தித்திவங்சா நிலையம்

கோலாலம்பூர், செந்தூல், மாற்றுவழிப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

தித்திவங்சா நிலையம்map
Remove ads

தித்திவங்சா நிலையம் அல்லது தித்திவங்சா விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Titiwangsa Station; மலாய்: Stesen Titiwangsa; சீனம்: 蒂蒂旺沙站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செந்தூல் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாற்றுவழிப் போக்குவரத்து (Interchange station) நிலையமாகும்.

விரைவான உண்மைகள் AG3 SP3 MR11 PY17 CC13 தித்திவங்சா, பொது தகவல்கள் ...

இந்த நிலையத்திற்கு அம்பாங் வழித்தடம், செரி பெட்டாலிங் வழித்தடம், கோலாலம்பூர் மோனோரெயில், புத்ராஜெயா வழித்தடம் ஆகிய 4 வழித்தடங்கள் சேவை செய்கின்றன.

அந்த நான்கு தொடருந்து வழித்தடங்களுக்கும் இடையே ஒரு தடையற்ற கட்டண ஒருங்கிணைப்பை இந்த நிலையம் அனுமதிக்கிறது.

Remove ads

பொது

தித்திவங்சா துணை மாவட்டத்தின் துன் ரசாக் சாலையில் (Jalan Tun Razak); கோம்பாக் ஆற்றின் மருங்கில் இந்த நிலையம் அமைந்துள்ளது. மற்றும் இந்த நிலையத்திற்கு அருகில் தித்திவாங்சா சென்ட்ரல் என்று அழைக்கப்படும் தித்திவாங்சா பேருந்து நிலையமும் உள்ளது.

இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று முன்பு அழைக்கப்பட்ட வழித்தட அமைப்பின், இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 1998-இல், இந்த நிலையம் முதன்முதலில் திறக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில், தித்திவங்சா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இந்த நிலையத்தை இணைப்பதே முதன்மை நோக்கமாக இருந்தது.

துன் ரசாக் நிலையம்

இஸ்டார் வழித்தட அமைப்பின் 2-ஆம் கட்டத்தின் கீழ், கோலாலம்பூரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்குச் சேவை செய்ய 11 நிலையங்களைக் கொண்ட 15 கி.மீ. தொடருந்து பாதை அமைக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் தித்திவங்சா நிலையத்திற்கு துன் ரசாக் நிலையம் என்று பெயரிடப்பட்டது.[2]

Remove ads

இலகு விரைவுப் போக்குவரத்து

தித்திவாங்சா எல்ஆர்டி நிலையம் என்பது அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடம் எனும் இரு வழித்தடங்களின் வழியாக தெற்கே அம்பாங் எல்ஆர்டி நிலையம், புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் ஆகிய நிலையங்களுக்கும்; வடக்கே செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் நோக்கிச் செல்லும் தொடருந்துகளுக்கான ஓர் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையமாகச் சேவை செய்கிறது.

முன்னாள் இஸ்டார் வழித்தடத்தின் இரண்டாம் கட்ட வளர்ச்சியின் ஒரு பகுதியாக, 1998-இல் திறக்கப்பட்ட இந்த நிலையம், தித்திவாங்சா நகர்ப் பகுதிகள்; மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள்; ஆகியவற்றை ஒன்றோடு ஒன்றாக இணைப்பதை முதனமை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வசதிகள்

இலகு விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களின் வடக்குப் பகுதியில் உள்ள அனைத்து நிலையங்களையும் போலவே இந்த நிலையமும் உயரத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேல் தளத்தில் இயங்குதளங்கள் உள்ளன. நடு தளத்தில் பயணச்சீட்டு தானியங்கிகள், பொருட்கள் வைக்குமிடம்; பயணத்திற்காகக் காத்திருக்கும் வசதிகள் உள்ளன.

Remove ads

பேருந்து சேவை

தித்திவங்சா நிலையத்திற்கு வடக்கே கோம்பாக் ஆற்றுப் பகுதியில், பெக்கெலிலிங் பேருந்து நிலையம் (Pekeliling Bus Station) என்று அழைக்கப்படும் ஒரு பேருந்து மையம் உள்ளது; பேருந்து மையத்தைச் சுற்றிலும் பயணிகளுக்கு நிழல் தரும் கூடங்களும் உள்ளன. இந்த நிலையம் பல உள்ளூர்ப் பேருந்து சேவைகளை வழங்குகிறது. முதன்மையாக, ரேபிட் பேருந்து மற்றும் கோ கேஎல் நகர பேருந்துகள் சேவையில் உள்ளன.

மேற்கு பகாங்கில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து நகரங்களுக்கு இடையிலான பேருந்துச் சேவைகள் உள்ளன. பகாங் மாநிலத்தின் கெந்திங் மலை (ஏரோபஸ்), பெந்தோங் (மாரா லைனர், சென்ட்ரல் பகாங், பகாங் லின் சியோங் பேருந்துகள்), ரவுப், கோலா லிப்பிஸ், கேமரன் மலை, ஜெராண்டுட், தெமர்லோ, திரியாங் நகரங்களுக்கும் சேவைகள் வழங்கப்படுகின்றன.

மேலதிகத் தகவல்கள் எண், முனையம் ...

காட்சியகம்

தித்திவங்சா நிலையக் காட்சிப் படங்கள்:

நிலையச் சுற்றுப்புறம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads