ஆத்திரியா-அங்கேரி

From Wikipedia, the free encyclopedia

ஆத்திரியா-அங்கேரி
Remove ads

ஆத்திரியா-அங்கேரி (Austria-Hungary) பெரும்பாலும் ஆத்திரிய-அங்கேரியப் பேரரசு (Austro-Hungarian Empire) அல்லது இரட்டை முடியாட்சி எனக் குறிப்பிடப்பட்ட இப்பேரரசு ஆத்திரியப் பேரரசும் அங்கேரி இராச்சியமும் அரசியல்சட்டப்படி ஒன்றிணைந்த பேரரசு ஆகும். 1867 முதல் 1918 வரை நீடித்திருந்த இப்பேரரசு முதலாம் உலகப் போருக்குப் பின்கண்ட தோல்வியால் உடைபட்டது. 1867இல் ஏற்பட்ட சமரச உடன்பாட்டின்படி இரு நாடுகளும் இணைந்து அவ்வாண்டு மார்ச்சு 30ஆம் நாளன்று இரட்டை முடியாட்சியை நிறுவின. இதில் இரு முடியாட்சிகளும் (ஆத்திரியா, அங்கேரி), ஒரு தன்னாட்சிப் பகுதியும் (அங்கேரிய மன்னரின் கீழ் குரோசிய-இசுலோவேனிய இராச்சியம்) அடங்கியிருந்தன. 1868இல் இந்தத் தன்னாட்சிப்பகுதி குரோசிய-அங்கேரிய தீர்விற்காக உரையாடி வந்தது.

விரைவான உண்மைகள் தலைநகரம், பேசப்படும் மொழிகள் ...

இதனை ஆப்சுபர்கு அரசமரபு ஆண்டு வந்தது. 1867ஆம் ஆண்டு சீர்திருத்தங்களின்படி ஆத்திரியாவும் அங்கேரியும் இணையானவை. வெளிநாட்டு விவகாரங்களும் படைத்துறையும் இணைமேற்பார்வையிலும் மற்ற அரசுத்துறைகள் தனித்தனியாகவும் இருந்தன.

ஆத்திரியா-அங்கேரி பல்தேசிய நாடாகவும் புவியின் வலிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்கியது. அக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் உருசியாவை அடுத்து இரண்டாவது மிகப்பெரும் நிலப்பரப்புடைய நாடாகவும் விளங்கியது; இதன் நிலப்பரப்பு 621,538 ச.கி.மீ. (239,977 ச மைல்).[6] | population_estimate = 51,390,223[7] மக்கள்தொகை அடிப்படையில் (உருசியாவையும் செருமனியையும் அடுத்து) மூன்றாவது பெரிய நாடாக இருந்தது. உலகளவில் அமெரிக்க ஐக்கிய நாடு, செருமனி, ஐக்கிய இராச்சியம் அடுத்து நான்காவது எந்திரத் தயாரிப்புத் தொழிலைக் கொண்டிருந்தது.[8] ஆத்திரியா-அங்கேரி மின்னாக்கப் பொறிகள், தொழிற்சாலை மின்சாதனங்கள், வீட்டு மின்சாதனப் பொருட்களின் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் உலகின் மூன்றாவதாக, அமெரிக்காவிற்கும் செருமனிக்கும் அடுத்து விளங்கியது.[9][10]

1878க்குப் பிறகு போசுனியாவும் எர்செகோனியாவும் ஆத்திரிய-அங்கேரி படைத்துறை மற்றும் குடிசார் ஆட்சியில் இருந்தது.[11] 1908இல் போசினியக் குழப்பம் ஏற்பட்டு இவை இணைக்கப்பட்டன.[12] முஸ்லிம் மக்கள்தொகை மிக்க போசுனியா இணைக்கப்பட்டதால் இசுலாம் ஓர் அலுவல்முறை நாட்டுச் சமயமாக ஏற்கப்பட்டது.[13]

முதலாம் உலகப் போரில் ஆத்திரிய-அங்கேரி மைய சக்திகளில் ஒன்றாக விளங்கிற்று. 1918இல் நவம்பர் 3ஆம் நாள் வில்லா ஜியுஸ்தி உடன்பாடு காணுகையில் பல்வேறு நாடுகளாக ஏற்கெனவே பிரிந்துவிட்டது. இந்தப் பேரரசின் தொடர்ச்சியாக அங்கேரி இராச்சியமும் (1920-46) முதல் ஆத்திரியக் குடியரசும் ஏற்கப்பட்டன. மேற்கு , கிழக்கு இசுலாவ்கள் ஒன்றிணைந்து முதல் செக்கோசுலோவியக் குடியரசு, இரண்டாம் போலந்து குடியரசு, யுகோசுலோவியக் குடியரசுகள் பிறந்தன. உரோமோனிய இராச்சியத்தின் நில உரிமைகளும் 1920இல் வெற்றி பெற்ற மற்ற நாடுகளால் ஏற்கப்பட்டன.

Remove ads

கட்டமைப்பும் பெயரும்

இந்த அரசின் முழுமையான அலுவல்முறைப் பெயர் அரச மன்றத்தால் பிரதிநிதிப்படுத்தப்படும் இராச்சியங்களும் நிலங்களும் மற்றும் புனித இசுடீபனின் தூய அங்கேரிய முடியாட்சியின் நிலங்களும்.

ஆப்சுபர்கு பேரரசர் நாட்டின் மேற்கத்திய, வடக்கு பாதிகளை ஆத்திரியாவின் பேரரசராக ஆட்சி புரிந்தார்.[14] இந்த அரச மன்றத்தால் பிரதிநிதிப்படுத்தப்படும் இராச்சியங்களும் நிலங்களும் ஆத்திரியப் பேரரசு எனப்பட்டது.[6] புனித இசுடீபனின் தூய அங்கேரிய முடியாட்சியின் நிலங்கள் உள்ளடக்கிய அங்கேரி இராச்சியத்தை அங்கேரிய மன்னராக ஆண்டு வந்தார்.[6][14] ஒவ்வொன்றும் குறிப்பிடத்தக்க இறையாண்மையைத் தக்கவைத்திருந்தன. வெளிநாட்டு உறவுகள் பாதுகாப்பு படைத்துறை போன்ற சில துறைகளே கூட்டு மேற்பார்வையில் இயங்கின.[15][16]

Remove ads

ஆத்திரியா-அங்கேரித் தோற்றம்

1867 பெப்ரவரி ஆத்திரிய-அங்கேரி சமரச உடன்பாடு இரட்டை முடியாட்சியுடன் இப்பேரரசை உருவாக்கியது. 1859இல் ஏற்பட்ட ஆத்திரிய-சார்தீனியப் போராலும் 1866இல் நடந்த ஆத்திரிய பிரசியப் போராலும் ஆத்திரியப் பேரரசு (1804–67) தனது வலிமையும் அதிகாரமும் குன்றியிருந்தது. தவிரவும் அங்கேரிய மக்கள் வியன்னா தங்களை நடத்திய விதத்தை எதிர்த்து வந்தனர். இதனால் அங்கேரிய பிரிவினை ஏற்பட்டது. 1848-49இல் அங்கேரியப் புரட்சியும் ஏற்பட்டது.

அங்கேரிய பிரபுக்களுடன் பேரரசர் பிரான்சு யோசப்பு உடன்பாடு காண முயன்றார். முழுப் பேரரசை காப்பாற்ற அவர்களது உதவியை நாடினார். தங்களுக்கு இணையான நிலையை பெறுதைத் தவிர வேறெதற்கும் அவர்கள் உடன்படவில்லை. இதற்கேற்பவே ஆத்திரிய மக்களும் அங்கேரி மக்களும் முற்றிலும் இணையான நிலையுடன் புதிய பேரரசு உருவாக்கப்பட்டது.

Remove ads

முதலாம் உலகப் போர்

பிரான்சு யோசப்பின் உடன்பிறப்பு முதலாம் மாக்சிமிலியன் (1867), மற்றும் அவரது ஒரே மகன் இளவரசர் ருடோல்ஃப் மரணத்திற்குப் பிறகு பேரரசரின் மருமகனான பிரான்ஸ் பேர்டினண்ட், அடுத்து பதவியேற்கும் வாரிசானார். சூன் 28 1914 அன்று அவர் பொசுனியா எர்செகோவினாவின் தலைநகர், சாரயேவோவிற்கு வருகை புரிந்தார். பொசுனிய செர்பிய எதிர்ப்பாளர்கள். பேர்டினண்டின் தானுந்து ஊர்வலத்தை தாக்கி அவரைக் கொன்றனர்.

செரபிய நாட்டுடன் சண்டையிட நோக்கியிருந்த சில அரசு அதிகாரிகள் இதவே ஏற்ற தருணம் என செர்பியாவைத் தாக்கினர். சண்டையை நிறுத்த செர்பியர்களுக்கு பத்து கோரிக்கைகள் வைத்தனர்; இது சூலை இறுதி எச்சரிக்கை எனப்படுகின்றது.[17] ஏற்றுக்கொள்ளாது என்று எண்ணியவர்களுக்கு ஏமாற்றமாக செர்பியா இந்த நிபந்தனைகளில் ஒன்பதை ஏற்றுக்கொண்டது. பத்தாவதை பகுதியாக ஏற்றவேளையிலும் ஆத்திரிய ஆங்கேரி போர் அறிவித்தது.

செர்பியாவிற்கு உதவ உருசியா தனது படைகளை நகர்த்தியது. இதுவே முதலாம் உலகப் போர் மீள அடிகோலிற்று.

பேரரசின் முடிவு

Thumb
ஆத்திரியா–அங்கேரியும் 1918இல் உருவான புதிய நாடுகளும்.

போரின் இறுதிக்கட்டத்தில் மூவர் கூட்டணி வெற்றிபெறும் என்பதை அறிந்தவுடன் நாடு முடியாட்சியிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தது. தவிரவும் பேரரசின் பல்வேறு இனத்தினரும் தத்தம் நாடுகளை விடுதலை பெற்றதாக அறிவித்தன. முந்தைய ஆப்ஸ்பர்கு நாடு பின்வரும் நாடுகளாகப் பிரிந்தது:

சில நிலப்பகுதிகள் உருமேனியாவிற்கும் இத்தாலிக்கும் வழங்கப்பட்டன.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads