பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு

From Wikipedia, the free encyclopedia

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
Remove ads

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development, அல்லது ஓஇசிடி, French: Organisation de coopération et de développement économiques, OCDE) 1961ஆம் ஆண்டில் உலக வணிகத்தையும் பொருளியல் வளர்ச்சியையும் தூண்டிட 34 நாடுகளால் நிறுவப்பட்ட ஓர் பன்னாட்டு பொருளியல் அமைப்பாகும். மக்களாட்சி மற்றும் சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை உடைய நாடுகளின் அரங்கமாக தங்கள் நிதிக்கொள்கைகளை பகிர்ந்து கொள்ளுதல், பொதுவான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், நல்ல நடைமுறைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றை உரையாடவும் உறுப்பினர்களின் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் இது உள்ளது.

விரைவான உண்மைகள் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி), தலைமையகம் ...

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மீள்கட்டமைப்பிற்கான மார்ஷல் திட்டத்தை செயல்படுத்த 1948ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பிலிருந்து (OEEC) ஐரோப்பாவில் இல்லாத நாடுகளையும் சேர்த்துக்கொண்டு இந்த அமைப்பு உருவானது. இதன் உறுப்பினர் நாடுகளில் பெரும்பான்மையானவை உயர்வருமானம் உடைய பொருளாதாரங்கள் ஆகும். மனித வளர்ச்சிச் சுட்டெண் மிக உயரிய நிலையில் உள்ள இந்த நாடுகள் வளர்ந்த நாடுகளாகும்.

ஓஇசிடியின் தலைமையகம் பிரான்சுத் தலைநகர் பாரிசில் உள்ளது.

Remove ads

உறுப்பினர் நாடுகள்

ஓஇசிடியில் 32 உறுப்பினர் நாடுகள் உள்ளன; இரு நாடுகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

நடப்பு உறுப்பினர்கள்

தற்போது பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் முப்பத்து நான்கு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

மேலதிகத் தகவல்கள் அங்கத்துவ நாடு, விண்ணப்பம் ...
Remove ads

செயலாளர்கள்

  • 1948–1955  பிரான்சு ரொபேட் மார்ஜொலின்
  • 1955–1960  பிரான்சு ரெனே சேர்ஜென்ர்
  • 1960–1969  டென்மார்க் தோர்கில் கிரிஸ்டென்சன்
  • 1969–1984  நெதர்லாந்து எமிஎல் வான் லெனேப்
  • 1984–1994  பிரான்சு ஜீன்-க்ளயூட் பெயே
  • 1994  சுவீடன் ஸ்டாவன் சோல்மன் (இடைக்கால)
  • 1994–1996  பிரான்சு ஜீன்-க்ளயூட் பெயே
  • 1996–2006  கனடா டொன் ஜோன்ஸ்டன்
  • 2006–தற்போது  மெக்சிக்கோ ஜொஸ் ஏஞ்சல் குரியா

காட்டிகள்

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் உறுப்பினராகவுள்ள நாடுகள் பற்றிய பல்வேறு தரப்பட்ட விபரங்கள் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் நாடு, பரப்பளவு(km²) 2011 ...
  • a Data refer to 2011.
  • b The FSI index supplies no figure for Israel per se, but rather supplies an average (80.8) for "இசுரேல் / மேற்குக் கரை".
  • c OECD total used for indicators 1 through 3; OECD weighted average used for indicator 4; OECD unweighted average used for indicators 5 through 12.
Note: The colors indicate the country's global position in the respective indicator. For example, a green cell indicates that the country is ranked in the upper 25% of the list (including all countries with available data).
Highest quartile Upper-mid (2nd to 3rd quartile) Lower-mid (1st to 2nd quartile) Lowest
Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads