ரெம்பிரான்ட்

டச்சு ஓவியர் From Wikipedia, the free encyclopedia

ரெம்பிரான்ட்
Remove ads

ரெம்பிராண்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் (Rembrandt Harmenszoon van Rijn )/ˈrɛmbrænt, -brɑːnt/ [2](ஜூலை 15, 1606அக்டோபர் 4, 1669) ஒரு நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சு ஓவியர், அரிப்புவகை அச்சுகள் செய்பவர். இவர் ஐரோப்பாவின் தலைசிறந்த ஓவியர், அரிப்பு அச்சுசெய்பவர்களின் ஒருவராகக் கருதப்படுகின்றார். வரலாற்று நோக்கில் டச்சு ஓவியர்களிலேயே தலை சிறந்தவராகக் கருதப்படுகின்றார்[3] இவருடைய படைப்புகள் வெளிவந்த காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் டச்சின் பொற்காலம் எனப் புகழ்கின்றனர்.

விரைவான உண்மைகள் ரெம்பிராண்ட் வேன் ரைன், பிறப்பு ...

இளமையிலேயே தன் கலையில் புகழ் பெற்றிருந்தும் பிற்காலத்தில் தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில இன்னல்களினால் பொருளாதார நலிவிற்கு ஆளானார்.

Remove ads

வாழ்க்கை

ரெம்பிரான்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் [4] (Rembrandt Harmenszoon van Rijn ) சூலை 15,1606 ஆம் ஆண்டு லைடனில் பிறந்தார். தற்போது அது நெதர்லாந்தில் உள்ளது. இவருடைய பெற்றோருக்கு இவர் ஒன்பதாவது குழந்தை .[5] இவருடைய பெற்றோர்கள் சற்று வசதி படைத்தவர்களாக இருந்துள்ளனர். இவருடைய தந்தை அரவைத்தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய தாயாரின் பெற்றோர்கள் அடுமனை வைத்திருந்தனர். இவருடைய ஓவியத்தின் மையக் கருவாகச் சமயம் இருந்தது. இவருடைய தாயார் ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர் என்றும் இவரின் தந்தை டச்சு கிறிஸ்துவ மறுமலர்ச்சி சபையைச் சார்ந்தவராகவும் இருந்துள்ளனர். இவருடைய அனைத்து பணிகளிலும் கிறித்துவ சமய தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் இவர் எந்த சபையைச் சார்ந்தவர் என்பது பற்றிய ஒரு தெளிவான சான்றுகள் இல்லை

ரெம்பிரான்ட் லைடன் பல்கழைக்கழகத்திற்குச் சென்ற போதிலும் அவர் வரைதல் கலை மீதே அதிக ஆர்வம் செலுத்தினார், ஆதலால் தான் அவர் ஒரு பிரபல்யமான ஓவியராக வந்தார். 1631 ஆம் ஆண்டில் வாழ்க்கை நடத்த ஆம்ஸ்டர்டம் நகருக்குச் சென்றார், ஏனெனில் அங்கிருந்த மக்கள் சிலர் தமது உருவப்படங்களை வரைந்து தருமாறு கோரிக்கை வைத்ததால் அங்கு சென்றார். 1634 ஆம் ஆண்டில் சசிகா வன் உலென்பேர்க் (Saskia van Uylenberg) என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர், எனினும் மூன்று பிள்ளைகள் இளைமையிலேயே இறந்து விட்டனர். அவர்களில் 1641 ஆம் ஆண்டில் பிறந்த டிடஸ் (Titus) எனும் பிள்ளையே முதியவனாகும் வரை உயிருடன் இருந்தான். ரெம்பிரான்டின் மனைவி சசிகா டிடஸ் பிறந்து ஒரு வருடத்திற்கு பின் காச நோயால் 1642 ஆம் ஆண்டில் இறந்துவிட்டாள்.

சசிகா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தபோது பணியமர்த்தப்பட்ட செவிலியர் ரெம்பிரான்டின் காதலியாக மாறினார். ஆனால் அவள் ரெம்பிரான்டிற்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி குற்றம் இழைத்தாள். ரெம்பிரான்ட் சசிகாவிற்குக் கொடுத்த நகையை வைத்து வேலை செய்யுமிடமொன்றில் சேர்ந்து கொண்டார்.

பின்பு ரெம்பிரான்ட் அவரது வேலையாளான ஒரு இளம் பெண்ணுடன் வசித்துவந்தார். அவளின் பெயர் ஹென்ட்ரிக்ஜே ஸ்டொஃபெல்ஸ் (Hendrickje Stoffels) என்பதாகும். அப்பெண் கோர்னெலிஆ (Cornelia) எனும் மகளையும் பெற்றெடுத்தாள். இறுதியாக 1669 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் திகதி மரணமடைந்தார்.

Remove ads

படைப்புக்கள்

மேலதிகத் தகவல்கள் படம், தலைப்பு ...
Remove ads

காட்சி வரிசை

சுய உருவப்படம்

ஓவியங்கள்

தாளில்

மேற்கோள்களும் அடிக்குறிப்புக்ளும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads