கீழப்பூங்குடி பிரம்மபுரீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரம்மபுரீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தின் கீழப்பூங்குடி பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் பிரம்மபுரீசுவரர் மற்றும் தாயார் பிரம்மவித்யாம்பிகை ஆவர். இத்திருத்தலத்தின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 127.07 மீ. உயரத்தில் (9.9646°N 78.4902°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, சிவகங்கை ஊரிலிருந்து சுமார் 15 கி. மீ. தொலைவிலுள்ள கீழப்பூங்குடி பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.[2]
திருவிழாக்கள்
மகா சிவராத்திரி, நவராத்திரி, சித்திரை திருக்கல்யாணம், மாசி மகம், பங்குனி உத்தரம், மார்கழி திருவாதிரை, சங்காபிசேகம், தைப்பூசம், கூடாரவல்லி நோன்பு, வைகாசி விசாகம் மற்றும் கந்த சஷ்டி ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும்.[3]
இதர தெய்வங்கள்
நடராசர், பஞ்சமூர்த்திகள், இலிங்கோத்பவர், விநாயகர் மற்றும் பைரவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads