எருக்கஞ்சேரி

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

எருக்கஞ்சேரி என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில்,[1] 13°07'39.7"N, 80°14'54.2"E (அதாவது, 13.127700°N, 80.248400°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 31 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். பெரம்பூர், வியாசர்பாடி, மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம், மணலி, மகாகவி பாரதி நகர் மற்றும் கவிஞர் கண்ணதாசன் நகர் ஆகியவை எருக்கஞ்சேரி பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். சென்னையில் வாழ்ந்த எத்திராஜ் சுவாமிகள் சமாதி, அவரது பெயரால் எருக்கஞ்சேரியிலுள்ள எத்திராஜ் சாலையில் அவரது ஆன்மீக பக்தர்களால் நிறுவப்பட்டுள்ளது.[2]

விரைவான உண்மைகள் எருக்கஞ்சேரி எருக்கஞ்சேரி, நாடு ...

எருக்கஞ்சேரியில் சென்னை மாநகராட்சி பள்ளி ஒன்று உள்ளது.[3] 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசியக் குத்துச்சண்டை போட்டியில் பன்னிரண்டு வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற பி. கே. அர்ஜுனா இப்பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.[4] டான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி[5] மற்றும் St. Joseph மேல்நிலைப் பள்ளி[6] ஆகிய தனியார் பள்ளிகளும் எருக்கஞ்சேரியிலுள்ள பள்ளிகளாகும்.

எருக்கஞ்சேரி பகுதியானது எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மூலக்கடை சந்திப்பு பகுதிக்கு அண்மையில் உள்ளதால் இப்பகுதியும் மக்கள் நெரிசல் கொண்டதாகவே காணப்படுகிறது. பெரும் வடக்கு வழித்தடம் இதன் அருகிலேயே செல்கிறது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படுகிற பேருந்துகளில் அதிகளவு எருக்கஞ்சேரியை ஒட்டிச் செல்லுகின்றன. அதிக எண்ணிக்கையிலான விரைவு தொடருந்துகளும் சில நிமிடங்கள் பயணிகள் ஏற, இறங்க நின்று செல்லும் பெரம்பூர் தொடருந்து நிலையம் இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் பேசின் பாலம் சந்திப்பு தொடருந்து நிலையம் அமையப் பெற்றுள்ளது. எருக்கஞ்சேரியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில், இந்தியாவின் பல இடங்களுக்கும் இரயில் போக்குவரத்து சேவைகள் அளிக்கும் புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். மத்திய இரயில் நிலையம், 24 மணி நேரமும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சுமார் 26 கி.மீ. தொலைவில் அயல்நாடுகளுக்கும் பயணம் செய்து கொள்ள வசதியாக சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

எருக்கஞ்சேரியிலுள்ள முத்துமாரியம்மன் கோயில்,[7] விஜயலிங்கேசுவரர் கோயில்,[8] காமாட்சியம்மன் வகையறா கோயில்,[9] சிங்கார வேலவர் கோயில்[10] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களாகும்.

எருக்கஞ்சேரி பகுதியானது, பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆர். டி. சேகர். மேலும் இப்பகுதி, வட சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கலாநிதி வீராசாமி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads