தும்பாட் மாவட்டம்
மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தும்பாட் மாவட்டம் (மலாய் மொழி: Jajahan Tumpat; கிளாந்தான் மலாய் மொழி: Ttupak; ஆங்கிலம்: Tumpat District; தாய் மொழி: ตุมปัต; சீனம்: 道北县; ஜாவி: تومڤت ) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் வடக்குப் பகுதியில், தாய்லாந்து நாட்டிற்கு அருகில் உள்ள ஒரு மாவட்டம்.
தும்பாட் நகரம் கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாரு நகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் (East Coast Line (Malaysia) இறுதி முனையில் அமைந்துள்ளது. இந்த மலேசியக் கிழக்கு கடற்கரைதொடருந்துச் சேவை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கிம்மாஸ் நகரில் தொடங்குகிறது.
Remove ads
பொது
தும்பாட் நகரம் தாய்லாந்து எல்லையில் கிளாந்தான் மாநிலத்தின் வடக்கில் உள்ளது. இந்த நகரத்தின் மேற்கில் கோலோக் ஆறு; கிழக்கில் கிளாந்தான் ஆறு; தெற்கில் பாசீர் மாஸ், கோத்தா பாரு; மேற்கில் தாய்லாந்து தாக் பாய் மாவட்டம் (Tak Bai District) ஆகியவை உள்ளன.
மக்கள் தொகையியல்
2022-ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, தும்பாட் மாவட்டத்தின் மக்கள்தொகை ஏறக்குறைய 183,100. பெரும்பான்மையான மக்கள் மலேசிய மலாயர் ஆவர். குறிப்பிடத்தக்க அளவில் மலேசிய சயாமியர் (Malaysian Siamese); மலேசிய இந்தியர் மற்றும் மலேசிய சீனர் வாழ்கின்றனர்.
Remove ads
சுற்றுலா

தும்பாட் நகரம், தாய்லாந்து நாட்டிற்கு மிக அருகில் இருப்பதால் அந்த நாட்டின் தாக்கங்கள் அதிகமாக உள்ளன. அந்த வகையில் தும்பாட் மாவட்டத்தில் பல பௌத்த ஆலயங்கள் உள்ளன.
- மச்சிமாரம் - Wat Machimmaram
- வாட் பிரசும்தாட் சனராம் - Wat Prachumthat Canaram
- வாட் பிக்குல்தோங் வரராம் - Wat Phikulthong Vararam
- வாட் போதிவிகான் - Wat Phothivihan
- பந்தாய் ஸ்ரீ தூஜோ - Pantai Sri Tujuh
- பந்தாய் சூரி - Pantai Suri
- பந்தாய் கெத்திங் - Pantai Geting
அரசியல்
Remove ads
தும்பாட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
Remove ads
காலநிலை
தும்பாட் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் மிதமான மழையும், மீதமுள்ள மாதங்களில் கனமழையும் பொழிகின்றது.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads