மலாய மொழிகள்

மலாய-பொலினீசிய மொழி துணைக் குடும்ப மொழி From Wikipedia, the free encyclopedia

மலாய மொழிகள்
Remove ads

மலாய மொழிகள் (மலாய்: Bahasa-bahasa Melayu; ஆங்கிலம்: Malayic Languages; சீனம்: 马来语群) என்பது ஆஸ்திரோனீசிய மொழிகள் (Austronesian), மலாய-பொலினீசிய மொழிகள் (Malayo-Polynesian) ஆகிய மொழிக் குடும்பங்களில் ஒரு மொழிக்குழு ஆகும்.[1] இதில் மலாய் மொழி என்பது தனி ஒரு மொழியைக் குறிப்பிடுவதாகும். மலாய மொழிகள் (Malayic Languages) என்பது மலாய் மொழி சார்ந்த மொழிக் குழுவைக் குறிப்பிடுவதாகும்.

விரைவான உண்மைகள் மலாய மொழிகள்Malayic LanguagesMalayic Bahasa-bahasa Melayu ...

மலாய மொழிகள் குடும்பத்தில் மலாய் மொழியே முதனமை மொழியாக விளங்குகிறது. மலாய் மொழிக்கு புரூணை, சிங்கப்பூர், இந்தோனேசியா நாடுகளில் தேசியத் தகுதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் தேசிய மொழியாகவும், சிங்கப்பூர் நாட்டின் நான்கு அரசு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒரு மொழியாகவும் இருந்து வருகின்றது. இந்த மொழியை மலாக்கா நீரிணையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில், 40 மில்லியன் மக்கள், தங்களின் பூர்வீக மொழியாக பேசி வருகின்றனர். [2][3] அதே வேளையில் மலேசியாவில் சிறப்புரிமை பெற்ற தேசிய மொழியாக உள்ளது.

Remove ads

மலாய் மொழி

மலாய் மொழிக்கு வேறு பல சிறப்புரிமைப் பெயர்களும் உள்ளன. பகாசா கெபாங்சான், பகாசா நேசனல் என்று சில மலேசிய மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சிங்கப்பூர், புருணை நாடுகளில் பகாசா மலாயு என்றும்; மலேசியாவில் பகாசா மலேசியா என்றும்; இந்தோனேசியாவில் பகாசா இந்தோனேசியா என்றும்; அழைக்கப்படுகின்றது.

சுமத்திரா, சரவாக், போர்னியோ தீவின் மேற்கு கலிமந்தான் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மலாய் மொழியைப் பேசி வருவதால், அந்த மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை 215 மில்லியனாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.[4]

Remove ads

பொது

மலாய மொழிகள் குடும்பத்தில் மலாய் இன மக்கள் பேசும் சாம்பி மலாய் மொழி (Jambi Malay) கெடா மலாய் மொழி (Bahasa Melayu Kedah) ஆகிய உள்ளூர் மொழிகளும் அடங்கும்.

இந்தோனேசியா சுமத்திராவைச் சார்ந்த மினாங்கபாவு மொழி; போர்னியோவைச் சார்ந்த பஞ்சார் மொழி, இபான் மொழி; தாய்லாந்து தென்மேற்கு கடற்கரையைச் சார்ந்த ஊரோக் லாவாய் மொழி ஆகிய வெளிநாட்டு மொழிகளும் மலாய் மொழிகள் குடும்பத்தில் அடங்குகின்றன.[5]

மொழிகள்

மலாய மொழிகள் சுமத்திரா, சரவாக், போர்னியோ, மலாய் தீபகற்பம், ஜாவா மற்றும் தென் சீனக் கடல், மலாக்கா நீரிணையில் அமைந்துள்ள பல தீவுகளில் பேசப்படுகின்றன.

போர்னியோ

  • பாமாயோ மொழி - (Bamayo language)
  • பஞ்சார் (மொழி) - (Banjar language)
  • பெராவு மொழி - (Berau Malay)
  • புரூணை மலாய் மொழி - (Brunei Malay)
  • புக்கிட் மலாய் மொழி - (Bukit Malay)
  • கென்டாயான் மொழி - (Kendayan language)
  • கெனிஞ்சால் மொழி - (Keninjal language)
  • கூத்தாய் மலாய் மொழி - (Kutai Malay)
  • சரவாக் மலாய் மொழி - (Sarawak Malay)
  • இபான் மொழி - (Iban language)
  • ரெமுன் மொழி - (Remun language)
  • முவாலாங் மொழி - (Mualang language)
  • செபெருவாங் மொழி - (Seberuang language)

தீபகற்ப மலேசியா

மேலும் காண்க

மேற்கோள்கள்

நூல்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads