மாநிலங்களவைத் தேர்தல்கள் 2002
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2002 (2002 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2002ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். 17 மாநிலங்களிலிருந்து முறையே 56 உறுப்பினர்களையும், கர்நாடகாவிலிருந்து நான்கு உறுப்பினர்களையும்,[1] ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து நான்கு உறுப்பினர்களையும்,[2] மற்றும் இரண்டு மாநிலங்களிலிருந்து 11 உறுப்பினர்களையும் [3] மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க இத்தேர்தல்கள் நடைபெற்றன.[4][5]
Remove ads
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2002ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
2002-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 2002-2008 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2008ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
Remove ads
இடைத்தேர்தல்
2002 ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.
- 25.02.2002 அன்று உறுப்பினர் ககன் தாசு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக, 02.04.2004 அன்று பதவிக்காலம் முடிவடைந்ததாலும், உறுப்பினர் பல்விந்தர் சிங் பூந்தர் பதவி விலகியதாலும், திரிபுரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் காலியிடத்திற்கு 30/05/2002 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[6]
- 30/05/2002 அன்று உத்தரப் பிரதேசம் மற்றும் சார்கண்ட் மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மக்களவை உறுப்பினர் முகமது ஆசம் கான் பதவிக்காலம் 09.03.2002 அன்றும் தயானந்த் சஹாய் 19.03.2002 அன்று பதவி விலகியதால் இத்தேர்தல்கள் நடைபெற்றன.[6]
- சார்க்கண்டு சட்டமன்றத் தேர்தல் காரணமாக ஷிபு சோரனின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதி 2002 ஆம் ஆண்டு[7] முடிவடைவதோடு, சார்க்கண்டில் காலியாக உள்ள இடத்துக்கு 01/07/2002 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
- மகாராட்டிராவில் சூலை 1, 2002 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இது சூன் 12 2002 அன்று மரணமடைந்த முகேஷ்பாய் ஆர் படேலின் காலியாக உள்ள இடத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. இவரது பதவிக்காலம் ஏப்ரல் 02, 2008 வரை இருந்தது.[8] இடைத்தேர்தலில் பி. சி. அலெக்சாண்டர் சுயேச்சையாகப் போட்டியிட்டு 29/07/2002 அன்று உறுப்பினரானார்.
- 20.8.2002 அன்று பதவிக் காலம் முடிவடையும் நிலையில், டி. என். சதுர்வேதி பதவி விலகியதால், உத்தரப்பிரதேசத்தில் காலியாக உள்ள இடத்துக்கு 18/11/2002 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[9]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
