அப்பன்திருப்பதி
மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அப்பன்திருப்பதி (Appanthirupathi) என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், வெள்ளியங்குன்றம் ஊராட்சியில் அமைந்துள்ளது. அப்பன்திருப்பதி, மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 625301; தொலைபேசி குறியீடு எண் 04549 ஆகும். இங்கு சிறீநிவாசப் பெருமாள் கோயில் உள்ளது.[1] மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது.
Remove ads
அமைவிடம்
மதுரை - அழகர் கோவில் செல்லும் சாலையில், மதுரையிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 404 வீடுகள் கொண்ட அப்பன்திருப்பதி வருவாய் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 1,554 ஆகும். ஒடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 170 (3.73%) ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழைந்தகள் 170 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 76.73% ஆகும். இக்கிராமத்தின் மொத்த வேளாண் மற்றும் இதர தொழிலாளர்கள் 705 ஆகும்.[2] அப்பன்திருப்பதியில் தமிழ், தெலுங்கு மற்றும் சௌராஷ்டிர மொழிகள் பேசப்படுகிறது.
Remove ads
அப்பன்திருப்பதி அருகே அமைந்த குடியிருப்புகள்
- வெள்ளியங்குன்றம்
- சாந்தி நகர்
- பூண்டி
- எம்.ஜி.ஆர். நகர்
- மாத்தூர் விலக்கு நகர்
- அழகாபுரி
- அண்டமான்
- உடைகுளம்
- தோப்பு
- வெ. புதூர்
- சவலக்கராயன்
- கொல்லன்குளம்
- அழகாபுரி
- கள்ளந்திரி
- தூயனேரி
- இருக்கலைநத்தம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads