பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையம்

மலேசியா, சிலாங்கூர், பண்டார் உத்தாமா விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையம்map
Remove ads

பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Bandar Utama MRT Station; மலாய்: Stesen MRT Bandar Utama) என்பது மலேசியா, சிலாங்கூர், பண்டார் உத்தாமா நகர்ப்பகுதிக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும். இந்த நிலையம் எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தில் அமைந்துள்ளது.[1]

விரைவான உண்மைகள் KG09 SA01 பண்டார் உத்தாமா, பொது தகவல்கள் ...
Thumb
நிலையத்தின் ஒருங்கிணைவு பக்கதளம்

இந்த நிலையம் பண்டார் உத்தாமா நகர்ப்பகுதி; மற்றும் டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையின் இரு மருங்கிலும் அமைந்துள்ள தாமான் துன் டாக்டர் இசுமாயில் குடியிருப்பு பகுதிக்கும் சேவை செய்கிறது. இந்த நிலையம் 2016 டிசம்பர் 16 அன்று எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தின் முதல் கட்ட நடவடிக்கைகளின் கீழ் திறக்கப்பட்டது.[2]

இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கின் மிகப்பெரிய வணிக வளாகங்களில் ஒன்றான 1 உத்தாமா வணிக வளாகத்திற்கு (1 Utama Shopping Centre) அடுத்து அமைந்துள்ளது.[3] நிலையத்திற்கு அருகிலுள்ள பிற பிரபலமான அடையாளங்கள் செரி பெந்தாஸ் (Sri Pentas) (மீடியா பிரைமாவுக்குச் சொந்தமான தொலைக்காட்சி சேவைகளின் தலைமையகம்), ஒன் வேர்ல்ட் தங்கும் விடுதி (One World Hotel), பிளாசா ஐபிஎம் (Plaza IBM) மற்றும் கேபிஎம்ஜி கோபுரம் (KPMG Tower) ஆகியவை ஆகும். இவை ஒரு பாதசாரி இணைப்புப் பாலம் வழியாக நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையம் எதிர்கால சா ஆலாம் வழித்தடத்துடன் ஒரு பரிமாற்ற நிலையமாக செயல்படும். இது தற்போது கட்டுமானத்தில் உள்ள ஓர் இலகு விரைவு போக்குவரத்து (LRT) நிலையமாகும், இது பண்டார் உத்தாமா நகர்ப்புறத்தை கிள்ளானில் உள்ள ஜொகான் செத்தியா எல்ஆர்டி நிலையத்துடன் இணைக்கும்.[4]

Remove ads

நிலைய அம்சங்கள்

இந்த நிலையம் பண்டார் உத்தாமாவில் உள்ள செரி பெந்தாஸ் கட்டிடத்திற்கு நேர் பின்னால் டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலைக்கு (LDP) அருகில் அமைந்துள்ளது. நிலையத்தின் ஆதரவு தூண்கள் டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலைக்கும்; விரைவுச்சாலைக்கு இணையாக இயங்கும் நீர் கால்வாய்க்கும் இடையில் அமைந்துள்ளன.

காஜாங் வழித்தடத்திற்கான உயர்த்தப்பட்ட நிலைய வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த நிலையம், இரண்டு ஒருங்கிணைவு பக்க தளங்களுக்கு (Concourse Level) மேலே உள்ளது. இருப்பினும், மற்ற உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போலல்லாமல், நிலையத்தை நேரடியாக தரை மட்டத்துடன் இணைக்கும் நகரும் படிகள், மின்தூக்கிகள் அல்லது படிக்கட்டுகள் இல்லை. மேலும் நிலையத்திற்கு நேர் கீழே தரை மட்டத்தில் பேருந்துகள், டாக்சிகள் மற்றும் சீருந்துகளுக்கான எந்த இடவசதியும் இல்லை.

நிலைய அமைப்பு

L2 நடைமேடை தளம் பக்க நடைமேடை
நடைமேடை 1 9  காஜாங்  (→) காஜாங்  KG35  (→)
நடைமேடை 2 9  காஜாங்  (←) குவாசா டாமன்சாரா  KG04  (←)
பக்க நடைமேடை
L1 இணைப்புவழி கட்டணப் பகுதிக்கான நுழைவாயில்கள், நடைமேடைகளுக்கான நகரும் படிக்கட்டுகள், கட்டண இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள்
G தரை தளம் அவசர சேவைகளுக்காக வாகனங்கள் நிறுத்துமிடம்
Remove ads

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

மேலதிகத் தகவல்கள் நுழைவாயில், இடம் ...
Remove ads

பேருந்து சேவைகள்

மேலதிகத் தகவல்கள் பேருந்து, தொடக்கம் ...

பிற பேருந்துகள்

மேலதிகத் தகவல்கள் பேருந்து, தொடக்கம் ...

காட்சியகம்

பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையம்

நுழைவாயில் A, பேருந்து வாகன நிறுத்துமிடம்

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads