தஞ்சோங் குப்பாங்
இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தஞ்சோங் குப்பாங் (மலாய்: Tanjung Kupang; ஆங்கிலம்: Tanjung Kupang) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிம்; ஒரு நகர்ப்புறம் ஆகும்.
மாநிலத் தலைநகர் ஜொகூர் பாருவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
Remove ads
மலேசியா எயர்லைன்சு விமான விபத்து

1977 டிசம்பர் 4-ஆம் தேதி இந்தக் தஞ்சோங் குப்பாங்கில் ஒரு விமான விபத்து நடந்தது. மலேசியா எயர்லைன்சு 653 விமான விபத்து (Malaysian Airline System Flight 653) என்று பெயர் வழங்கப்பட்டு உள்ளது.[1]
கடத்தப்பட்ட அந்த விமானம் தஞ்சோங் குப்பாங், கம்போங் லாடாங் (Kampong Ladang) எனும் கிராமத்திற்கு அருகே விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் பயணித்த 93 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களும் இறந்தனர். அடையாளம் காணக்கூடிய உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை.[2]
இருப்பினும் கிடைக்கப் பெற்ற உடலின் எச்சங்கள் ஜொகூர் பாரு, ஜாலான் கெபுன் தே (Jalan Kebun Teh) எனும் இடத்தில், பொதுவான ஒரு கல்லறையில் புதைக்கப்பட்டன. அந்தக் கல்லறைக்குத் தஞ்சோங் குப்பாங் நினைவகம் (Tanjung Kupang Memorial) என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.[3]
Remove ads
மலேசியா சிங்கப்பூர் இரண்டாவது பாலம்
மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம் இங்குதான் உள்ளது. ஜொகூர், தஞ்சோங் குப்பாங் பகுதியையும்; சிங்கப்பூர், துவாஸ், அகமது இப்ராகிம் சாலையையும் இணைக்கின்றது.
மலேசியப் பகுதியில் இந்தப் பாலம், இரண்டாவது இணைப்பு விரைவுச் சாலையுடன் (Second Link Expressway E3); இணைக்கப் படுகிறது. சிங்கப்பூர்ப் பகுதியில் ஆயர் ராஜா விரைவுச் சாலையுடன் இணைகிறது.
இரட்டை அடுக்குப் பாலம்
மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்தின் (Johor–Singapore Causeway) போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது. சிங்கப்பூரின் அப்போதைய பிரதமர் கோ சொக் தோங்; மலேசியாவின் அப்போதைய பிரதமர் மகாதீர் பின் முகமது; ஆகியோரால் அதிகாரப் பூர்வமாக இந்தப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.[4]
இந்த இரட்டை அடுக்குப் பாலம் இரு பக்க மூன்று வழித்தடப் பாதைகளைக் கொண்டது. கடலுக்கு மேல் அதன் மொத்த நீளம் 1,920 மீ.
பாலம் தொடர்பான விவரக் குறிப்புகள்
- பாலத்தின் ஒட்டுமொத்த நீளம் (Overall length of bridge): 1,920 மீட்டர்கள் (6,300 அடி)
- மலேசியக் கடல் எல்லைக்குள் (Length within Malaysian waters): 1,769 மீட்டர்கள் (5,804 அடி)
- கட்டுமானக் காலம் (Construction period): அக்டோபர் 1994 முதல் அக்டோபர் 1997 வரை
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads