ராஜபார்வை (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராஜபார்வை (Raja Paarvai)[2] என்பது 22 மார்ச்சு 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பகல் 1 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் காதல் நாடகத் தொடர் ஆகும்.[3][4] இது 'சஞ்சர் பாத்தி' என்ற வங்காள மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

விரைவான உண்மைகள் ராஜபார்வை, வகை ...

இந்த தொடர் 'ரிஷி' என்பவர் இயக்கத்தில் 'முன்னா ரஹ்மான்' மற்றும் 'ரெஸ்மி ஜெயராஜ்' ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க 'கேத்ரின் சோபா' என்பவர் ரேடேபைனிங் என்டேர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.[5] இந்த தொடர் 18 திசம்பர் 2021 அன்று 207அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

Remove ads

கதை சுருக்கம்

ஆனந்த் என்ற பணக்கார வீட்டு இளைஞன் ஒரு விபத்துக்குப் பிறகு பார்வை இழக்கிறான். தனது முத்தமகனின் மகனின் விபத்திற்கு இரண்டாவது மகனான அரவிந்த் தான் கரணம் என அவன் மீது கோபமும் வெறுப்பும் காட்டும் தாய் மகாலட்சுமி. ஆனால் அண்ணன் தம்பி இருவரும் மிகவும் பாசமானவர்கள் ஒரு நாள் கூட தம்பியை பிரியாத ஆனந்த். இப்படி இவர்கள் வாழ்க்கை சென்றுகொண்டு இருக்கும் தரு வாயில் சாரு என்ற நடுத்தர குடும்பத்து பெண் மீது காதல் கொள்ளும் ஆனந்த். இவனின் வாழ்வில் சாரு வந்த பிறகு நடக்கும் மௌனம் சார்ந் காதலை இந்த தொடர் விளக்குகின்றன.

Remove ads

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • முன்னா ரஹ்மான் - ஆனந்த்
    • மகாலட்சுமி மற்றும் விஸ்வநாதனின் மகன். அரவிந்தின் அண்ணா. ஒரு விபத்தில் கண் பார்வையை இழக்கின்றான். சாரு மீது காதல் கொள்கின்றான்.
  • ரெஸ்மி ஜெயராஜ் - சாரு
    • சந்திரனின் மூத்த மகள்,பார்வதியின் சகோதரி.
  • விகாஷ் சம்பத்[6][7] - அரவிந்த்
    • மகாலட்சுமி மற்றும் விஸ்வநாதனின் இளைய மகன். அண்ணன் ஆனந்த் மீது அளவு கடந்த பாசம் கொண்டவன். அமிர்தாவை காதலிக்கிறான்.

சாரு குடும்பத்தினர்

  • கீர்த்தி விஜய் - பவித்ரா
    • சந்திரன் மற்றும் கோகிலாவின் மகள், சாருவின் சகோதரி, விசாலட்ச்சியின் எதிரி. அக்கா மீது மிகுந்த பாசம் கொண்டவள்.
  • கிரிஷ் - சந்திரன்
    • கோகிலாவின் இரண்டாவது கணவன், சாரு மற்றும் பவித்ராவின் தந்தை.
  • கவிதா - கோகிலா
    • சந்திரனின் இரண்டாவது மனைவி, பவித்ராவின் தந்தை, சாருவின் வளர்ப்பு தாய்.

ஆனந்த் குடும்பத்தினர்

  • ஆர்த்தி ராம்குமார்[8] - மகாலட்சுமி விஸ்வநாதன்
    • விஸ்வநாதனின் மனைவி, ஆனந்த், அரவிந்த் மற்றும் ஆர்த்தியின் தாய்.
  • சிவன் சீனிவாசன் - விஸ்வநாதன்
    • மகா லட்சுமியின் கணவன், ஆனந்த், அரவிந்த் மற்றும் ஆர்த்தியின் தந்தை.
  • ஷர்னிதா ரவி - ஆர்த்தி
    • மகாலட்சுமி மற்றும் விஸ்வநாதனின் ஒரே மகள், ஆனந்த் மற்றும் அரவிந்தின் சகோதரி.

துணைக் கதாபாத்திரங்கள்

  • யாழினி ராஜன் - அமிர்தா (அரவிந்தின் காதலி)
  • மகேஷ் - பாலாஜி (கோகிலாவின் சகோதரன்)
  • ரேவதி பிரியா[9] - விசாலாட்சி
    • விஸ்வநாதனின் சகோதரி, ராகுலின் தாய்.
  • மாஸ்டர் தீபக் - ராகுல்
  • ரேவதி சங்கர்
  • ஹரி கிருஷ்ணன்
  • கார்த்திக் - மாறன்
  • தரிசு ரியேய் - வந்தானா
  • தீபா நேத்ரன்
  • கிருபா - சாதனா
  • சுதா
  • விக்னேஷ் - வாசு
Remove ads

நடிகர்களின் தேர்வு

நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்த 'ரெஸ்மி ஜெயராஜ்' என்பவர் இந்த தொடரின் மூலம் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் நடிக்கின்றார். இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் தொடர் இதுவாகும்.[10] இவருக்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகர் 'முன்னா ரஹ்மான்' என்பவர் நடிக்கின்றார். இவர் இந்த தொடரில் நடிப்பதற்காக சந்திரலேகா[11] என்ற தொடரில் இருந்து விலகி இந்த தொடரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.[12]

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மிகக் குறைந்த மதிப்பீடுகள் ...

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads