ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் (The Johns Hopkins University) அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் பால்ட்டிமோர் நகரில் உள்ளது. இது உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. இதன் வளாகங்கள் மேரிலேண்டிலும் வாசிங்டனிலும் உள்ளன. இவை தவிர, இத்தாலி, சீனா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் மையங்களைக் கொண்டுள்ளது.[4]
Remove ads
அமைப்பு
பல்கலைக்கழகத்தை அறக்கட்டளையினர் மேற்பார்வையிடுகின்றனர். அறக்கட்டளை ஒரு குழுவை நியமிக்கும். மொத்தமாக அதிகபட்சம் 65 உறுப்பினர்கள் இருக்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஏழாண்டு காலம் குழுவில் நீடிப்பர். முன்னாள் மாணவர்கள் 12 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர்.
வளாகங்கள்
Remove ads
நூலகம்
இந்த பல்கலைக்கழகத்தில் 36 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன.
மாணவர்கள்
இளநிலைப் பிரிவுகளில் சேர விண்ணப்பித்தோரையும், அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டோரையும் பற்றிய விவரத்தைக் காணவும்.
விளையாட்டு
இந்த பல்கலைக்கழகத்தின் விளையாட்டுக் குழுக்களுக்கு புளூ ஜேஸ் என்ற பெயர் உண்டு. இவர்கள் என்.சி.ஏ.ஏ. போட்டிகளின் டிவிசன் 1, டிவிசன் 3 பிரிவுகளில் போட்டியிடுகின்றனர்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
இந்த பல்கலைக்கழகத்தில் படித்த பலர் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர். 37 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads


