பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் என்பது பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட பதவி ஆகும். தேசிய செயற்குழு மற்றும் மாநிலங்களின் செயற்குழு உறுப்பினர்களால் தேசியத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். பொதுவாக தேசியத் தலைவரை கட்சியின் மூத்த தலைவர்களின் ஆசியுடன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேசியத் தலைவர் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும். கட்சி விதிகளின்படி ஒருவரை தொடர்ந்து இருமுறைக்கு மேல் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது.[1] கட்சியின் தேசியத் தலைவர் பிரதமர் பதவி அல்லது மத்திய அமைச்சர் போன்ற அரசுப் பதவிகளை ஏற்க இயலாது. அவ்வாறு அரசுப் பதவியை ஏற்க வேண்டுமானால் கட்சிப் பதவியை துறக்க வேண்டும்.[2] தேசியத் தலைவராக ஒருவர் தேர்தெடுக்கப்பட வேண்டும் எனில் குறைந்த பட்சம் தொடர்ந்து 15 ஆண்டுகள் கட்சி உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.[1]
பாரதிய இளைஞர் அணி, பாரதிய மகளிர் அணி, பாரதிய விவசாயிகள் அணி, பாரதிய தொழிலாளர்கள் சங்கம் போன்ற அணித் தலைவர்களை தேசியத் தலைவர் நியமனம் செய்கிறார்.[1]
1980-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி நிறுவப்பட்ட பிறகு அடல் பிகாரி வாச்பாய் கட்சியின் முதல் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986-ஆம் ஆண்டில் லால் கிருஷ்ண அத்வானி இரண்டாவது தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித் சா உள்ளிட்ட மொத்தம் 11 பேர் தேசியத் தலைவர்களாக செயல்பட்டுள்ளனர். 20 சனவரி 2020 முதல் ஜெகத் பிரகாஷ் நட்டா தேசியத் தலைவராக உள்ளார்.[5]
Remove ads
பாஜக தேசியத் தலைவர்கள் பட்டியல்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads