குசால்நகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குசால்நகர் (Kushalanagar) இந்திய மாநிலமான கருநாடகாவின் குடகு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.[2] காவேரி நதியால் சூழப்பட்ட இது, குடகு மாவட்டத்தின் நுழைவாயிலாகும். இது குசால்நகர் வட்டத்தின் தலைமையகமாகவும் செயல்படுகிறது. திபெத்திய அகதிகளின் முகாம் குசால்நகருக்கு அருகில் பைலக்குப்பே என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பௌத்த மடம் 1972 ல் கட்டப்பட்டது. இங்கு பல பௌத்தக் கோயில்கள் அமைந்துள்ளதால் பைலக்குப்பேவுக்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இது குடகுவில் ஒரு முக்கியமான வணிக மையமாகும்.[3][4]
Remove ads
பெயர்க் காரணம்
இப்பகுதியில் முகாமிட்டிருந்த ஐதர் அலி தனது மகன் திப்பு பிறந்த செய்தியைக் கேட்டதும் இந்த இடத்துக்கு குஷியல் நகர் ("மகிழ்ச்சியின் நகரம்") என்றப் பெயரை வழங்கினார் என்று ஒரு பிலபலமான கதை உண்டு.[5] ஆனால் உண்மையில், திப்பு 1750 ஆம் ஆண்டில்தான் பிறந்தார். ஆனால் ஐதர் அலி 1760-களில்தான் முதல் முறையாக குடகுக்குள் நுழைந்தார். பிரித்தானியர்கள் கூர்க்கைக் கைப்பற்றிய பிறகு, 1834 ஆம் ஆண்டில் கூர்க்கில் அரசியல் முகவராக இருந்த கர்னல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் பிரேசரின் நினைவாக இது பிரேசர்பேட்டை என்று அழைக்கப்பட்டது.[6]
Remove ads
இதனையும் காண்க
சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads