அமராவதிபுதூர்

From Wikipedia, the free encyclopedia

அமராவதிபுதூர்map
Remove ads

அமராவதிபுதூர் (ஆங்கிலம்: Amaravathipudur) இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. இது காரைக்குடியின் புறநகர்ப் பகுதி ஆகும். காரைக்குடி-தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை 210 (NH-210) இல் தேவகோட்டை இரஸ்தாவிற்கு அடுத்து அமைந்துள்ளது. இவ்வூர் பேருந்து நிலையத்தை உள்ளூர்வாசிகள் உசிலாண்டி என்பர்.

விரைவான உண்மைகள்

கவிஞர் கண்ணதாசன் இவ்வூரில் உள்ள சுப்பிரமணியம் செட்டியார் குருகுலத்தில் எட்டாம் வகுப்பு வரைப் படித்தார்.[4]

Remove ads

வயிநாகரம் குடும்பத்தார்

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274இல் 200இற்கும் அதிகமான தலங்களில் திருப்பணிகள் செய்துள்ளனர்.[5] இவர்களுள் குறிப்பிட்டதக்கவர்கள் அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தார்.

இக்குடும்பத்தைச் சார்ந்த வயி. நாக. இராம. நாகப்ப செட்டியார் 19ஆம் நூற்றாண்டு மத்தியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பழுது பார்த்து 1877இல் குடமுழுக்கு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[6]

காட்டுச் சிவன் கோயில்

காட்டுச் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் வாழவந்தநாயகி உடனாய வந்தருளீசுவரர் கோயில் அமராவதிபுதூரிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் நடுக்காட்டில் அமைந்துள்ளது.

காந்தி சமதர்ம பாடசாலை

இது விடுதலைப் போராட்ட வீரர் பிச்சப்பா சுப்பிரமணியத்தால் 1926இல் தொடங்கப்பெற்ற பள்ளிக்கூடம்.

Thumb
காந்தி சமதர்ம பாடசாலை

சங்கரபதிக்கோட்டை

Thumb
சங்கரபதிக்கோட்டையின் சிதிலமடைந்த காட்சி.

200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சங்கரபதிக்கோட்டை (குருகுலத்தின் பின்புறம் உள்ள பெரும் காட்டுப்பகுதியில்) அமராவதிபுதூரில் அமைந்துள்ளது. இதனை 18 ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவரின் படைத்தலைவராக இருந்த மருது சகோதரர்கள் (சின்னமருது மற்றும் பெரியமருது) ஆங்கிலேயர் படைகளை எதிர்த்த போது இந்த சங்கரபதிக்கோட்டையிலேயே ஆங்கிலேயர்களால் மருது சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.[7]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads