டாமன்சாரா அயிட்ஸ்
கோலாலம்பூர் பிரதேசத்தில் உள்ள புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
டாமன்சாரா அயிட்ஸ் அல்லது புக்கிட் டாமன்சாரா, (ஆங்கிலம்: Damansara Heights; மலாய்: Bukit Damansara; சீனம்: 白沙罗高原); என்பது மலேசியா, கோலாலம்பூர், சிகாம்புட் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஓர் உயர்ரக புறநகர்ப் பகுதி ஆகும். கோலாலம்பூர் பெருநகர மையத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்தப் புறநகர்ப் பகுதி சிகாம்புட் மாவட்டம் மற்றும் அதன் சிகாம்புட் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இந்த இடம் கிள்ளான் பள்ளத்தாக்கில் மிகவும் விரும்பப்படும் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாகும்.
Remove ads
பின்னணி
கோலாலம்பூர் மற்றும் பெட்டாலிங் ஜெயாவிலிருந்து டாமன்சாரா அயிட்ஸ் புறநகர்ப் பகுதியை அணுகலாம். பங்சாரில் உள்ள ஜாலான் மாரோப் (Jalan Maarof) எனும் முக்கிய சாலை; ஜாலான் டாமன்சாரா (Jalan Damansara) எனும் டாமன்சாரா சாலையை இணைக்கிறது. மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் இருந்து டாமன்சாரா அயிட்ஸ் பகுதிக்குள் செலல் ஜாலான் டூத்தா (Jalan Duta) மற்றும் ஜாலான் செமந்தான் (Jalan Semantan) சாலைகளைப் பயன்படுத்தப்படலாம். மலேசியாவில் சாலைகளை ஜாலான் (Jalan) என்று அழைப்பது பொதுவான வழக்கமாகும்.
இரண்டு மாடி இணைப்பு வீடுகளைக் கொண்ட மேடான் டாமன்சாரா சுற்றுப்புறம் 1972-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புத் திட்டமாகத் தொடங்கப்பட்டது. இந்த உறைவிடப் பகுதியில் கல்லூரிகள், பெரிய பன்னாட்டு நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் அரசுத் துறைகள் உள்ளன.[2]
டாமன்சாரா அயிட்ஸ் பகுதியில் கட்டப்பட்ட முதல் அலுவலகக் கட்டிடம் விஸ்மா டாமன்சாரா ஆகும். இது 1970-ஆம் ஆண்டு சிலாங்கூர் சொத்துடைமை நிறுவனத்தால் (Selangor Properties) கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து டுங்குன் சாலையில் உள்ள டாமன்சாரா அலுவலக வளாகம் கட்டப்பட்டது. அந்தக் கட்டத்தில் உள்ளூர் பங்குச் சந்தையான மலேசிய பங்குச் சந்தையும் அங்கு இருந்தது.
Remove ads
போக்குவரத்து
பொது போக்குவரத்து
டாமன்சாரா அயிட்ஸ் புறநகர்ப்பகுதி 9 காஜாங் வழித்தடத்தின் இரண்டு நிலையங்களால் சேவை செய்யப்படுகிறது:
- KG13 பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
- KG14 செமந்தான் எம்ஆர்டி நிலையம்
ஊர்தி
இசுபிரிண்ட் விரைவுச்சாலை
, வடகிழக்கு-தென்மேற்கு திசையில் டாமன்சாரா அயிட்ஸ் புறநகர்ப்பகுதி வழியாகச் செல்கிறது.
மேலும் காண்க
- புக்கிட் கியாரா
- டாமன்சாரா
- டாமன்சாரா பெர்டானா
- செரி அர்த்தாமாஸ்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads