சித்தி–2

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சித்தி (பருவம் 2) அல்லது இன்னொரு சாரதாவின் கதை என்பது சன் தொலைக்காட்சியில் 27 சனவரி 2020 முதல் 28 மே 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது 1999 முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான சித்தி என்ற தொடரின் இரண்டாம் பாகம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் வகை, எழுத்து ...

இந்தத் தொடரில் பிரீத்தி சர்மா, நந்தன் லோகநாதன் மற்றும் தர்ஷனா போன்ற பலர் முன்னணி கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். க. சுலைமான் பாபு என்பவர் இத் தொடரை இயக்க, ராதிகாவின் ராடான் மீடியாவொர்க்ஸ் நிறுவனத்துடன் சன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தத் தொடரின் முன்னோட்டக் காட்சியைப் பிரபல இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். இதன் முதல் அத்தியாயம் 1 மணி நேரம் ஒளிபரப்பானது. இத்தொடர் 28 மே 2022 அன்று 580 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

Remove ads

கதைசுருக்கம்

சாரதா என்ற நடுத்தர குடுமத்தை சேர்த்த பெண் தனது குடும்ப சந்தோசத்தை நிலைநாட்ட அவள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த தொடரின் கதை நகர்கின்றது.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

சாரதா குடும்பத்தினர்

  • அஸ்வின் குமார் - அன்பு
    • சண்முகப்பிரியன் மற்றும் பத்மாவின் இரண்டாவது மகன்.
  • நிகிலா ராவ் (3-58) → காயத்ரி யுவராஜ் - நந்தினி அன்பு
    • வெண்பாவுடன் கல்லூரியில் படிப்பவர்.
  • சக்தி சரவணன் - கலை
    • சண்முகப்பிரியன் மற்றும் பத்மாவின் மூத்த மகன், தீபாவின் கணவர்.
  • மகாலட்சுமி - தீபா கலை
    • தெலுங்கு பெண், கலையின் மனைவி.
  • பிரதிக்ஷா சங்கர் - அம்முலு கலைச்செல்வன்
    • கலைச்செல்வன் மற்றும் தீபாவின் மகள்
  • விஜயலட்சுமி - தெய்வநாயகி
    • சண்முகப்ரியன் மற்றும் லக்ஷ்மியின் தாய்

சண்முகப்ரியனின் சகோதரி குடும்பத்தினர்

  • சில்பா (1-58) → ஜெயலட்சுமி - லட்சுமி
    • சித்தியின் குடும்பத்தின் மீது பாசமாக இருப்பது போல நடிப்பவள். ரொம்ப கோவம் உடையவள். சண்முகப்ரியணனின் தங்கை, கோமதி நாயகத்தின் மனைவி மற்றும் செவந்தியின் தாய்.
  • அருள்மதி - கோமதி நாயகம் (லட்சுமியின் கணவர்)
  • நேகா - செவ்வந்தி
    • லட்சுமி மற்றும் கோமதி நாயகத்தின் மகள்
  • நந்தகுமார் - சாத்தப்பன்
    • கோமதி நாயகத்தின் தந்தை

கவின் மற்றும் யாழினியின் குடும்பத்தினர்

  • மீரா வாசுதேவன் (1-43) → சிரிஷா சௌகந் (44-58) → மீரா கிருஷ்ணன் - மல்லிகா
    • இந்த தொடரின் வில்லி, கவினின் அம்மா, திமிரான குணம் கொண்ட பணக்காரி மற்றும் சண்முகப்பிரியனை காதலித்து ஏமாந்தவள். அதனால் அந்த குடும்பத்தை பழி வாங்க துடிப்பவள்.
  • பரத் கல்யாண் - மோகன்ராஜ்
    • மல்லிகாவின் முன்னாள் கணவர், கவினின் அப்பா
  • ஸ்ரீதர் - தர்மராஜ்
    • மல்லிகாவின் அண்ணன் மற்றும் வெண்பாவின் உண்மையான தந்தை மற்றும் யாழினியின் வளர்ப்பு தந்தை, கவினின் மாமா
  • உமா பத்மநாபன் - கௌரி தர்மராஜ்

பத்மா குடும்பத்தினர்

  • ரூபினி (1) → ராஜஸ்ரீ (71-) - பத்மா
    • சண்முகப்பிரியனின் முன்னாள் மனைவி, சாரதாவின் அக்கா, அன்பு, கலை மற்றும் ஜீவாவின் தாய்.

மிதுன் ராஜ் - ஜீவா (மகன்)

துணைக் கதாபாத்திரங்கள்

  • முரளி கிருஷ்ணன்-ரவி
  • வீனா வெங்கடேஷ்/உஷா எலிசபெத்-சுப்புலட்சுமி நடராஜன்
    • ஒரு வழிக்கறிஞர், நடராஜனின் மனைவி மல்லிகாவின் எதிரி
  • சிவாஜி மனோகர்-நடராஜன்
  • முனிஷ் ராஜா-சிங்காரம்

முன்னாள் கதாபாத்திரங்கள்

  • ராதிகா சரத்குமார்[2] - சாரதா
    • பத்மாவின் தங்கை, சண்முகப்பிரியனின் இரண்டாவது மனைவி மற்றும் ஒரு ஆசிரியர்.
  • பொன்வண்ணன் (1-58) → நிழல்கள் ரவி - சண்முகப்பிரியன்
    • பத்மாவின் முன்னாள் கணவன், மல்லிகாவின் முன்னாள் காதலன் மற்றும் சாரதாவின் கணவன்.
  • ஜெய் ராம்
  • வின்சென்ட் ராய்
  • பார்வதி
  • ஜெகநாதன்
  • ஜெயராமன்
  • ஜெமினி
  • ரவி
  • ஆகாஷ் கிருஷ்ணா
  • பரம்புகணேஷ்

சிறப்புத் தோற்றம்

Remove ads

தயாரிப்பு

சின்னத்திரையில் 20 ஆண்டுகளாக 9:30 மணி நேரத்தில் ராதிகாவின் தொடர்களான சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி மற்றும் சந்திரகுமாரி போன்ற தொடர்கள் ஒளிபரப்பாகி வந்த தருணத்தில் கடைசியாக சந்திரகுமாரி என்ற தொடரில் நடித்த ராதிகா அந்த தொடர் சரியாக வராத காரணத்தாலும் சன் தொலைக்காட்சி அந்த தொடரை மாலை நேரத்தில் மாற்றியதாலும் தொடரிலிருந்து விளக்கினார். இவருக்கு பதிலாக நடிகை விஜி சந்திரசேகர் நடித்தார்.[3] இவரின் 9:30 மணி நேரத்தை நடிகை குஷ்பூ கைப்பற்றி கொண்டார். சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு இவர் தனது வெற்றி தொடரான சித்தி தொடரின் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடிக்க முடிவெடுத்து அதை பற்றிய செய்திகளை வெளியிட்டார்.[4]

இந்த தொடரின் முன்னோட்ட காட்சிகளை இயக்குநர் சமுத்திரக்கனி இயக்க, தொடரை இயக்குநர் சுந்தர் கே. விஜயன் என்பவர் இயக்கியுள்ளார்.[5] இவர் அலைகள், லட்சுமி, யாழினி போன்ற தொடர்களை இயக்கியுள்ளார்.

நடிகர்களின் தேர்வு

முதல் பாகத்தில் நடித்த ராதிகா இந்த தொடரிலும் சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சண்முகப்பிரியன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பொன்வண்ணன் பின்னர் நிழல்கள் ரவி ஆகியோர் நடித்தனர்.[6] சின்னத்திரையில் முதல் முறையாக முன்னாள் நடிகை ரூபினி என்பவர் பத்மா என்ற கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இவர் 14 வருடங்களுக்கு பிறகு திரையில் தோன்றும் முதல் முதலாக தொலைக்காட்சி தொடர் ஆகும்.

இந்த தொடரின் நாயாகியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் திருமணம் தொடரில் நடித்த பிரீத்தி சர்மா நடிக்க நாயகனாக இவருக்கு ஜோடியாக வந்தாள் ஸ்ரீதேவி தொடரில் நடித்த நந்தன் லோகநாதன் என்பவர் கவின் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவரின் தாய் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடிகை மீரா வாசுதேவன் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் 10 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் முதல் தொடர் இதுவாகும். பின்னர் இவருக்கு பதிலாக தெலுங்கு நடிகை சிரிஷா சௌகந் என்பவர் அத்தியாயம் 44 முதல் 55 வரை நடித்தார். பின்னர் அத்தியாயம் 56 முதல் மீரா கிருஷ்ணன் என்பவர் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

சித்தி முதல் பாகத்தில் நடித்த டேனியல் பாலாஜி[7] மற்றும் சில்பா ஆகியோர் இந்த பருவத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் நிகிலா ராவ், மகாலட்சுமி, நேகா, வின்சென்ட் ராய், காயத்ரி யுவராஜ் போன்ற பலர் நடிக்கிறார்கள் நடித்துள்ளார்கள்.

Remove ads

சிறப்பு நிகழ்ச்சி

இந்த தொடரின் நடிகர்களின் அறிவிப்பு சன் குடும்பம் விருதுகள் 2019 என்ற விருது விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் என்பவரால் அறிவிக்கப்பட்டது. 26 சனவரி 2020 ஆம் சன் தொலைக்காட்ச்சி மற்றும் ஆதித்யா தொலைக்காட்ச்சியில் சித்தி 2 தொடரின் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது.

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

இந்த தொடர் 27 சனவரி 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 27, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு செப்டம்பர் 14, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பானது. பின்னர் 18 அக்டோபர் 2021 முதல் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி, பின்னர் 7 பிப்ரவரி 2022 முதல் பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மேலதிகத் தகவல்கள் ஒளிபரப்பான திகதி, நாட்கள் ...
Remove ads

மொழி மாற்றம்

இந்த தொடர் தெலுங்கு மொழியில் பின்னி 2 என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 22 ஜூன் 2020 முதல் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி, 20 பிப்ரவரி 2021 அன்று.நிறுத்தப்பட்டது.

மேலதிகத் தகவல்கள் நாடு, மொழி ...

சர்வதேச ஒளிபரப்பு

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads