ஆயர் கூனிங் செலாத்தான்

தம்பின் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆயர் கூனிங் செலாத்தான் (ஆங்கிலம்: Air Kuning Selatan; மலாய் மொழி: Air Kuning Selatan) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், தம்பின் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம். இந்த நகரம் கெமிஞ்சே மற்றும் கிம்மாஸ் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் ஆயர் கூனிங் செலாத்தான், நாடு ...

ஆயர் கூனிங் செலாத்தான் நகரம், சிரம்பான் தலைநகரில் இருந்து 75 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து தெற்கே 135 கி.மீ.; மலாக்கா நகரில் இருந்து 57 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 220 கி.மீ. தொலைவில் உள்ளது.

மலாக்கா மாநிலத்தின் பத்தாங் மலாக்கா நகரம் இந்த நகரத்திற்கு மிக அருகாமையில் உள்ளது.

Remove ads

ரப்பர் தோட்டங்கள்

ஆயர் கூனிங் செலாத்தான் வட்டாரத்தில் முன்பு நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. நூற்றுக் கணக்கான தமிழர்கள் அந்தத் தோட்டங்களில் பணி புரிந்தார்கள். நில மேம்பாட்டுத் திட்டங்கள்; நகர விரிவாக்கங்கள் போன்றவற்றால் அந்தத் தோட்டங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

தற்சமயம் ஐந்து தோட்டங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் இரண்டு தோட்டங்களில் மட்டுமே தமிழ்ப்பள்ளிகள் உள்ளன.

  • நாம் பீ தோட்டம் - Nam Bee Estate
  • புக்கிட் கிலேடேக் தோட்டம் - Bukit Keledek Estate
  • ஆயர் தெக்கா தோட்டம் - Air Tekah Estate
  • சிம்புல் தோட்டம் - Chimpul Estate
  • புக்கிட் கட்டில் தோட்டம் - Bukit Katil Estate
Remove ads

தமிழ்ப்பள்ளிகள்

ஆயர் கூனிங் செலாத்தான் வட்டாரத்தில் இரு தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 46 மாணவர்கள் பயில்கிறார்கள். 19 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[1][2]

மேலதிகத் தகவல்கள் பள்ளி எண், இடம் ...
Remove ads

மேற்கோள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads