சோன்பத்ரா மாவட்டம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சோன்பத்ரா மாவட்டம்map
Remove ads

24°41′23″N 83°3′55″E

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...

சோன்பத்ரா மாவட்டம் (Sonbhadra or Sonebhadra) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் சோன்பத்திரா ஆகும். இது மிர்சாபூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. 6788 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம், உத்தரப் பிரதேச மாநிலத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டம் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பிகார் மாநிலங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

Remove ads

அமைவிடம்

விந்திய மலைத்தொடர் மற்றும் கைமூர் மலைகளுக்கு இடையே சோன்பத்ரா மாவட்டம் அமைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் வடமேற்கில் மிர்சாபூர் மாவட்டம், வடக்கில் சந்தௌலி மாவட்டம், வடகிழக்கில் பிகார் மாநிலத்தின் கைமூர் மாவட்டம் மற்றும் ரோத்தாஸ் மாவட்டம், கிழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தின் காட்வா மாவட்டம், தெற்கில் சத்தீஸ்கர் மாநிலத்தின் கோரியா மாவட்டம் மற்றும் சர்குஜா மாவட்டம் மற்றும் மேற்கில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிங்கரௌலி மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

Remove ads

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் இராபர்ட்ஸ்கஞ்ச், கோராவால், துத்தி, ஓப்ரா என 4 வருவாய் வட்டங்களையும், இராபர்ட்கஞ்ச், கோராவால், ஓப்ரா மற்றும் துத்தி என 4 சட்டமன்றத் தொகுதிகளையும்; இராபர்ட்சுகஞ்ச் மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

அலுமினியம், சுண்ணாம்புக்கற்கள், நிலக்கரி போன்ற கனிமச் சுரங்கங்கள் மிகுந்து உள்ளதால், இம்மாவட்டத்தில் அனல் மின் நிலையங்கள், அலுமினியம், சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது.

புவியியல்

விந்திய மலைத்தொடர்களுக்கும் கைமூர் மலைகளுக்கும் இடையே அமைந்த இம்மாவட்டத்தின், மேற்கிலிருந்து கிழக்காக சோன் ஆறு பாய்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா மாவட்டத்திலிருந்து பாயும் ரிகண்ட் ஆறு சோன் ஆற்றில் கலக்கிறது.

போக்குவரத்து

கன்னியாகுமரி - வாரணாசி நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 மற்றும் குவாலியர் - ஒரிசாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 75 இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது.

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மக்கள்தொகை 1,862,559 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 971,344 ஆகவும்; பெண்கள் 891,215 ஆகவும் உள்ளனர். [1] 6788 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை அடர்த்தி 270 ஆகும். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 27.27% ஆக உயர்ந்துள்ளது.[1]மக்கள்தொகையில் பட்டியல் சமூக மக்கள் 22.6% ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் 20.7% ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 323,092 ஆக உள்ளது. மாவட்டத்தின் சராசரி எழுத்தறிவு 64% ஆகவும்; ஆண்களின் எழுத்தறிவு 74.92% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 52.14% ஆகவும் உள்ளது.

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவர்கள் 93.5% ஆகவும்; இசுலாமிய சமயத்தவர்கள் 6% ஆகவும் உள்ளனர். பிற சமயத்தவர்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளனர்.

மொழிகள்

உத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார பழங்குடியின மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads