அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையம்
அம்பாங் பார்க் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Ampang Park LRT Station; மலாய்: Stesen Ampang Park; சீனம்: 安邦购物中心站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
இந்த எல்ஆர்டி நிலையம், அம்பாங் சாலையின் கிளானா ஜெயா வழித்தடத்தில் கடைசி நிலத்தடி நிலையமாகும். இதன் பின்னர் இந்தத் தடம் மீண்டும் தரைக்கு மேலே செல்கிறது.
Remove ads
பொது
இந்த நிலையம் சிட்டி வங்கியின் (Citibank) மலேசியத் தலைமையகத்திற்கு அருகில் உள்ளது. அத்துடன் அமெரிக்க தூதரகம், சிங்கப்பூர் உயர் ஆணையம், கனடிய உயர் ஆணையம் மற்றும் பிரித்தானிய உயர் ஆணையம் ஆகியவை இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன. துன் ரசாக் சாலைப் பகுதியில் உள்ள இந்த இடம் 'தூதரக வளாகம்' என்றும் அழைக்கப்படுகின்றது.[3]
இந்த எல்ஆர்டி நிலையத்திற்கு அருகில் மற்றும் ஒரு நிலையம் உள்ளது. அந்த நிலையம் அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
Remove ads
அமைவு
மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து கோம்பாக் எல்ஆர்டி நிலையம் வரை இயங்கும் புத்ரா எல்ஆர்டி அமைப்பின் (PUTRA LRT System) இரண்டாம் கட்டமாக இந்த நிலையம் 1 சூன் 1999 அன்று திறக்கப்பட்டது.
அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலத்தடி நிலையத்தின் வெளிப்புற கட்டிட வடிவமைப்பு நியூபார்மேசன் (NEUformation) எனும் கட்டிடக்கலை நிறுவனத்தின் மூலம் செய்யப்பட்டது. நிலையத்தின் வடிவம், சாய்ந்த வரிசைக் கண்ணாடி மேற்பரப்புகளின் அமைப்பில் உருவாக்கப்பட்டது.[4]
இந்த நிலையம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அதன் நுழைவாயில் தரை மட்டத்தில் உள்ளது. அதே வேளையில் பயணச் சீட்டுப் பகுதியும்; மற்றும் அதன் தளங்களும் நிலத்தடியில் உள்ளன.
அம்பாங் பார்க் வணிக வளாகம்
மலேசியாவின் முதல் வணிக வளாகமான அம்பாங் பார்க் வணிக வளாகத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அனைத்து அடுக்குகளிலும் படிக்கட்டுகள், மின்படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுமையுந்துகள் உள்ளன.
அத்துடன் இரு திசைகளின் வழியாகப் பயணிக்கும் தொடருந்துகளுக்கு என தனிப்பட்ட ஒரு தீவு நடைமேடையையும் இந்த நிலையம் பயன்படுத்துகிறது. நவீன முறையிலான மழை வெயில் தடுப்பு கூரைகளால் இந்த நிலையம் கட்டப்பட்டு உள்ளது.
நுழைவாயில்கள்
Remove ads
காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads