருது கிடைக்காதவர் எனும் சாதனையைப் படைத்தார். இவர் நான்கு கோல்டன் குளோப் விருது, ஒரு பாஃப்டா விருது மற்றும் எம்மி விருதுகளைப் பெற்றுள்ளார். 2003 இல் கௌரவ அகாதமி விருது பெற்றுள்ளார்.[5]

Remove ads

இளமை வாழ்க்கை

ஓ'டூல் ஆகத்து 2, 1932 ஆம் ஆண்டு கன்னிமரா, கால்வே கவுன்டி, அயர்லாந்தில் பிறந்தார்.[6][7] ஒரு சிலர் இவர் இங்கிலாந்து லீட்சுவில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையில் பிறந்ததாக கூறுவர்.[8][9] இவருக்கு பட்ரிசியா எனும் மூத்த சகோதரி உள்ளார்.[10] இவர் தெற்கு லீட்சுவில் உள்ள ஹன்ஸ்லெட்டில் வளர்ந்து வந்தார். இவரின் தந்தை பட்ரிக் ஜோசப் தேர்ப் பந்தயப் பணயத் தொழிலர், கால்பந்தாட்ட வீரர் ஆவார்.[11][12][13][14] இவரின் தாய் கான்ஸ்டன்ஸ் ஜேன் எலியத் . இவர் இசுக்கொட்லாந்தில் செவிலியராகப் பணிபுரிந்தார்.[15][16] இவருக்கு ஒரு வயதாக இருக்கும் போது இவரின் குடும்பம் தேர்ப் பந்தயத்தின் முக்கிய நகரங்களான வடக்கு இங்கிலாந்திற்கு ஐந்து வருட சுற்றுலா சென்றனர். இவரும்,இவருடைய சகோதரியும் தந்தையைப் போல கத்தோலிக்க திருச்சபையைப் பின்பற்றினர்.[15][16] ஓ டூல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதனால் கத்தோலிக்க திருச்சபைப் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஹன்ஸ்லெட்டில் உள்ள புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

பள்ளியை விட்டு நீங்கிய பிறகு யார்க்சயர் ஈவ்னிங் போஸ்ட் எனும் இதழில் பயிற்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்படக் கலைஞராகப் பணியாற்றினார். பின் அரச கடற்படையில் சமிக்ஞை அனுப்புபவராகப் பணியில் சேர அழைப்பு வந்தது.ஐரிய மொழி தெரியாத காரணத்தினால் இயக்குநர் எர்னெஸ்ட் பிளைத் இவரை அப்பீஸ் திரையரங்க நிறுவனத்தில் சேர்வதற்கு அனுமதிக்கவில்லை. அதன் பின்பு 1952 முதல் 1954 வரை இலண்டனில் உள்ள நாடகக்கலைக்கான ராயல் அகாதமியில் சேர்ந்தார். இந்த நாடக நிறுவனத்தில் ஆல்பர்ட் ஃபின்னீ, அலன் பேட்ஸ் மற்றும் பிரையன் பெட்ஃபோர்டு ஆகியோரின் நட்பு கிடைத்தது.[17]

Remove ads

பணி வாழ்க்கை

Thumb
பீட்டர் ஓ'டூல் 1968இல் வெளியான லயன் இன் வின்டர் திரைப்பட முன்னோட்டத்தில்

தனிப்பட்ட வாழ்க்கை

ஓ டூல் இலண்டனில் உள்ள நாடகக்கலைக்கான ராயல் அகாதமியில் பயின்று கொண்டிருந்த வேளையில் 1950 ஆம் ஆண்டுத் துவக்க கொரியப் போரில் பிரிட்டிசு அரசின் தலையீட்டை எதிர்க்கும் போராட்டத்தில் பங்குபெற்றார். 1960 இல் வியட்நாம் போர்க்கு எதிராகப் போராடினார்.

ஓ டூல் 1959 ஆம் ஆண்டு வேல்ஸ் நடிகை சியான் பிலிப்சு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கேட் மற்றும் பட்ரிக்கா ஆகிய இருவரும் நடிகைகள் ஆவர். இவர்களுக்கு 1979 ஆம் ஆண்டில் திருமண முறிவு ஏற்பட்டது. இவரைப் பற்றி பிலிப்ஸ் தனது இரு சுயசரிதைகளில் பின்வருமாறு கூறுகிறார். தனது கனவர் குடிபோதையில் மன ரீதியாக தன்னை துன்புறுத்தல் செய்தார் என்றும் தான் தனது இளவயது காதலனுடன் செல்லும் போது பொறாமைப் பிணித்தாக்கம் கொண்டவராக இருந்தார் என்று கூறியுள்ளார்.[18] ஓ டூல் இங்கிலாந்தில் இலண்டன் பெருநகரத்தில் வாழ்ந்து வந்தார். இவரது வாழ்நாள் நண்பராக இருந்த அயர்லாந்து நடிகர் ரிச்சர்டு ஹாரிசு 2002இல் உயிரிழந்தார்.

ஓ டூல் மற்றும் அவரது பெண்தோழியான வடிவழகி கேரன் பிரவுனுக்கும் லார்கன் பாட்ரிக் ஓ டூல் எனும் மகன் உள்ளார்.[19] ஓ டூலுக்கு ஐம்பது வயதாக இருக்கும் போது, லோர்கன் மார்ச் 17, 1983 இல் பிறந்தார். இவர் ஹாரோ பள்ளியில் பயின்றார். தற்போது இவர் நடிகராக உள்ளார். 1996 இல் இங்கிலாந்திலுள்ள வெஸ்ட் ஏக்கரில் குடியேறினார்.[20]

நோயும் மரணமும்

Thumb
கோவென்ட் [தொடர்பிழந்த இணைப்பு] கார்டனில் உள்ள செயின்ட் பால் சர்ச்சில் ஓ'ட்டூல் நினைவு சின்னம்

ஓ'டூல் 1970களில் வயிற்றுப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று மீண்டார். தமது 81ஆவது அகவையில் அறியப்படாத நோயால் இலண்டனில் உள்ள வெலிங்டன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.[21]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads