2008 ஒலிம்பிக் செய்தித் தொகுப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இப்பக்கத்தில் சீனாவின் பெய்ஜிங் நகரில் இடம்பெறும் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய நிகழ்வுகள், போட்டி முடிவுகள் உள்ளன.[1][2][3]
ஆகஸ்ட் 6
- உதைப்பந்தாட்டம் - பெண்கள்
ஆகஸ்ட் 7
- உதைப்பந்தாட்டம் - ஆண்கள்
- A பிரிவில் தற்போதைய சம்பியன் ஆர்ஜெண்டீனா ஐவரி கோஸ்ட் அணியை 2–1 என்ற கணக்கில் வென்றது..
- D பிரிவில் இத்தாலிய ஆண்கள் அணி ஹொண்டுராஸ் அணியை 3–0 கணக்கில் வென்றது.
ஆகஸ்ட் 8
- சீன நேரப்படி இரவு 8:00 மணிக்கு (UTC+8), நான்கு மணி நேர அதிகாரபூர்வ ஆரம்ப நிகழ்வுகள் பெய்ஜிங்கில் ஆரம்பமாயின. அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் பூட்டின், பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சார்கோசி, ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் உட்பட 80 நாடுகளின் தலைவர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.
1ம் நாள்: ஆகஸ்ட் 9
- குறி பார்த்துச் சுடுதல் - பெண்கள் 10 மீ கைத்துப்பாக்கி
- செக் குடியரசின் கத்தரீனா எம்மொன்ஸ் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார். பெண்களுக்கான ஒலிம்பிக் சாதனையையும் முறியடித்தார். ரஷ்யாவின் லியுபோவ் கால்க்கினா வெள்ளிப் பதக்கத்தையும், குரொவேசியாவைச் சேர்ந்த சிஞ்சேசானா பேஜ்சிச் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். [தொடர்பிழந்த இணைப்பு]
- பாரம்தூக்குதல் - பெண்கள் 48 கிகி
- மக்கள் சீனக் குடியரசின் சென் சீசியா தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இதுவே பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் சீனா பெற்ற முதலாவது பதக்கம் ஆகும். துருக்கியின் சிபெல் ஒஸ்கான், தாய்வானின் சென் வெய் லிங் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முறையே பெற்றனர். [தொடர்பிழந்த இணைப்பு]
- குறி பார்த்துச் சுடுதல் - ஆண்கள் 10 மீ கைத்துப்பாக்கி
- மக்கள் சீனக் குடியரசின் பாங் வெய் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். தென் கொரியாவின் ஜின் ஜொங்-ஓ, வட கொரியாவின் கிம் ஜொங்-சூ வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முறையே பெற்றனர். பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- மிதிவண்டி ஓட்டப்பந்தயம் ஆண்கள்
- ஸ்பெயினின் சாமுவேல் சான்செஸ் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இத்தாலியின் டேவிட் ரெபெலின், சுவிட்சர்லாந்தின் ஃபாபியன் கான்செல்லாரா முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர். [தொடர்பிழந்த இணைப்பு]
- ஜூடோ - பெண்கள் 48 கிகி
- ருமேனியாவின் அலீனா டுமீட்ரு தங்கப் பதக்கத்தைப் பெற்றார். கியூபாவின் யனெட் பேர்மோய் வெள்ளிப் பதக்கத்தையும், ஆர்ஜெண்டீனாவின் பவுலா பரெட்டோ, மற்றும் ஜப்பானின் ரியோக்கோ டானி ஆகியோர் வெண்கலத்தையும் பெற்றனர்.
- ஜூடோ - ஆண்கள் 60 கிகி
- தென் கொரியாவின் சோய் மின் ஹோ தங்கப்பதக்கத்தையும், ஆஸ்திரியாவின் லூட்விக் பாய்ஸ்ச்சர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றனர். உஸ்பெகிஸ்தானின் ‘'ரிஷோட் சோபிரொவ், நெதர்லாந்தின் ரூபன் ஹூக்ஸ் ஆகியோர் வெண்கலத்தையும் பெற்றனர்.
Remove ads
2ம் நாள்: ஆகஸ்ட் 10
- உதைப்பந்தாட்டம்:
- ஆர்ஜெண்டீனா, பிரேசில், இத்தாலி ஆகிய அணிகள் காலிறுதி ஆட்டத்துக்குத் தெரிவாயின. பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
Remove ads
3ம் நாள்: ஆகஸ்ட் 11
- குறி பார்த்துச் சுடுதல் - ஆண்கள் 10 மீ துப்பாக்கி
- இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தைப் பெற்றார். மக்கள் சீனக் குடியரசின் ஜூ சீனான், பின்லாந்தின் ஹென்ரி ஹாக்கினென் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முறையே பெற்றனர். தனி நபர் ஒலிம்பிக் விளையாட்டில் முதன் முறையாக ஒரு இந்தியர் தங்கப் பதக்கத்தை பெற்றார். [தொடர்பிழந்த இணைப்பு] பரணிடப்பட்டது 2008-08-13 at the வந்தவழி இயந்திரம்
Remove ads
4ம் நாள்: ஆகஸ்ட் 12
- நீச்சல்:
- அமெரிக்க வீரர் மைக்கல் பெல்ப்ஸ் 200மீ freestyle போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அதிக ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற உலக சாதனை படைத்தார்.
- Canoeing:
Remove ads
5ம் நாள்: ஆகஸ்ட் 13
- சீருடற்பயிற்சிகள்:
- பதக்கம் பெற வேண்டுமென்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட வயதுக்கும் குறைவான வீராங்கனைகளை சீனா களமிறக்குவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. சீன அணியில் இடம்பெற்ற 6 பேரில் கெசின் கே (16), யு யுவான் ஜாங் (17), யிலின் யாங் (17) என வயதுச் சான்றிதழ் வழங்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். உண்மையில் இவர்களுக்கு 13 இலிருந்து 14 வயது வரை தான் இருக்குமென அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. பதக்கம் கிடைக்காத அதிருப்தியில் அமெரிக்கா புலம்புவதாக சீனா தரப்பில் பதிலடி கொடுத்தது. பரணிடப்பட்டது 2008-08-19 at the வந்தவழி இயந்திரம்
Remove ads
6ம் நாள்: ஆகஸ்ட் 14
- மற்போர்:
- 84கிகி போட்டியில் ஆர்மீனியாவின் ஆரா ஆபிரகாமியன் வெண்லப்பதக்கம் பெற்றார். ஆனால் பதக்கம் வழங்கப்படும் போது அவர் மேடையை விட்டு கீழே வந்து பதக்கத்தைக் தூக்கி வெளியே வீசினார். அத்துடன் நடுவர்களையும் உத்தியோகத்தர்களையும் கடுமையாகச் சாடினார்.
Remove ads
7ம் நாள்: ஆகஸ்ட் 15
- மேசைப்பந்தாட்டம்:
- சிங்கப்பூர் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டதில் 1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அந்நாடு ஒரு ஒலிம்பிக் பதக்கத்தைப் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
Remove ads
8ம் நாள்: ஆகஸ்ட் 16
- தட கள விளையாட்டுக்கள்:
- ஜமெய்க்காவின் உசேன் போல்ட் 100மீ விரைவோட்டத்தில் 9.69 வினாடிகளில் ஓடி முடித்து தங்கப் பதக்கம் பெற்றார். இது ஓர் உலக சாதனையும் ஆகும்.
- நீச்சல்:
- அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ் 100 மீ butterfly போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டி ஒன்றில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் மார்க் ஸ்பிட்ஸ் உடன் முன்னணியில் உள்ளார். பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
Remove ads
9ம் நாள்: ஆகஸ்ட் 17
- டென்னிஸ்:
- ஸ்பெயினின் ரஃபயெல் நதால் 6-3, 7-6 (7-2), 6-3 என்ற கணக்கில் சிலியின் பெர்னாண்டோ கொன்சாலசை வென்று தங்கப் பதக்கம் பெற்றார்.
பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
15ம் நாள்: ஆகஸ்ட் 23
- தட கள விளையாட்டுக்கள்:
- சூடான் தனது முதலாவது ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. இஸ்மைல் அகமது இஸ்மைல் ஆண்களுக்கான 800 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
- டைக்குவாண்டோ:
- கியூபாவின் ஏஞ்செல் மாட்டொஸ் ஆட்ட நடுவரைத் தாக்கியதால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ஆயுள்காலத் தடை விதிக்கப்பட்டது.
16ம் நாள்: ஆகஸ்ட் 24
- நிறைவு விழா:
- பெய்ஜிங் ஒலிம்பிக் நிறைவு விழா உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணிக்கு ஆரம்பமாகி 9.55 மணிக்கு நிறைவடைந்தது.
வெளி இணைப்புகள்
- பேய்ஜிங் ஒலிம்பிக் செய்திகள் தமிழில் பரணிடப்பட்டது 2008-08-10 at the வந்தவழி இயந்திரம் - சீன வானொலி நிலையம் தமிழ்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads