உலக அமைதிச் சுட்டெண்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உலக அமைதிச் சுட்டெண் என்பது நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அமைதித்தன்மையை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவீடாகும். இது பொருளாதார அமைதி நிறுவனத்தால் (Institute for Economics and Peace) உருவாக்கப்பட்டு, உலகளாவிய அமைதிக்கான வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அளவீடாகும். Think tank என்ற அமைப்பு இந்த அளவீட்டை கண்டு பிடிப்பதற்கான தரவுகளை சேகரித்தலிலும், Economist Intelligence Unit என்ற நிறுவனம் அவற்றை ஒழுங்குபடுத்தி ஆவணப்படுத்துவதிலும் உதவுகின்றன. இந்தப் பட்டியல் முதன் முதலாக மே 2007 இல் வெளியானது. பின்னர் அதைத் தொடர்ந்து, சூன் 2008 இலும், அண்மையில் சூன் 2010 இலும் வெளியிடப்பட்டது.


இதுவே உலக நாடுகளை அமைதி தொடர்பில் தரவரிசைக்குட்படுத்திய முதலாவது அறிக்கை என அறியப்படுகின்றது. இது அவுஸ்திரேலிய தொழில்முனைவரான ஸ்டீவ் கில்லேலியாவின் சிந்தனையில் உதித்து, ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் நாயகமான கோபி அன்னான், தலாய் லாமா இன்னும் பலரின் ஆதரவைப் பெற்று உருவானதாகும். உட்காரணிகளாக உள்நாட்டு வன்முறை, குற்றங்களின் அளவும், வெளிக்காரணிகளாக போர், இராணுவ செயற்பாடுகளுக்கான செலவுகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
Remove ads
உலக அமைதிச் சுட்டெண் தரவரிசையில் நாடுகளின் பட்டியல்
குறைந்த சுட்டெண் கொண்ட நாடுகளே கூடிய அளவு அமைதி பேணும் நாடுகளாகும். பச்சை நிறத்தில் உள்ளவை கூடிய அமைதி நாடுகளின் 20% இலும், சிவப்பு நிறத்தில் உள்ளவை குறைந்த அமைதி நாடுகளின் 20% இலும் உள்ளன.[1]
Remove ads
இங்கேயும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads