பண்டார் புக்கிட் திங்கி

சிலாங்கூர், கிள்ளான் மாவட்டத்தில் ஒரு நவீன நகரம் From Wikipedia, the free encyclopedia

பண்டார் புக்கிட் திங்கி
Remove ads

பண்டார் புக்கிட் திங்கி (மலாய்; ஆங்கிலம்: Bandar Bukit Tinggi; சீனம்: 武吉丁宜市; என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டத்தில் RM 5 பில்லியன் (US$1.6 பில்லியன்) செலவில்; பரந்த அளவிலான வசதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நவீன நகரமாகும்.

விரைவான உண்மைகள் பண்டார் புக்கிட் திங்கி, நாடு ...

பந்தர் புக்கிட் திங்கி, பல்வேறு வகையான இரட்டை மாடி மனைகள்; ஓரடுக்கு மனைகள்; சொகுசு மனைகள்; நடுத்தர விலை அடுக்குமாடி மனைகள்; அடுக்குமாடி வீட்டுத்தொகுதிகள் உட்பட 20,000-க்கும் மேற்பட்ட வீட்டுத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2] இந்த நகரம் 1997-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

புக்கிட் திங்கியின் 3 முக்கிய வளர்ச்சிப் பகுதிகள்:

  • புக்கிட் திங்கி 1 (BT1)
  • புக்கிட் திங்கி 2 (BT2)
  • புக்கிட் திங்கி 3 (Klang Parklands)

புக்கிட் திங்கிக்கு அருகில் பொட்டானிக் கிளாங் (Botanic Klang), கிளென்மேரி கோவ் (Glenmarie Cove), பண்டார் புத்திரி கிளாங் (Bandar Puteri Klang)[3], கோத்தா பாயுமாஸ் (Kota Bayuemas) மற்றும் பண்டார் பெஸ்தாரி (Bandar Bestari) போன்ற நவீன நகரங்கள் உள்ளன.

Remove ads

அரசியல்

மலேசிய மக்களவையில்; (P111) கோத்தா ராஜா மக்களவைத் தொகுதியில் பண்டார் புக்கிட் திங்கி பிரதிநிதிக்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு தொடங்கி மண்புமிகு டத்தோ முகமது சாபு என்பவர் மக்களவை உறுப்பினராக உள்ளார். இவர் அமானா கட்சியின் தலைவரும் ஆவார்.[4]

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில், 2018 முதல் (N48) செந்தோசா சட்டமன்ற உறுப்பினராக குணராஜா ஜார்ஜ் (Gunarajah George) என்பவர் உள்ளார். பண்டார் புக்கிட் திங்கி நகர்ப்பகுதி, கிள்ளான் அரச நகராட்சியின் (Majlis Bandaraya Diraja Klang) அதிகார வரம்பிற்குள் வருகிறது.[5]

Remove ads

போக்குவரத்து

பண்டார் புக்கிட் திங்கி, கோலாலம்பூருக்கு மேற்கே 50 கி.மீ தொலைவிலும், பெட்டாலிங் ஜெயாவிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நவீன நகரம் முக்கிய நெடுஞ்சாலைகள் வழியாக அணுகக்கூடியது. அவற்றில் மிக அருகில் இருப்பது சா ஆலாம் விரைவுச்சாலை; அடுத்ததாக உள்ளது மேற்கு கடற்கரை விரைவுச்சாலை (West Coast Expressway).

புக்கிட் திங்கியில் இருந்து கிள்ளான் நகர மையம், கோலாலம்பூர், பந்திங் நகரங்கள் மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு நேரடி பேருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன.

புக்கிட் திங்கி 11  சா ஆலாம் வழித்தடம்  வழியாக இணைக்கப்பட்டுள்ளது; 2 உயர்த்தப்பட்ட எல்ஆர்டி நிலையங்களைக் கொண்டுள்ளது

  •  SA23  கிள்ளான் ஜெயா எல்ஆர்டி நிலையம்
  •  SA24  பண்டார் புக்கிட் திங்கி எல்ஆர்டி நிலையம்

கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் கீழ் RM 9 பில்லியன் செலவில் 11 சா ஆலாம் வழித்தடம் கட்டப்பட்டது.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads