மாதம்பாக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாதம்பாக்கம் (ஆங்கிலம்:Madambakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தில் இருக்கும் தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும்.
Remove ads
இப்பகுதியில் பழமை வாய்ந்த சோழர் கால தேனுபுரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகில் சிறப்பு வாய்ந்த சித்தர் பீடம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா மார்ச் மாதத்தில் 3 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
Remove ads
தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்
3 நவம்பர் 2021 அன்று இப்பகுதியானது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
அமைவிடம்
மாதம்பாக்கம் பகுதி, காஞ்சிபுரத்திலிருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 11 கி.மீ. தொலைவில் உள்ள தாம்பரத்தில் உள்ளது. இதன் கிழக்கில் பள்ளிக்கரணை 11 கி.மீ.; மேற்கில் சேலையூர் 3 கி.மீ.; வடக்கில் செம்பாக்கம் நகராட்சி 2 கி.மீ. மற்றும் தெற்கில் அகரம் ஊராட்சி 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
பகுதியின் அமைப்பு
8.02 ச.கி.மீ. பரப்பும், 609 தெருக்களையும் கொண்ட இப்பகுதி தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதி 8,069 வீடுகளும், 31,681 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பகுதியின் எழுத்தறிவு 92.47% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 971 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12.85°N 80.05°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 29 மீட்டர் (95 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads