கிருஷ்ணன்கோவில் (நாகர்கோவில்)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருஷ்ணன்கோவில் (Krishnancoil) என்ற ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள ஒரு புறநகர் பகுதியாகும். இவ்வூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவிலின் பெயராலேயே இவ்வூர் வழங்கப்படுகிறது. இது 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது தேசிய நெடுஞ்சாலை 47 இல் அமைந்துள்ளது. இது நாகர்கோவில் நகரை கேரளா தலைநகரான திருவனந்தபுரத்துடன் இணைக்கிறது. கிருஷ்ணன் கோவில் ஊரில் உள்ள கிருஷ்ணன் கோவில் "தென் திசையின் குருவாயூர்" என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் உள்ள கிருஷ்ணன் சிலை, குருவாயூர் கோவிலில் உள்ள ஒரு முக்கிய தெய்வத்தை ஒத்திருக்கிறது. கிருஷ்ணன்கோவில் பகுதியிலுள்ள கிருஷணன் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[2]
5 ஆம் வகுப்பு வரை கல்வி போதிக்கும் ஓர் அரசு துவக்கப் பள்ளி கிருஷ்ணன்கோவில் புறநகர்ப் பகுதியில் உள்ளது. இப்பள்ளி, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.[3] இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் நாகர்கோவில் நகரின் அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள் அல்லது வேளாண்மையில் ஈடுபடுகிறார்கள். இங்கு விளையும் முக்கியப் பயிர் அரிசி. வைணவக் கோயிலான கிருஷ்ணன்கோயில் வடசேரி காவல் நிலையம் அருகில் உள்ளது.
திருவிதாங்கூர் மன்னரால் கட்டப்பட்டு, 1945 ஆம் ஆண்டு சூன் இருபதாம் நாளில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று, கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[4]
Remove ads
குறிப்பிடதக்க நபர்கள்
- கே. வி. மகாதேவன் (தாய்க்கு பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தானயன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், குடும்பத் தலைவன் போன்ற தேவர் பிலிம்ஸ் படங்களுக்கு இசை அமைத்தவர்.)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads