கூர்க் மாநிலம்

From Wikipedia, the free encyclopedia

கூர்க் மாநிலம்map
Remove ads

கூர்க் மாநிலம் (Coorg State) என்பது 1950 முதல் 1956 வரை இந்தியாவின் சி பிரிவு மாநிலமாக இருந்தது ஆகும். [1] 1950 சனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, அப்போதிருந்த பெரும்பாலான மாகாணங்கள் மாநிலங்களாக மாற்றப்பட்டன. இதனால், கூர்க் மாகாணம் கூர்க் மாநிலமாக மாற்றப்பட்டது. கூர்க் மாநிலத்தை அதன் தலைநகரான மடிக்கேரியிலிருந்து தலைமை ஆணையரால் ஆளப்பட்டது. அரசாங்கத்தின் தலைவராக முதலமைச்சர் இருந்தார். 1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி கூர்க் மாநிலம் 1956 நவம்பர் முதல் நாள் அன்று ஒழிக்கப்பட்டு மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது (பின்னர் 1973 இல் கருநாடகம் என மறுபெயரிடப்பட்டது) [2] தற்போது, கூர்க் மாநிலப் பகுதிகள் கர்நாடக மாநிலத்தின் ஒரு மாவட்டமாக உள்ளது.

Thumb
1956 ஆம் ஆண்டின் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்திற்கு முந்தைய தென்னிந்தியாவின் வரைபடத்தில் கூர்க் மாநிலம் அடர் பச்சை நிறத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள்
Remove ads

வரலாறு

இந்திய அரசியலமைப்பின் படி கூர்க் மாநிலம் 1950 சனவரி 26 அன்று உருவானது. அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு, கூர்க் இந்தியாவின் மேலாட்சிக்கு உட்பட்ட ஒரு மாகாணமாக இருந்தது.

கூர்க்கில் முதல் சட்டமன்றத் தேர்தல் 1952 இல் நடைபெற்றது. தேர்தலில் சி. எம் பூனாச்சா தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் காந்திய பாண்டியண்டா பெல்லியப்பா தலைமையிலான தக்கடி கட்சி ஆகியவற்றுக்கு இடையே போட்டி இருந்தது. அண்டை மாநிலமான மைசூர் மாநிலத்துடன் இணைவதை காங்கிரஸ் ஆதரித்த அதே வேளையில், தக்கடி கட்சி, மைசூர் மாநிலத்துடன் இணைப்பதை எதிர்த்து போட்டியிட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் 15 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்றது. தக்கடி கட்சி ஒன்பது இடங்களை வென்றது.

Remove ads

கூர்க் மாநில ஆணையர்கள்

(1) திவான் பகதூர் கெடோலிரா செங்கப்பா, 1947-1949 முதல் அதன் முதல் தலைமை ஆணையராக பொறுப்பு வகித்தார்

(2) சி. டி. முதலியார் 1949 - 1950 வரை தலைமை ஆணையராக இருந்தார். [1]

(3) கன்வர் பாபா தயா சிங் பேடி, 1950 - 1956 காலக்கட்டத்தில் தலைமை ஆணையராக இருந்தார். [1]

கூர்க் அரசு

கூர்க் சட்டமன்றத் தேர்தலில் மொத்த தொகுதிகளான 24இல் இந்திய தேசிய காங்கிரசு 15 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அமைச்சரவயில் இரண்டு அமைச்சர்கள் (முதலமைச்சர் உட்பட) இடம்பெற்றனர். இந்த அரசு மாநில மறுசீரமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த 1956 நவம்பர் 1956 முதல் நாள்வரை நீடித்தது.

முதல் அமைச்சர்

1950 முதல் 1956 வரை கூர்க் மாநிலத்தின் முதல் மற்றும் கடைசி முதலமைச்சராக பெரியாத்நாடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட சேப்புதிர முத்தான பூனாச்சா பதவி வகித்தார். [1]

அமைச்சரவை

  • முதலமைச்சராக இருந்த சேப்புதிர முத்தான பூனாச்சா, கூர்க் மாநிலத்தின் நிதி அமைச்சகத்தின் பொறுப்பையும் கொண்டிருந்தார்.
  • சனிவார சந்தை தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குத்தூர் மல்லப்பா கூர்க் மாநிலத்தின் உள்துறை அமைச்சரானார்

கலைப்பு

மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் விளைவாக, இந்தியாவின் மாநில எல்லைகள் 1956 நவம்பர் முதல் நாள் அன்று மறுசீரமைக்கப்பட்டது, கூர்க் மாநிலம் அப்போதைய மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டு அதன் ஒரு மாவட்டமாக ஆக்கப்பட்டது. [1][3][4] மைசூர் மாநிலம் பின்னர் கருநாடகம் என பெயர் மாற்றப்பட்டது. கூர்க் மாநிலத்தின் வரலாற்றுப் பகுதி இப்போது கர்நாடகத்தின் குடகு மாவட்டமாக உள்ளது. [5]

இதையும் பார்க்கவும்

  • குடகு வரலாறு

குறிப்புகள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads