சூரியன் எம்ஆர்டி நிலையம்
ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூரியன் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Surian MRT Station அல்லது Surian – IOI Mall Damansara Station; மலாய்: Stesen MRT Surian) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, குவாசா டாமன்சாரா நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும். இந்த நிலையம் எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலையம் அமைந்துள்ள பெர்சியாரான் சூரியன் எனும் சாலையின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் 2016 டிசம்பர் 16 அன்று எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தின் முதல் கட்ட நடவடிக்கைகளின் கீழ் திறக்கப்பட்டது.
இந்த நிலையம் கோத்தா டாமன்சாராவில் உள்ள டாத்தாரான் சன்வே (Dataran Sunway) வணிகப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. டாத்தாரான் சன்வே வணிகப் பகுதியில் சன்வே கிசா கடைவள மையம் (Sunway Giza Shopping Centre), சன்வே நெக்ஸிஸ் (Sunway Nexis) மற்றும் பல கடைகள் உள்ளன.[1]
Remove ads
நிலைய அம்சங்கள்
சூரியன் எம்ஆர்டி நிலையம் காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் உள்ள அனைத்து உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போல ஒரு நிலையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சூரியன் எம்ஆர்டி நிலையம், பெர்சியாரான் சூரியன் சாலைக்க்கு (Persiaran Surian) மேலே கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையம் கோத்தா டாமன்சாராவின் டாத்தாரான் சன்வே வணிகப் பகுதி அல்லது செக்சன் PJU5-க்கு அடுத்ததாக அமைந்துள்ளது. அத்துடன் சன்வே கிசா மால் நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது, அதே வேளையில் என்கார்ப் இஸ்ட்ராண்ட் மால் (Encorp Strand Mall); மற்றும் கோத்தா டாமன்சாரா ஜெயண்ட் ஹைப்பர் மார்க்கெட் (Giant Hypermarket Kota Damansara) போன்ற வணிக மையங்கள் சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.
நிலைய அமைப்பு
L2 | நடைமேடை தளம் | பக்க நடைமேடை |
நடைமேடை 1 9 காஜாங் (→) காஜாங் KG35 (→) | ||
நடைமேடை 2 9 காஜாங் (←) குவாசா டாமன்சாரா KG04 (←) | ||
பக்க நடைமேடை | ||
L1 | இணைப்புவழி | கட்டணப் பகுதிக்கான நுழைவாயில்கள், நடைமேடைகளுக்கான நகரும் படிக்கட்டுகள், கட்டண இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள் |
G | தரை தளம் | பேருந்து முனையம், வாடகைக் கார்கள் நிறுத்துமிடம், பணியாளர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் |
Remove ads
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்


பெர்சியாரான் சூரியன் சாலையின் இருபுறமும் இந்த நிலையத்திற்கு நுழைவாயில் A; நுழைவாயில் B; நுழைவாயில் C என மூன்று நுழைவாயில்கள் உள்ளன.
பெர்சியாரான் சூரியன் சாலைக்கு இணையாக இயங்கும் ஜாலான் PJU 5/8 எனும் சாலையில் இருந்தும் நுழைவாயில் B-ஐ அணுகலாம். நுழைவாயில் B; அதன் பக்கவாட்டில் உள்ள சன்வே நெக்சிஸ் வணிக வளாகத்துடன் இணைகிறது.
பெர்சியாரான் சூரியனின் தெற்கே துரோபிக்கானா கார்ப்பரேசன் பெர்ஹாட்டின் 17 ஏக்கர் கலப்பு மேம்பாடான டிராபிகானா கார்டன்சுடன் நிலையத்தின் நுழைவாயில் A-ஐ இணைக்க மற்றோர் உயரமான பாதசாரி இணைப்புப் பாதையும் கட்டப்பட்டுள்ளது.
பெர்சியாரான் சூரியனில் உள்ள இரு நுழைவாயில்களிலும் ஊட்டி பேருந்து நிறுத்தங்கள், வாடகைக்கார்கள் நிறுத்துமிடம் மற்றும் பயணிகளை இறக்கிவிடும் பகுதிகள் உள்ளன.
வரலாறு
நிலையத்தின் பெயர் இறுதியாக உறுதி செய்யப்படுவதற்கு முன்பு, இந்த நிலையத்திற்கு அருகே இருந்த டாத்தாரான் சன்வே வணிகப் பகுதியின் பெயரில், டாத்தாரான் சன்வே எம்ஆர்டி நிலையம் (Dataran Sunway MRT Station) என்ற செயல்பாட்டுப் பெயர் வைக்கப்பட்டது.[2]
Remove ads
பேருந்து சேவைகள்
பிற பேருந்துகள்
காட்சியகம்
சூரியன் எம்ஆர்டி நிலையம் (2022)
- PJU 5/8, டாத்தாரான் சன்வே
- பெர்சியாரான் சூரியன்
- நுழைவாயில் B
- நடைமேடை 1
- கோத்தா டாமன்சாரா நிலையத்திற்கான தண்டவாளங்கள்
சன்வே நெக்சிஸ்-சூரியன் எம்ஆர்டி நிலைய இணைப்புப் பாலம்
- பாதசாரி இணைப்பு பாலம்; நுழைவாயில் B
- சன்வே நெக்சிஸ் பாதசாரி இணைப்புப் பாலம்
- சன்வே நெக்சிஸ் பாதசாரி இணைப்புப் பாலம் 2
- சன்வே நெக்சிஸ் அறிவிப்புப் பலகை
இணைப்பு வழிகள்
- நுழைவாயில்கள் B; C வெளியேறும் வழி
- கட்டண வளாகத்திற்கான இணைப்புவழி
- குவாசா டாமன்சாராவிற்குச் செல்லும் தளத்திற்கான மின்தூக்கி
- குவாசா டாமன்சாராவிற்குச் செல்லும் தளத்திற்கான நகரும் படிக்கட்டுகள்
- நிலைய இருப்பிட வரைபடம் (வலது); மற்றும் நகரும் படிக்கட்டுகள் (இடது)
- கட்டண வளாகத்தில் இருந்து வெளியேறும் வழி
- இணைப்பு வழியில் கட்டண இயந்திரம்
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads