கிம்மாஸ் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிம்மாஸ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Gemas Railway Station மலாய்: Stesen Keretapi Gemas); சீனம்: 金马士站) என்பது தீபகற்ப மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் தம்பின் மாவட்டம், கிம்மாஸ் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கிம்மாஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. [2]
மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் தீபகற்ப மலேசிய கிழக்கு கரை வழித்தடமும் (KTM East Coast Railway Line); மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடமும் (KTM West Coast Railway Line) சந்திக்கும் நிலையமாக இந்த நிலையம் அமைகிறது.[3]
Remove ads
பொது
இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) தொடருந்து சேவை; கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) தொடருந்து சேவை; ஆகிய இரண்டு சேவைகளையும் வழங்குகிறது. தீபகற்ப மலேசியாவின் மேற்கு கரை பகுதியில் பெர்லிஸ் மாநிலத்தின் பாடாங் பெசார் தொடருந்து நிலையம் தொடங்கி சிங்கப்பூர், உட்லண்ட்ஸ் ரயில் நிலையம் (Padang Besar–Singapore); தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரை பகுதியில் கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் தொடருந்து நிலையம் தொடங்கி நெகிரி செம்பிலான் கிம்மாஸ் தொடருந்து நிலையம் (Tumpat–Gemas) வரையிலான நிலையங்களில் இருந்து வரும் தொடருந்துகளுக்கு தலையாய சந்திப்பு முனையாக இந்த கிம்மாஸ் தொடருந்து நிலையம் அமைகிறது.[4]
மலேசியாவில் வேறு எங்கும் இப்படி ஒரு தொடருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. தீபகற்ப மலேசியாவில் வாழும் மக்கள் மேற்கு கரையில் இருந்து கிழக்கு கரைக்கு தொடருந்து மூலமாகச் செல்ல வேண்டும் என்றால் கிம்மாஸ் தொடருந்து நிலையத்திற்கு வந்தாக வேண்டும். முன்பு காலத்தில் சாலைப் போக்குவரத்துகள் குறைவாக இருந்ததால் மக்கள் கிமாஸ் தொடருந்து நிலையத்தின் சேவையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை இருந்தது.[5]
Remove ads
வரலாறு
பழைய கிம்மாஸ் தொடருந்து நிலையம் 1906-இல் கட்டப்பட்டது. பினாங்கு, சிரம்பான் மற்றும் கோலாலம்பூர் மாநகரில் இருந்து வரும் தொடருந்துகளுக்கான மையமாக இருந்தது. சரக்குகள் மற்றும் பயணிகளை மாற்றுவதற்காக குறிப்பிட்ட நீண்ட நேரத்திற்கு தொடருந்துகள் நிறுத்தப்படும் என்பதால் இது பயணிகளுக்கு மிகவும் பிரபலமான நிலையமாக விளங்குகிறது.
பழைய நிலையம் 2015-இல் மூடப்பட்டது. அதற்கு அடுத்ததாக ஒரு புதிய கட்டிடம், மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. பழைய தொடருந்து நிலையக் கட்டிடம் சிறு சிறு உணவகங்களாக மாற்றப்பட்டது. பின்னர் தொடருந்து அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.[6]
மின்மயமாக்கத்தில் தொடருந்து சேவை
மலேசியாவின் தொடருந்து சேவை மின்மயமாக்கலின் ஒரு பகுதியாக, இங்குள்ள தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டன. பழைய நிலையத்தின் கட்டிடத்தை ஒட்டி ஒரு புதிய நிலையம் கட்டிடம் கட்டப்பட்டது. பழைய நிலையக் கட்டிடம், நடைபாதைகள் மற்றும் தண்டவாளத்தின் ஒரு பகுதி இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றன.
1990-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் தீபகற்ப மலேசியாவின் இரு கரைகளையும் இணைக்கும் கூட்டரசு சாலைகளும்; நெடுஞ்சாலைகளும்; விரைவுச்சாலைகளும்; அதிகமாக நிறுவப்பட்டன. இதன் காரணமாக மக்களின் தொடருந்து ஆர்வங்களும் குறைந்து விட்டன.
Remove ads
சேவைகள்
- ETS Gold Train No. 9420 பாடாங் பெசார் - கிம்மாஸ்
- ETS Gold Train No. 9425 பாடாங் பெசார் - கிம்மாஸ்
- ETS Premium Train No. 9204 பட்டர்வொர்த் - கிம்மாஸ்
- ETS Premium Train No. 9371 பட்டர்வொர்த் - கிம்மாஸ்[7]
- விரைவுத் தொடருந்து (தெற்கு) 40/42/44 - Ekspres Selatan Train No. 40/42/44 JB Sentral–Gemas[7]
- விரைவுத் தொடருந்து (தெற்கு) 41/43/45 - Ekspres Selatan Train No. 41/43/45 Gemas–JB Sentral
- விரைவுத் தொடருந்து (ராக்யாட்) 26/27 - Ekspres Rakyat Timuran Train No. 26/27 Tumpat–JB Sentral
கிம்மாஸ் புதுநகரம்
அண்மைய காலத்தில் இந்த நகரத்தின் தென் பகுதியில், ஜொகூர் மாநில எல்லைப் பகுதியில் ஒரு புதிய நகரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கு கிம்மாஸ் பாரு (Gemas Baharu) என்று பெயர். இருப்பினும் கிம்மாஸ் நகரத்தின் மையப் பகுதி இன்றும் நெகிரி செம்பிலான் பகுதியில் தான் உள்ளது.
கிம்மாஸ் நகரம் தீபகற்ப மலேசியாவில் ஒரு தொடருந்து சந்திப்பு முனையாக அமைந்து இருக்கும் காரணத்தினால் இந்த நகரத்தில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நகரம் ஒரு சிறிய நகரமாக இருந்தாலும் இங்கு ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் காணலாம்.
Remove ads
காட்சியகம்
- புதிய கிம்மாஸ் தொடருந்து நிலையம்
- புதிய கிம்மாஸ் தொடருந்து நிலையத்தின் நடைபாதைகள்
- கேடிஎம் இடிஎஸ் தொடருந்து
- காத்திருக்கும் அறை
- பழைய தொடருந்து நிலையத்தின் நுழைவாயில்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads