மஞ்சள் தொண்டைக் கொண்டைக் குருவி
ஒரு தென்னிந்தியப் பறவை இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மஞ்சள் தொண்டைக் கொண்டைக் குருவி (yellow-throated bulbul (Pycnonotus xantholaemus) என்பது கொண்டைக்குருவி குடும்பத்தைச்சேர்ந்த, பேசரின் பறவை ஆகும். இவை தென்னிந்திய தீபகற்பத்தில் உள்ள அகணிய உயிரியாகும். இவை செங்குத்தான, பாறைக் குன்றுகளின் உச்சியில் வாழக்கூடியன. இவற்றின் வாழிடங்கள் கிரானைட் சுரங்கங்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. இந்த உயிரினத்தின் அழைப்புகள் வெண்புருவ கொண்டலாத்தியுடன் மிகவும் ஒத்திருக்கிறது. இவற்றின் தோற்றமும் வெண்புருவ கொண்டலாத்திபோல இருந்தாலும் இதை சிலர் வெண்புருவக் கொண்டலாத்தியாக நினைத்துக் குழப்பிக் கொள்வதுண்டு. இதன் தலை, தொண்டை, போன்றவற்றில் உள்ள மஞ்சள் நிறம் இவற்றை வேறுபடுத்துவதாக உள்ளன.
Remove ads
உயிரியல் வகைப்பாடு
மஞ்சள் தொண்டைக் கொண்டைக் குருவியை முதலில் தாமஸ் சி. ஜெர்டன் என்பவர் பிரோகிபஸ் பேரினத்தில் வகைபடுத்தினார். (பைக்கோனொனாட்டசின் வேறு பெயர்). பின்னர் மறு வகையாக்கத்தின்போது இக்சோசின் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டது.[4] இது மீண்டும் பைக்கோனொனாட்டஸ் பேரினத்திலேயே மீண்டும் வகைப்படுத்தப்பட்டது.
விளக்கம்
மஞ்சள் தொண்டைக் கொண்டைக் குருவி பறவையானது கொண்டைக்குருவி அளவில் சுமார் 20 செ. மீ. நீளம் இருக்கும். அலகும் கால்களும் கறுப்பாகவும், விழிப்படலம் ஆரஞ்சுப் பழுப்பாகவும் இருக்கும். கொண்டையற்ற இதன் உடல் சாம்பலும் மஞ்சளுமாகத் தோற்றம் அளிக்கும். உச்சந்தலை, மோவாய், தொண்டை போன்றவை நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். தொடைகளும், வாலடியும் மஞ்சளாகவும், இறக்கைகள் பழுப்பாகவும், வால் பழுப்பாக மஞ்சள் முனைகளுடன் காட்சியளிக்கும்.
Remove ads
பரவலும் வாழிடமும்
செஞ்சிக் கோட்டையில் மஞ்சள் தொண்டை சின்னானின் அழைப்பு
இந்தப் பறவைகளின் வாழிடமானது பாறைகள் நிறைந்த மலைகளின் மேற்பகுதி ஆகும். பெரும்பாலும் தென்னிந்தியாவில் குறிப்பாக கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சில இடங்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் வாழிடங்களான இந்த மலைக் காடுகள் கிரானைட் சுரங்கங்கள், காட்டுத் தீ, மேய்ச்சல் பொன்றவற்றால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.[5] இதனால் இந்தப்பறவையானது முன்பு காணப்பட்ட பல இடங்களிலிலிருந்து அற்றுப்போய்விட்டது.[6]

இவை காணப்படும் சில இடங்களாக அறியப்பட்டவை நந்தி மலை,[7] ஹார்ஸ்லி மலைகள்,[8] செஞ்சி,[9] ஏற்காடு[10] வல்லிமலை (வேலூர்), ஜவ்வாது மலை[11] பிலிகிரி ரங்கநாத மலை[12] போன்றவை ஆகும். இந்த இனமானது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஆனைமலையின் சில பகுதிகளில் காணப்படுவதாக அறியப்படுகிறது.[13][14][15][16] இது வாழும் பகுதிகளின் வட எல்லையானது ஆந்திரத்தின் நல்லமலைக் குன்றுகள் எனப்படுகிறது[17] ஆனால் இவை வாழும் பகுதியானது வடக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒடிசாவரை இருக்கலாம் என்ற ஐயம் உள்ளது.[18][19]
நடத்தை மற்றும் சூழலியல்
இந்தப் பறவை கூச்ச சுபாவத்தைக் கொண்டிருப்பதால், புதர்களில் மறைந்து இருக்கும். இதன் வெண்புருவ கொண்டலாத்தை ஒத்திருக்கும் குரலைக் கொண்டு இதை அறியலாம். இவை பூச்சிகள் மற்றும் உண்ணிச்செடி, காட்டுமிளகு, செம்புளிச்சான், மணித்தக்காளி, சந்தனம், ஆல் அத்தி, உள்ளிட்ட தாவரங்களின் பழங்களையும் உண்ணும். வெயில்கால மாலை நேரங்கள் மற்றும் வறண்ட பருவங்களில் இவை நீர் குடிக்கவும், குளிக்கவும் குளங்களுக்கு வரும்.[20]
இவற்றின் இனப்பெருக்க காலம் சூன் முதல் ஆகத்து வரை ஆகும். இவை சிறிய மரமுட்களைக் கொண்டு பாறை இடுக்கில் கூடுகட்டும். கூட்டில் இரண்டு முட்டைகள் இட்டு 20 நாட்கள் அடைகாக்கின்றன. குஞ்சுகள் 13 நாட்களுக்குப் பிறகு பறக்கத் துவங்குகின்றன.[21]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads