நாம் இருவர் நமக்கு இருவர் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாம் இருவர் நமக்கு இருவர் என்பது விஜய் தொலைக்காட்சியில் 26 மார்ச்சு 2018 முதல் 10 சூன் 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இதன் முதல் பருவம் 29 மார்ச் 2018 முதல் 27 மார்ச் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 579 அத்தியாயங்களுடன் கொரோனா வைரசு தொற்று நோய்காரணமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது . இந்த பருவத்தில் செந்தில் குமார் என்பவர் அண்ணன், தம்பியாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் இவர்களுக்கு ஜோடியாக 'ரக்ஷா' மற்றும் 'ரேஷ்மி' ஆகியோர் நடித்துள்ளார்கள்.[1][2]
இதன் இரண்டாம் பருவத்தில் செந்தில் குமார் என்பவர் 'மாயன்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக மோனிஷா அர்ஷக் என்பவர் 'மகாலட்சுமி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த தொடர் 27 ஜூலை 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி 10 சூன் 2022 அன்று 476 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
தொடரின் பருவங்கள்
பருவங்கள்
பருவம் 1
முதன்மை கதாபாத்திரம்
- செந்தில் குமார் - அரவிந்த்/மாயன்
- மும்பையில் பிரபல டாக்டராக இருக்கிறான்.மாயனின் தம்பி
- வேலைக்கும் போகாமல் மரத்தடி பஞ்சாயத்து, வம்பு சண்டை, என்று அலப்பறை செய்து கொண்டிருக்கிறான்.
- ரக்க்ஷா ஹொல்லா - தேவி மாயன்
- திமிர் பிடித்த, படித்த பணக்காரப் பொண்ணு.
- ரெஸ்மி ஜெயராஜ்- தாமரை அரவிந்த்
- அமைதியான வெள்ளந்தி பொண்ணு.
துணைக் கதாபாத்திரம்
- அழகு - ரத்னவேல் (மாயன் மற்றும் அரவிந்தின் தந்தை)
- ஜெயந்தி - செல்வி ரத்னவேல் (மாயன் மற்றும் அரவிந்தின் தாய்)
- ரவிராஜ் - விஸ்வநாதன் (அரவிந்தின் வளர்ப்பு தந்தை)
- சபிதா ஆணந்த் - கௌரி விஸ்வநாதன் (அரவிந்தின் வளர்ப்பு தாய்)
- மது மோகன் - சந்தணபாண்டி
- தீபா நித்ரான் - வள்ளி சந்தணபாண்டி (தேவியின் அம்மா)
- பிரேமி வெங்கட் - பார்வதி சந்தணபாண்டி
- கல்பனா ஸ்ரீ - மலர்
- மதன் - சக்திவேல்
- வனிதா ஹரிஹரன் - ஆனந்தி
- அஷ்ரிதா ஸ்ரீதாஸ் - வித்யா சந்தணபாண்டி (தேவியின் சகோதரி)
- டி. வி. வி ராமானுஜம் - -- (தேவி மற்றும் வித்யாவின் தாத்தா)
- பி. எஸ். சித்ரா - சித்ரா
- அன்பழகன் - ஆவுடையப்பன்
- டீனு - கஜலட்சுமி (காவல் ஆய்வாளர்)
- சுமங்கலி - சாமுண்டேஷ்வரி
- "மைனா" நந்தினி - ரோஸ் மேரி
- ஆர்.ஜே. சிவகாந்த் - ரைட்
- யோகேஷ் - லெஃப்ட்
- பார்த்திபன் - லிங்கம் (தேவியின் மாமா)
- ரேகா - தேனு லிங்கம்
- சீனியம்மா - கிழவி (தேவி மற்றும் வித்யாவின் பாட்டி)
- ஈஸ்வர் - அர்ஜுன் (அரவிந்தின் நண்பன்)
- தீபா - ஸ்வர்ணம்
- மகலட்சுமி
பருவம் 2
முதன்மை கதாபாத்திரம்
- செந்தில் குமார் - மாயன்/மாறன்
- ரச்சித்தா மகாலட்சுமி (2020-2021) → மோனிஷா அர்ஷக் (2021-) - மகாலட்சுமி மாயன்
துணைக் கதாபாத்திரம்
- சிவன் ஸ்ரீனிவாசன் - ராஜரத்னம் (தொடரில் இறந்து விட்டார்)
- காயத்ரி யுவராஜ் - காயத்ரி கதிரேசன்
- ஜனனி - சரண்யா ராஜரத்தினம்
- வைஷ்ணவி அருள்மொழி - ஐஸ்வர்யா முத்துராஜ்
- சபிதா ஆனந்த் - நாச்சியார் ராஜரத்தினம்
- பார்த்திபன் சந்திரன் - ரத்தினவேல்
- தீபா நேத்ரன் - பார்வதி ரத்தினவேல்
- அஷ்ரிதா ஸ்ரீதாஸ்- கஸ்தூரி ரத்தினவேல்
- ராஜு ஜெயமோகன் - கதிரேசன்
- டேவிட் சாலமன் - சிதம்பரம்
- தீபா - வடிவு
- சத்யா - முத்துராஜ்
- பார்த்திபன் - மாசாணி
- கார்த்திக் - பாண்டி
- நவீன் வெற்றி - சூர்யா
Remove ads
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
மறு ஆக்கம் (பருவம் 1)
- கன்னடம்
- இந்த தொடர் கன்னட மொழியில் ஆர்த்திகோபா கீர்த்திகோபா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு டிசம்பர் 23, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஸ்டார் சுவர்ணா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தமிழில் அரவிந்த் மற்றும் மாயன் நடித்த கதாபாத்திரத்தில் தேஜஸ் கவுடா என்பவர் அஜய் மற்றும் விஜய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் தமிழில் கல்யாணமாம் கல்யாணம் என்ற தொடரில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மராத்தி
- மராத்தி மொழியில் இந்த தொடர் 'பிரேமச்சா கேம் செம் 2 செம்' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யபப்ட்டு ஸ்டார் பிரவா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
Remove ads
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் விஜய் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் ((ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஹாட் ஸ்டார் என்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads