கோவிந்தன் கருணாகரன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜனா என அழைக்கப்படும் கோவிந்தன் கருணாகரன் (Govinthan Karunakaran; பிறப்பு: 1 அக்டோபர் 1963), இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார்.[1]

விரைவான உண்மைகள் ஜனா கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

கருணாகரன் 1963 அக்டோபர் 1 இல் பிறந்தார்.[1][2] செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்திலும், புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலையிலும் கல்வி கற்றார்.[2] தமிழருக்கு எதிரான கறுப்பு யூலை வன்முறைகளை அடுத்து இவர் 1983 ஆகத்து மாதத்தில் பாடசாலையை விட்டு வெளியேறி, 1983 நவம்பரில் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) என்ற ஈழப் போராட்டக் குழுவில் இணைந்தார்.[2][3] ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டு, 1987 சூனில் அம்பாறை-மட்டக்களப்பு மாவட்ட டெலோவில் பிராந்தியத் தலைவரானார்.[2] பின்னர் டெலோவின் பொதுச் செயலாளரானார்.[2]

Remove ads

தேர்தல் அரசியலில்

கருணாகரன் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எப்/டெலோ/தவிகூ வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[4] 2012 மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்திஒல் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினரானார்.[5][6]

கருணாகரன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வேட்பாளராகப் போட்டியிட்டுத் தெரிவாகவில்லை.[7][8] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[9][10]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads