மட்டக்களப்பு மாநகர சபை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மட்டக்களப்பு மாநகர சபை (Batticaloa Municipal Council, BMC) கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு நகரை நிர்வாகம் செய்துவரும் உள்ளூராட்சிச் சபை ஆகும்.[1] மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குள் அடங்கும் பகுதிகள் இந்த மாநகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.[2] இது வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இது 20 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, மட்டக்களப்பு மாநகரசபைக்கு 20 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 18 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 38 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[3][4]
Remove ads
வரலாறு
1884 இற்கும் 1932 இற்கும் இடையில் மட்டக்களப்பு ஒரு உள்ளூராட்சி வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டது.[5] 1933 இல் எட்டு வட்டாரங்களைக் கொண்ட நகரசபையாக இந்த நகரம் தரம் உயர்த்தப்பட்டது.[5] 1944 இல் வட்டாரங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டது. 1956 இல் 14 ஆக அதிகரிக்கப்பட்டது. 1967 இல் நகரசபை மண்முனை வடக்கு - கிழக்கு (வடக்கு பகுதி) கிராமசபையுடன் இணைக்கப்பட்டு நகரசபையாக உயர்த்தப்பட்டது.[5] அப்போது இது 19 வட்டாரங்களைக் கொண்டிருந்தது. இதன் முதலாவது முதல்வராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை இருந்தார்.
1974 இல் சபை கலைக்கப்பட்டு, 1983 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறும் வரை சிறப்பு ஆணையர்களால் நிர்வகிக்கப்பட்டது.[5] தேர்தலுக்குப் பிறகு சபையின் அனைத்து உறுப்பினர்களும் பதவியில் இருந்து விலகினர். 1994 இல் உள்ளூர் தேர்தல்கள் நடைபெறும் வரை, மட்டக்களப்பு மாநகரசபை மீண்டும் சிறப்பு ஆணையர்களால் நிர்வகிக்கப்பட்டது.[5] 1988 இல் வலையிறவு கிராமசபையை இது உள்வாங்கியது. 1999 மார்ச் 31 அன்று சபை கலைக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு தேர்தல்கள் நடைபெறும் வரை சிறப்பு ஆணையர்கள் நகரத்தை நிர்வகித்தனர்.
Remove ads
வட்டாரங்கள்
மட்டக்களப்பு மாநகரசபைக்கு பின்வரும் 20 வட்டாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன:[6]
சபை முதல்வர்கள்
மட்டக்களப்பு மாநகர சபையின் தலைவர் "முதல்வர்" என அழைக்கப்படுகிறார்.[5]
தலைவர்கள்
- ஜி. என். திசவீரசிங்கம் - 1935
- எம். சின்னையா - 1936-38
- என். எஸ். இராசையா - 1939-41
- எஸ். ஏ. செல்வநாயகம் - 1942-44
- கே. வி. எம். சுப்பிரமணியம் - 1945-47
- ஜே. எல். திசவீரசிங்கி - 1951-53
- டி. வேலுப்பிள்ளை - 1954-56
- ஏ. எஸ். டி. கனகசபை - 1957-1959
முதல்வர்கள்
- செல்லையா இராசதுரை - 1967-68
- ஜே. எல். திசவீரசிங்கி - 1968-70
- கே. தியாகராசா - 1971-73
- ஈ. அம்பலவாணர் - 1983
- செழியன் பேரின்பநாயகம் - 1994-99
- சிவகீதா பிரபாகரன் - 2008 - 2013
- சரவணபவன் தியாகராஜா - 2018 - 2023
தேர்தல் முடிவுகள்
1983 உள்ளூராட்சித் தேர்தல்
18 மே 1983 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[7]
பதவியேற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு சபையின் அனைத்து உறுப்பினர்களும் பதவியில் இருந்து விலகினர்.[5][8] அல்ஜசீரா, ஆசியாஃபவுண்டேஷன், டெய்லி மிரர் ஆகியவை இதற்கு உள்நாட்டுப் போர் காரணம் என்று கூறுகின்றன;[9][10] ராய்ட்டர்ஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை இதற்கு விடுதலைப் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பு அழைப்புகள் என்று கூறுகின்றன,[11][12] 1983 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூர் அரசாங்கங்களையும் இடைநிறுத்தியதே இதற்குக் காரணம் என்று தமிழ்நெட் கூறுகிறது.[13]
2008 உள்ளூராட்சித் தேர்தல்கள்
2008 மார்ச் 10 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[14]
சபை முதல்வராக சிவகீதா பிரபாகரன் (தமவிபு), சபை துணை முதல்வராக எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா (தமவிபு) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[15]
2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்
2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 20 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 18 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 38 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வருமாறு:[6]
மட்டக்களப்பு மாநகரசபைக்குத் முதல்வராக தியாகராசா சரவணபவன் (இதக), துணை முதல்வராக கந்தசாமி சத்தியசீலன் (இதக) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[6]
2025 உள்ளூராட்சித் தேர்தல்கள்
2025 மே 6 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[16] 20 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 14 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 34 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2025 சூன் 11 இல் நடைபெற்ற மட்டக்களப்பு மாநகர சபைக்கான முதல்வர் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் போட்டியின்றித் தெரிவிவு செய்யப்பட்டார். துணை முதல்வராக வைரமுத்து தினேசுகுமார் (இதக) தெரிவு செய்யப்பட்டார்.[17]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads