பென்சியாங்கான் மக்களவைத் தொகுதி
மலேசிய மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பென்சியாங்கான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pensiangan; ஆங்கிலம்: Pensiangan Federal Constituency; சீனம்: 联邦选区除草) என்பது மலேசியா, சபா, உட்பகுதி பிரிவு; நாபாவான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P182) ஆகும்.[5]
பென்சியாங்கான் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து பென்சியாங்கான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
Remove ads
நாபாவான் மாவட்டம்
நாபாவான் மாவட்டம் என்பது சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் நாபாவான் நகரம். பென்சியாங்கான் மாவட்டம் (Pensiangan District) என முன்பு அறியப்பட்ட இந்த மாவட்டம் 2004-ஆம் ஆண்டில் நாபாவான் மாவட்டம் என்று மறுபெயரிடப்பட்டது.[7]
நாபாவான் மாவட்ட நிர்வாகத்தின் வரலாறு 1957-ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில்தான் நாபாவானில் இருந்து தெற்கே 114 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்சியாங்கானில், நாபாவான் மாவட்டத்திற்குச் சொந்தமான மாவட்ட அலுவலகம் கிடைத்தது.
பென்சியாங்கான் மாவட்டம்
அந்தக் காலக் கட்டத்தில், பென்சியாங்கான் பகுதியில் சாலைகள் இல்லாததால், படகு அல்லது குதிரை மூலம் மட்டுமே போக்குவரத்துகள் இருந்தன. எனவே பென்சியாங்கான் மாவட்ட அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்ய குதிரைகளில் சென்றனர்.
1957-ஆம் ஆண்டின் தொடக்கக் காலத்தில் முதல் மாவட்ட அதிகாரியாக ஐ.சி. பெக் (I.C. Peck) என்பவர் நியமிக்கப்பட்டார். 1974-ஆம் ஆண்டில், நாபாவான் மாவட்ட அலுவலகத்தின் நிர்வாகம், புதிதாக நிறுவப்பட்ட அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.
Remove ads
பென்சியாங்கான் மக்களவைத் தொகுதி
பென்சியாங்கான் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8]
இதர இனத்தவர் (2.9%)
பென்சியாங்கான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)
ஆண் (49.95%)
பெண் (50.05%)
பென்சியாங்கான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)
18-20 (7.64%)
21-29 (22.33%)
30-39 (23.74%)
40-49 (16.85%)
50-59 (13.88%)
60-69 (9.22%)
70-79 (3.36%)
80-89 (1.68%)
+ 90 (1.31%)
Remove ads
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
